மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்ச தீபம்

 கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 29.11.2020

இன்று திருக்கார்த்திகை தீபவிழா நடைபெற்றது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்பட்டது. இதனால் கோயில் வளாகமே அழகுற ஜொலித்தது. சுவாமி சன்னதி முன்புள்ள சித்திரை வீதியிலும், அம்மன் சன்னதியின் சித்திரை வீதியிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளையும், சுவாமியையும் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்று மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில், பேச்சியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,