ரமணமகரிஷி (14)
பகவான் ஸ்ரீரமணர், தனது தாயார் செய்யும் ஆசிரம வேலைகளின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டாமல் போனாலும், தனது சீடர்களிடம் மனமுவந்து விமர்சிப்பார். ஆரம்பத்தில் இருந்த தாயாரின் போக்கு, சற்றே மாற்றமாக இருந்தது, பகவான் எல்லோருக்கும் சமமானவர் என்பதால், மற்ற பெண்களைப் போலவே எவ்வித சிறப்பினையும் பெறாமல் தானும் ஒரு நபராக இருந்து, ஆசிரமத்தில் பணியாற்றுவதை பெரும் பாக்கியமாக கருதினார் அழகம்மாள்.
பகவான் ஸ்ரீ ரமணர், ஆசிரமத்தில் நடக்கும் எல்லாவற்றிலும் ஆச்சார அனுஷ்டானங்களை பகவான் அங்கீகரிக்கவில்லைஎன்று அர்த்தமாகாது. அளவுக்கு மீறிய கட்டு திட்டங்களை அவர் எதிர்த்தவர் என்றே சொல்ல வேண்டும்.
தம்முடைய காரியங்களுக்கு அவர் தடை உத்தரவு போடுவதில்லை. ஆன்மீக விதையை அவரவர் உள்ளத்திலும் ஊன்றுவதோடு தன் வேலை முடிந்து விடுகிறது என்பார். அது வளரும்போது புற வாழ்க்கையை வடிவமைப்பது அவரவர் பொறுப்பு என்று விட்டு விடுவார்.
பகவான் ஸ்ரீரமணரிடம், நடுத்தர வயது கொண்ட ஒரு பெண்மணி, தனது கேள்வி கேட்கும் நிலையிலே வேகமாய் வந்து எனக்கு உடனே முக்தி வேண்டும் கொடுங்கள் என்றார். மேலும் இன்று மாலை ஐந்து மணிக்கு நான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் அதற்குள் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டுமென்றார்.
பகவான், அந்த நடுத்தரப் பெண்ணிடம் முக்தி என்ன கடையில் வாங்கும் பொருளா அல்லது கேட்டவுடன் கிடைக்கும் பொருளா, சொந்த பந்தங்களுடன் வாழவேண்டும் என்ற ஆசை கொண்டு ஊருக்குச் செல்லும் வழியில் விற்கும் பொருளா.
ஏதுமற்ற நிலை, எந்தப் பொருளையும் தேடாத நிலை முதலில் அடைய நினை, பரம்பொருளையே நினை அவ்வாறு இருந்தால், அதுவே முக்தி கிடைக்க தொடக்க நிலையாக ஒரு வேளை ஆகலாம். தாங்கள் 5.00 மணிக்கு ஊருக்கு போகிறேன் என்று சொன்னீர்களே பந்த பாசத்தின் மீது பற்று,, ஏதோ ஒன்றின் மீது ஆசை அவை விலக நேரும் வரை காத்திருக்க வேண்டுமே.
அம்மையாருக்கு புரிந்ததோ, புரியவில்லையே அங்கிருந்து கிளம்பி விட்டார்.
பகவான் ஸ்ரீ ரமணர் வழங்கும் அறிவுரைகளின் ஆழ மிக்க கருத்துக்கள் முழு அளவில் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே வாழ்வியலின் தன்மையை தெரிந்து கொண்டு பேரின்பம் அடைவார்கள்
பகவான் ஸ்ரீ ரமணரின் அம்மாவிற்கு ஆரோக்கியம் திடீரென சீர்கெடலாயிற்று. அவர்களால் ஆசிரம வேலைகளை முன்போல் செய்ய முடியவில்லை.
நேரத்தில் பெரும் பகுதியை ஓய்வாக இருப்பது அவசியமாயிற்று. படுக்கையிலிருந்த தாய்க்கு பகவான் பணி விடை செய்தார். இரவில் அவரது அருகாமையில் உட்கார்ந்திருப்பார். அம்மாவின் புரிதல் மௌனத்திலும் தியானத்திலும் பக்குவமுற்றது.
1922 மே 19ஆம் நாள், பகவானும் மற்றும் சிலரும் நாள் முழுக்க அவரது தாயார் பக்கத்திலே இருந்தார்கள், யாரும் சாப்பிடவில்லை. மாலையில் உணவு தயாரானது. பகவானும் உண்ணாமல் இருந்தார். மாலை பக்தர்களின் குழுவொன்று வேத பாராயணம் செய்தனர்.
பகவான் தாய் அழகம்மாள் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்.அவரது வலது கை தாயினுடைய இதயத்தின் மீதும் இடதுகை சிரசின் மீதும் வைத்தார். இரவு 8.00 மணி வாக்கில் அம்மா சரீரத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது நாம் சாப்பிட போகலாம் எந்தத் தீட்டும் இல்லை என்றபடி பகவான் சொன்னார்
பொதுவாக மரணம் என்பது தீட்டு. சில சடங்குகளை முடித்த பிறகு தான் இடம் தூய்மையுற்றதாக கருதப்படும் ஆனால் இங்கே தாய் மரணிக்கவில்லை சுயத்துடன் இரண்டறக் கலந்து விட்டார் என்பதே பகவானின் கருத்து.
பகவான் தங்கியிருந்த ஸ்கந்தாஸ்ரம த்திலிருந்து அன்னையின் சமாதி அரைமணி நேர நடையில் அமைக்கப்பட்டது. அவர் நாள் தவறாமல் அங்கு வருவார். அப்படி வந்துகொண்டிருந்தஒரு நாள் ஆசிரமத்திற்கு திரும்பவில்லை சமாதிக்கு அருகிலேயே அவர் அமர்ந்திருப்பதைக் கண்ட சீடர்கள் அந்த இடத்துக்கு பக்கமாக இப்போதுள்ள ரமணாஸ்ரமத்தை அமைத்தார்கள்.
சக்தி பொருந்திய மகானிடம் மக்கள் மீதான ஈர்ப்பு கூடுதலானது நாளைய பதிவில்
Comments