ரூ 30 க்கு சுவையான சாப்பாடு, அதுவும் மீன்குழம்புடன்

 ரூ 30 க்கு சுவையான சாப்பாடு, அதுவும் மீன்குழம்புடன் வழங்குகிறார் கோவை தனியார் பள்ளி ஆசிரியை ரோசி.


வெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை டீச்சர்.. சபாஷ்
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பொருளாதார நிலையில் ஆண், பெண் இருவருமே வேலை சென்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இது போல் இருபாலரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சரியான நேரத்தில் சமைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு செல்ல முடியவில்லை.
10 பேருக்கு வேலை
ஆனால் வீட்டிலேயே இருந்து கொண்டு, சொந்தமாக யாரும் கேள்வி கேட்காதவாறு, நாம் 10 பேருக்கு வேலை கொடுக்க முடியும் என்கிறார் கோவை சேர்ந்த இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரோசி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஆரோக்கியமான உணவு
ஆசிரியரான இவர் தான் நடத்தும் குழம்பு கடை குறித்த தகவல்களை கூறுகிறார். அவர் கூறுகையில் தற்போது கொரோனா காலம் என்பதால் பொது மக்களுக்கு மலிவான விலையில் ஆரோக்கியமான உணவு என்ற நோக்கில் நம்ம வீட்டு குழம்பு கடை என்கின்ற ஒரு கடையை நடத்தி வருகிறேன்.
200 கிராம் குழம்பு
இதில் 500 கிராம் சாதம், 200 கிராம் மீன் குழம்பு, 200 கிராம் ரசம் உள்ளிட்டவைகளை 30 ரூபாய்க்கு தரத்துடன் சுவையாக தயாரித்து தருகிறேன். இது பொதுமக்களுக்கு நல்ல பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த விற்பனை எனக்கு மன திருப்தியை அளித்து வருகிறது என தெரிவித்தார்.
சுவை
சுவையாக கல்வி கற்று தருவதிலும் சரி உணவிலும் சுவையான ஆரோக்கியம் தருகிற ரோசி டீச்சரை அனைவரும் பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள். இன்று அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஒரு கரண்டி குழம்பையே அதிக விலைக்கு விற்போர் மத்தியில் ரோசி டீச்சர் தனது கருணையுள்ளத்தாலும் பேராசையின்மையினாலும் தனித்து நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,