ரமணமகரிஷி (12)

 ரமணமகரிஷி (12)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 12



பகவான் எங்கே குடும்ப பந்தத்தில் சிக்கி விடுவாரோ என்ற அச்சம் சில பக்தர்களுக்கு இருந்தது. அந்த அச்சம் அவசியமற்றதாய்  ஆனது. காரணம் அந்தத் தாயே  குடும்பத்தை விட்டு  அல்லவா ஆசிரம வாழ்க்கைக்கு வந்திருக்கிறார்.


 பகவான் ஸ்ரீ ரமணர் விருப்பாட்சி குகை விட்டு ஸ்கந்தாஸ்ரமத்துக்கு இடம் பெயர்ந்தார்.அது கொஞ்சம் விசாலமான குகை. விருபாட்ச குகைக்கு மேலாக இருந்தது. குகைக்கு முன்பாக ஒரு சிறிய தோட்டம் போடுமளவுக்கு இடவசதி.ஆசிரமத்  தேவைக்கு  போதுமான நல்ல தண்ணீர் அங்கே ஊற்றாக பொங்கியது. இப்போது ஆசிரமவாசிகளுக்கு  தாய் சமைக்க ஆரம்பித்தார் அவருடைய வாழ்க்கை ஒரு புதிய கால கட்டம் துவங்கியது.


தாயார்  அழகம்மாளுக்கு உள்ளுக்குள் ஒருவித  பேரின்பம்.  தான் பெற்ற பிள்ளையின் உயர்வு கண்டு பூரித்தார். எந்த தாய்க்கும் இது போல் ஆனந்தம் கிடைக்குமா என்பது அரிது. மக்கள் வந்து ரமணரை வணங்கும் போது பெருமை கொண்டார். பரம்பொருள் ரமணரின் மனதில் இருப்பதை அழகம்மாள் உணர்ந்தார்.


 திருவெண்காட்டில் உத்யோகம்  பார்த்துக் கொண்டிருந்த இளைய மகனையும் ஆசிரமத்திற்கு வந்து விடும்படி அந்தத் தாய் தகவல் அனுப்பினார்

 அவ்வாறே அவரும் வேலையை உதறிவிட்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். துறவுக்கான நியமங்களை கடைப்பிடித்தார். பகவானை "சுவாமி" என்ற அழைத்த  பக்தகோடிகள் இவரை "சின்னஸ்வாமி' என்று அழைக்கலாயினர்.


 பகவான் குடும்பத்தினரை சேர்த்து விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம்

 இல்லற வாசிகள் குடும்பத்தில் மனைவி மற்றும் மக்கள் இதர  பந்தங்களுக்கு மட்டுமே இடம் உண்டு. ஆனால் இங்கே குடும்பத்தில் பணியாட்கள்,சீடர்கள், பக்தர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள் விசாலமான மனம். விசால இடம் ஆனால்  அனைவரும்  பொதுவானதாகவே  கருதபட்டனர்.


 நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைக்கு பாதுகாப்பு அவன் பருவத்தில் தான்

" அங்கே போகாதே" "இங்கே போகாதே " என்று கட்டுப்பாடு செய்கிறோம். இந்த நிமிடம் பிள்ளை எங்கே இருக்கிறது என்று சிந்தை  கொண்டிருப்போம் நம் கண் பார்வையிலேயே வைத்துக்கொள்ள  பிரியப்படுவோம்.அது வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்ததும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.எங்கு சென்று எப்போது திரும்பினாலும் மனம் கலக்கமுறுவதில்லை. அப்படித்தான் துறவறத்திலும். துவக்கத்தின் அலைகள் சலனங்கள் இருக்கும். வேலி தேவைப்படும். அலைகளின் அரிப்பில் இருந்து காத்துக் கொள்ள வேண்டிய மனதைப் பாறையாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். மனம் முதிர்ச்சியுற்ற பின் பக்குவமான பிறகு எந்த அலையும் எதுவும் செய்ய முடியாது எந்த நிலையிலும் அது சலனப்படுவது இல்லை என்றாகிவிடும். அப்போது உலகத்தையே ஒரு குடும்பமாக பார்க்கத் தோன்றும். பகவான் பெற்ற நிலையும்  அதுவேதான்.


 பகவான் ஸ்ரீரமணர் உணர்ந்த மெய்ப்பொருள் என்னவென்பது நாளைய பதிவில்.



முருக சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,