ஈகீகய்

ஈகீகய்


கீர்த்தனா பிருத்விராஜ் அவர்களின் தொடர்


பகுதி (2)



இகிகாய் பற்றி சென்ற வாரத்தொடரில் பார்த்தோம்.இகிகாயை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று.


மேலும்,சில பல சுவராஸ்யமான தகவல்களை இந்த வாரம் பார்ப்போம் வாருங்கள்..


இகிகாய் என்பது நாம் அனைவரும் காலையில் விழித்து எழுவதற்கான காரணம்.எப்போதும் விழிப்புணர்வுடன் எவ்வாறு இருக்கலாம் என்பதையும் இகிகாய் பயிற்றுவிக்கிறது.


Dan Buettner ,blue Zones எழுதிய ("Lessons On Living Longer from the People Who' ve Lived the Longest") என்ற புத்தகத்தை முழுவதாக படித்து முடித்த பின்னர் தோன்றுவது ஒன்று தான்.
ப்யூட்னர் இகிகாய் முறை ஜப்பானியர்களுக்கு மட்டுமானவை இல்லை உலகிலுள்ள அனைவருக்கும் பொருந்தும் என்பதை தான் அப்புத்தகத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார்.


உங்கள் இலட்சியத்தை நீங்கள் தவறவிட்டால் அது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த பாதிப்பையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்கிறது டான் ப்யூட்னர் மற்றும் இன்னும் பலர் நடத்திய ஆய்வின் முடிவுகள்.


இதெல்லாம் சரி, இலட்சியத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கும் அதற்கான விடை தான் "இகிகாய்"


முக்கியமாக இகிகாய் முறையில் வாழ்பவர்களுக்கு "ரிட்டையர்மென்ட்" என்ற சொல்லே வாழ்க்கையில் கிடையாது.ஏனென்றால் அவர்கள் அனைவரும் பிடித்த விஷயங்களில் மட்டுமே தங்களது முழுகவனத்தை வைக்கிறார்கள்.
வாழ்க்கையை வாழ வேண்டுமென்று சலிப்பாக வாழவில்லை.மனமைதியுடன் மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கையை வாழ எது தேவையோ அதை கண்டுபிடித்து வாழ்கிறார்கள்.



இகிகாய் தொடர்பாக 2018 ம் ஆண்டு வெளியான ஒரு கட்டுரையில் 92 வயதான டோமிமேனகா என்ற பெண்மணி KBG84 என்ற குழுவில் ஆடி பாடுவது தனது இகிகாய் என்று கூறுகிறார்.


மேலும்,உயர் பதவியில் உள்ள அனைவரும் இகிகாய் முறையை தான் பின்பற்றுவார்கள்.ஏனென்றால் அவர்களுக்கு வாழ்க்கை வேலை மீதான உந்துதல் அதிகம்.எச்செயலையும் அவர்கள் இறங்கி செய்வார்கள் என்கிறார் டோமிமேனகா.


ஓகினாவில் வாழும் பெண்களின் சராசரி வயது 87 ஆண்கள் 81.இதற்கு காரணம் இகிகாய்.புற்றுநோய் மாரடைப்பு,மன அழுத்தம் மனச்சோர்வு இப்படியான வியாதிகள் எதுவும் ஒகினாவில் ஏற்படுவதில்லை என்கிறார்கள் கிராமத்து மக்கள்.


ஒகினாவில் மட்டும் பரவி கிடந்த இகிகாய் இன்று உலகமெங்கும் பரவ காரணம் Hector Garcia எழுதிய Ikigai (The Japanese Secret to a long and happy life) என்ற புத்தகம் தான்.54 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இன்று புத்தக பிரியர்கள் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் என்று அனைவர் கரங்களில் மட்டுமின்றி எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் ஏன் புத்தகத்தை படித்து வியந்து சிலர் ஒகினாவை நேரில் சென்று பார்த்து வந்துள்ளனர்.


புத்தகத்தின் ஆசிரியர்கள் இது நாங்களே எதிர்பார்க்காத வரவேற்பு என்கிறார்கள்.புத்தக விற்பனை நினைத்தது பார்க்காத அளவில் உள்ளது என்கிறார்கள்.தகுந்த ஆதாரத்துடன் எழுத வேண்டும் என்பதற்காகவே நாங்க ஒகிமி க்கு சென்றுவிட்டோம் என்கிறார்கள்.


புத்தகத்தில் சிலவற்றை குறிப்பேடுகள் போன்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.அவற்றைப் பற்றி அடுத்தடுத்த தொடரில் பார்க்கலாம்.


இகிகாய் முறையில் வாழ்பவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை தான் நம்மை போன்றோர் வாழ்வதற்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.


மீண்டும் மீண்டும் சொல்வது வாழ்க்கையை வாழுங்கள் எவ்வித பதட்டம் இன்றி வாழுங்கள்.
உங்களுக்காக வாழுங்கள்.உங்களை சுற்றி இருப்பவர்களை மட்டும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு நீங்கள் கவலையுடன் வாழ்வதில் எவ்வித பலனும் இல்லை.
உங்களது மகிழ்ச்சி எதுவோ அதை நீங்க முடிவு செய்துவிட்டு உங்களை சுற்றி இருப்பவர்களின் மகிழ்ச்சியை உங்களுடன் தொடர்பு படுத்தி வாழுங்கள்.


ஆனால், கண்டிப்பாக வாழுங்கள் 


 



- கீர்த்தனா பிருத்விராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,