தி.ஜா.

தி.ஜா. என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் தேவகுடி என்னும் ஊரில் 1921 பிப்ரவரி 28-ம் தேதி பிறந்தார்.
நாவல், குறுநாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல துறைகளில் செயல்பட்டுள்ளார். 10 நாவல்கள், 5 குறுநாவல்கள், 15 சிறுகதை தொகுப்புகள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார்.
இவரது ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘உயிர்த்தேன்’ போன்ற நாவல்கள் பெரியளவில் பேசப்பட்டவை. இதில் மோகமுள் நாவல், இயக்குநர் ஞான ராஜசேரன் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு திரைப்படமாக வெளியானது.
இவரது படைப்புகள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளை குறித்து பேசக் கூடியவை. ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
நன்றி; இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி