பள்ளிக்கு இடம் கொடுத்தார்: மக்கள் மனதில் இடம் பிடித்தார்

 

பள்ளிக்கு இடம் கொடுத்தார்:

மக்கள் மனதில் இடம் பிடித்தார்

கோவை: காசு... பணம்... துட்டு... மணி... மணி... இதுதான்இன்றைய வாழ்க்கையின்தேடு பொருளாகி விட்டது. காலில் சக்கரம் கட்டாத குறை தான். காலையில் எழுந்தது துவங்கிஇரவில் துாங்கப் போகும் வரைபணம் தேடும் படலம்இக்காலத்தில் கொஞ்சம் அதிகம்.


இன்றைய வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல்எதிர்காலத்துக்கும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆவலில்பசி மறந்துகுடும்பத்தினருடன் பேச்சை குறைத்துகுழந்தைகளுடன் விளையாட்டை துறந்து எனதொடர் ஓட்டத்தில் களைத்து போகிறோம்.கஜானாவை நிரப்பும் வேளையில்மற்றவர்கள் உதவி கேட்டாலும்இல்லை என்றுவாய்மொழியாக சொல்லாமல்தலையாட்டி விட்டு செல்வோர் மத்தியில்மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்ப்பவர்களால்இந்த உலகம் இன்னமும் அழகாக இருக்கிறது. அதில்ஒருவர் தான்எலச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி.

கட்டுமான தொழிலை திறம்பட செய்து வரும் இவர் செய்த நல்ல விஷயம்தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. என்ன அது... பார்ப்போம்.கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவமாணவியர்உயர் கல்வி பெறுவதில் பல காலமாக சிக்கல் நிலவி வருகிறது. காரணம்சுற்றுவட்டாரத்தில்அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஒன்று கூட கிடையாது. எலச்சிபாளையத்தில் மட்டும் நடுநிலைப்பள்ளி உள்ளது. பல கி.மீ.,க்கு அப்பால் தான் உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.அரசு பள்ளியில் உயர் கல்வி படிக்க வேண்டுமானால்பல கி.மீ.தொலைவில் உள்ளதெக்கலூர்வாகராயம்பாளையம்அரசூர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இன்றளவும் உள்ளது.

இதனால்சுற்றுப்பகுதியில் உள்ள மாணவமாணவியர் அவதிப்பட்டனர். இதனால்எலச்சிபாளையத்தில் இருக்கும் நடுநிலைப் பள்ளியையாவதுஉயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமக்கள்தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.அரசும் ஆய்வு செய்தது. இடம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் எனதகவல் வந்தது. அப்போது தான்இவர் செய்த உதவிமக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு கட்டடம் கட்டதனக்கு சொந்தமான நிலத்தை தானமாக எழுதி கொடுத்துள்ளார் என்பது தான் அது.







இதுகுறித்துஎலச்சிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், ''பள்ளியை தரம் உயர்த்தும் கோரிக்கை குறித்தும்அதிலுள்ள பிரச்னை குறித்தும்எங்கள் ஊரை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தியிடம் கூறினோம். அவரும் உடனேதற்போது பள்ளிக்கு அருகில் உள்ளஅவருக்கு சொந்தமான, 3 கோடி மதிப்புள்ள, 1.5 ஏக்கர் பூமியைபள்ளிக்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். அரசுகட்டடங்களை விரைந்து கட்டிஉயர்நிலைப் பள்ளியை கொண்டுவந்தால்சுற்றுவட்டார மாணவமாணவியருக்கு மிகுந்த பயனாக இருக்கும்," என்றார்.

பெற்றோர் சிலர் கூறுகையில், ''பள்ளி கட்டடம் கட்டதானமாக நிலத்தை வழங்கிய தொழிலதிபருக்குஎப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உயர்நிலைப்பள்ளி அமைந்தால்பெண் குழந்தைகள்கல்வி பயில வெளியூர்களுக்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது. உள்ளூரில் படிப்பதால்அவர்களும் பாதுகாப்பு உணர்வுடன் இருப்பார்கள்,'' என்றனர்.

பூமியை தானமாக வழங்கிய தொழிலதிபர் ராமமூர்த்தி கூறியதாவது: எங்கள் சொந்த ஊரான எலச்சிபாளையத்தில்விவசாயமும்விசைத்தறியும் பிரதான தொழில்களாக உள்ளன. ஏழைகள்நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் எங்கள் ஊரில், 1957ல் எங்கள் தந்தை பள்ளிக்காகஇடத்தையும் கொடுத்து கட்டடத்தையும் கட்டி கொடுத்தார். அவர் வழியில் வந்த நாங்கள் உழைப்பால் உயர்ந்தோம். அவரது தர்ம சிந்தனைஎங்களுக்குள்ளும் இருந்து வந்தது. ஊர் மக்களின் கோரிக்கை வாயிலாகசிந்தனையை செயல்படுத்த நேரமும் வந்தது.பள்ளி கட்டுவதற்காகஎனது இடத்தை தானம் செய்ய முடிவு செய்தேன். 2018ல் தான செட்டில்மெண்ட் செய்தும் கொடுத்தேன். இதனால்ஏழை மாணவர்கள் சிரமமின்றி உயர் கல்வி பெறுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அங்கு படித்து மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால்எங்கள் குடும்பத்துக்கே பெருமை. கட்டுமானப் பணிக்கு ஏதாவது உதவி என்றால்அதையும் செய்து தர தயாராக உள்ளோம்.இவ்வாறுராமமூர்த்தி கூறினார்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,