சத்தான ஸ்நாக்ஸ் டிரை ஃப்ரூட் சிக்கி

சத்தான ஸ்நாக்ஸ் டிரை ஃப்ரூட் சிக்கி



 


குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் டிரை ஃப்ரூட்ஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். .


டிரை ஃப்ரூட் சிக்கி


தேவையான பொருட்கள்

பாதாம் - கால் கப்


முந்திரி - கால் கப்
வறுத்த வேர்க்கடலை - கால் கப்
வறுத்த வெள்ளை எள் - கால் கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்து கிளறவும்.

வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும்.

பிறகு இதை சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி கனமாக தேய்க்கவும்.


ஐந்து நிமிடங்களுக்கு பிறகு துண்டுகளாக்கி காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி