ரமணமகரிஷி (10)

 பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 10



 பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :


 பகவான் திருவண்ணாமலையில்  தங்கியிருந்த போது மலைக்குகை ஒன்றில்           வசித்திருந்த மூத்த துறவி  ஒருவரிடம் மரியாதை வைத்திருந்தார். பின்பு விருபாட்சிக் குகைக்கு  வந்த பகவான்  அந்தத் துறவியின் இருப்பிடம் சென்று மௌனமாக இருப்பது உண்டு.


 அந்த துறவிக்கும்  சீடர்கள் இருந்தார்கள். என்ன தான் சன்னியாசியாக இருந்தாலும் மனித மனதுக்குரிய

பொறாமை குணம் அவ்வப்போது தலை தூக்கத் தானே செய்கிறது.


 பகவானை தரிசிக்க நிறைய பேர் வந்து செல்வதில் அவருக்கு பொறாமை.தன்னைத் தரிசிக்க வருகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து போனதால்  ஆத்திரம், ஆவேசம் அவருக்குள் எழுந்தது. அவரை கொலை பாத கத்துக்கும் தூண்டிற்று. ஆம் பகவானை அழிக்க திட்டம் தீட்டினார்.


 விருபாட்சி குகைக்கு சற்று மேலாக ஒரு   மறைவிடத்தை கண்டு பிடித்தார் அந்தி சாய்ந்ததும் அங்கே சென்று பதுங்கிக் கொண்டார். அங்கிருந்து பெரிய பெரிய பாறைகளையும்,

 கற்களையும்  உருட்டி விட ஆரம்பித்தார்.

 உருண்டு வரும் கற்களில் ஒன்றேனும் இந்த இளம் துறவியை  உருத்தெரியாமல் செய்து விடாதா என்ற எண்ணம். ஒரு கல்  அமைதியாக அமர்ந்திருந்த  பகவானுக்கு நெருக்கமாக வந்து விழவும் செய்தது. பகவான் எப்போதும் கவனமாக இருக்க கூடியவர். மெல்ல எழுந்து மேலே  போனார். அங்கே கயமை தன்மை நிறைந்த  துறவியை  கையும் களவுமாக பிடித்தார். அப்போதும்  அசராமல் ஏதோ ஒரு நகைச்சுவை செய்கிற மாதிரி  சிரித்தார்.


 தன் முயற்சியில் தோற்றுப் போன அந்த சாமியார் நாணித் தலை குனிந்தார். தன் வினை தன்னைச் சுடும் என்பது பற்றி உங்களுக்கு தெரியாததா. மற்றவர்க்கு இடர் செய்வதால் நீங்கள் பெறுவது என்ன சுகம்

 என்று சொல்லிவிட்டு அமைதியாக கீழே இறங்கி வந்தார்.


  அந்தத் துறவிக்கு, பகவானின் மேன்மை புரிந்தது.


 ஒரு சமயம் பகவானின் ஆசிரமத்திற்கு திருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் பகவான் உங்களுக்கு தேவையானதை எடுத்துச் செல்லுங்கள் என்றார்


 இது என்ன வழக்கத்திற்கு விரோதமான வார்த்தையாக இருக்கிறதே. பகவானின் செயல் புதிராக தோன்றியது திருடர்களுக்கு.


 திருடர்கள் ஜன்னலை பெயர்த்  திருப்பது கண்டு ஆத்திரமுற்றார், அங்கிருந்த ராமகிருஷ்ணன் சாமி. பகவானை  நோக்கினார்.பகவான் கட்டளையிட்டால் திருடர்களை துவம்சம் செய்து விடும் வேகம். பகவானோ அவர்களை அடக்கினார். அது அவர்களுடைய தர்மம். நம்முடையது நமக்கு. நாம்  தடுக்க வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்.


இப்போ கூடம்  முழுக்க உங்க கையில். எதுவேணா  பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டார் பகவான். திருடன் ஒருவன் வந்து கூண்டு விளக்கு கேட்டான். ராமகிருஷ்ணசாமி விளக்கு ஏற்றித் தந்தார்

 இன்னொருவர் வந்து சாவியை கேட்டான். அவர்கள்  அலமாரியில் இருந்ததை எடுத்தனர். அங்கு  இருந்த  பத்து ரூபாய் பணமும் கொஞ்சம் அரிசியும் இருந்தது. தங்கவேலுப்  பிள்ளை வைத்திருந்த அறுபது  ரூபாய் உட்பட அனைத்தையும் திருடர்கள்  எடுத்துக்கொண்டனர்


  அதிகமாக எதிர்பார்த்து வந்த திருடர்களுக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றமே.


 உம்மோட பணமெல்லாம் எங்கே வச்சிருக்கீங்க மிரட்டினான் ஒரு திருடன்.


  அப்பா நாங்கள்  ஏழ்மையான சாதுக்கள். தர்மம் பெற்றுதான் வாழ்வது. எங்களிடம் ஏது பணம்?என்றார் பகவான். திருடர்களுக்கு ஒரு வித  திருப்தி ஏற்பட்டது.


 திருடர்கள் போனதும், தனது சீடர்களை அழைத்து, பொறுமையுடன் அவர்கள் அறியாமையால் செய்கிறார்கள். அதற்கான விளைவை அவர்கள் அனுபவிப்பார்கள். உன்னுடைய பல் தவறிப்போய் நாக்கை கடித்துவிட்டால் பல்லை உடைத்துக் கொள்வாயா என்று பலவாறு அவர்களை அமைதிப்படுத்தினார் பகவான்.


 மீண்டும் பகவான் ஸ்ரீ ரமணரின் தாய் அழகம்மாள் மீண்டும் திருவண்ணாமலை வருகை, இதன் நிகழ்வு  நாளைய பதிவில்



முருக.சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி