கோவை தியேட்டரில், கொரோனா களப் பணியாளர்களுக்கு முதல் காட்சி இலவசமாக திரையிடப்பட்டது.

கோவை: களப் பணியாளர்களுக்கு சிறப்புக் காட்சி! - சர்ப்ரைஸ் கொடுத்த தியேட்டர்



தியேட்டர்கள் திறக்கப்பட்dirukkum நிலையில், கோவை தியேட்டரில், கொரோனா களப் பணியாளர்களுக்கு முதல் காட்சி இலவசமாக திரையிடப்பட்டது.







கொரோனா வைரஸும், அதற்காகப் போடப்பட்ட ஊரடங்கும் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிட்டன. தமிழகத்தில் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே, கடந்த மார்ச் 17-ம் தேதியே தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு மால்கள் திறக்கப்பட்டாலும், தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தன. படிப்படியாகத் தளர்வுகள் அறிவிப்பிலும் தியேட்டர்களை திறப்பதற்கு தொடர்ந்து தடை நிலவிவந்தது.


இந்தநிலையில், நவம்பர் 10-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று ஆங்காங்கே தியேட்டர்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.


தியேட்டர்களைத் தயார் செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடந்துவந்தது. கோவையைப் பொறுத்தவரை, பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. அதேநேரத்தில், மால்களிலுள்ள தியேட்டர்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், புரூக்ஃபீல்ட்ஸ் மாலிலுள்ள பி.வி.ஆர் திரையரங்கில் கொரோனா களப் பணியாளர்களுக்கு சர்ப்ரைஸாக முதல் காட்சி இலவசமாகத் திரையிடப்பட்டது.





மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் இன்று காலை அவர்களுக்கு முதல் காட்சியாக, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் திரையிடப்பட்டது.







 






இது குறித்து தியேட்டர் நிர்வாகிகள் கூறுகையில், ``கொரோனா களப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைத்தோம். தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளால் வர முடியவில்லை. அவர்களுக்கு தீபாவளிப் பண்டிகை முடிந்தவுடன் பிரத்யேகமாக ஒரு காட்சி திரையிடப்படும். அனைத்து சிஸ்டமும் மாறிவிட்டது.


ஒரு இருக்கை இடைவெளிவிட்டுத்தான் அமர முடியும். டிக்கெட்டும் நேரடியாக வாங்க முடியாது. ஆன்லைனின் புக் செய்தால் போதும். என்ட்ரன்ஸில் க்யூ.ஆர் கோட் ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே போகலாம். விரைவில் புதுப்படங்கள் வெளியாகும் என நம்புகிறோம். அப்படிப் புதுப்படங்கள் வெளியானால், தியேட்டர்கள் ஓரளவுக்கு பழையநிலைக்கு திரும்பிவிடும்” என்றனர்.









Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,