ஸ்வீட் கார்ன் சூப்
- Get link
- X
- Other Apps
ஸ்வீட் கார்ன் சூப்
குளிர்காலம் வந்துவிட்டாலே ‘சூடா ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோணும் சுவையான உணவுப் பொருட்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்துக்கும் நன்மையளிப்பதாக இருக்க வேண்டும்; எளிதில் தாக்கும் ஜலதோஷம் போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதற்கு இந்த ஸ்வீட் கார்ன் சூப் உதவும். தேவையான பொருட்கள் வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - அரை கப் நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், வெங்காயம் - தலா கால் கப் சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை- வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஸ்வீட் கார்ன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சோளமாவில் தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். காய்கள் நன்றாக வெந்தவுடன், சோளமாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும். சோள மாவு வெந்து சூப் பளபளப்பாக வரும்போது உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். மிளகுத்தூள் சேர்த்து இறக்கி சூடாக அருந்தலாம் .
sent Yesterday at 14:49
sent Yesterday at 14:52
சுக்கு அதிமதுர சூப்!
சென்னை போன்ற பெருநகரங்களில் பெய்துவரும் மழையின் காரணமாக சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த அதிமதுரம் சுக்கு சூப் செய்து பருகலாம்.
அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் பாத்திரத்தைக் கீழே இறக்கிவிடவும்.
அந்த வெந்நீரில் அதிமதுரம் பொடி அரை டீஸ்பூன், சுக்குப்பொடி அரை டீஸ்பூன், திப்பிலி பொடி கால் டீஸ்பூன், நறுக்கிய பாதாம் பருப்பு ஆறு ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். நீராவியில் பொடிகள் அனைத்தும் வெந்ததும், நன்றாக கலக்கி சூட்டோடு பருகவும். பருகும் போதே பாதாமை மென்று சாப்பிட்டால் கசப்பு தெரியாமல் இருக்கும்.
சிறப்பு
மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு தேவையானபோது பொடி செய்து பயன்படுத்தலாம். பெரியவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்றது இந்த சூப்.
- Get link
- X
- Other Apps
Comments