கார்த்திகை விழாவைக் கொண்டாடுவோம்!
கார்த்திகை விழாவைக் கொண்டாடுவோம்!
மாவிளக்கு மாவு ஏற்றி அந்த கார்த்திகை மைந்தனின் பெயரைச் சொல்லியே கொண்டாடிவோம் பொரிக்கு மட்டும் பாகு போதும்; கொழுக்கட்டைக்கு வெல்லம் இடித்துப் போட்டும் கொஞ்சம் எள்ளும் வறுத்துப் போட்டும் எல்லா வேலையும் சுபமாய் முடிந்ததத்தே! இனி தீபம் ஏற்றிடலாம்!நிலையெல்லாம் துடைத்துப் பொட்டு வைத்தேன். வீடெல்லாம் மாக்கோலம் இட்டு, ஜோதி மயமான அண்ணாமலையின் அருளைப் பெறுவோம் . கார்த்திகைப் பெண்டிர் வளர்ப்பினிலே அழகு மிளிரும் முருகனவன், ஜோதி மயமான சிவபெருமான் இருவரின் அருளைப் பெற்றிடலாம்! அக இருள் விலகி மகிழ்ந்திடலாம்! வீடெல்லாம் தீபமே! இல்லத்திலே லக்ஷ்மிகரம்! இருளெல்லாம் விலகி ஒளி வெள்ளந்தான் பாய்ந்ததுவே! நம் நண்பரெல்லாம் வாழ்த்திடுவோம் நல் தீபத் திருநாளிலே! அகமாயை களைந்த வல்ல பிரான் சர்வ மங்களம் அளித்திடுவார்!
Comments