ரமணமகரிஷி (15)

  ரமணமகரிஷி (15)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 15

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :



 தூய ஆன்மிக வாழ்க்கையினை  வாழ்ந்து வந்தவர் பகவான் ஸ்ரீ ரமணர். அடுத்தவர்களின்  மனதில் உள்ள எண்ணங்களை கிரகிக்கும் வல்லமை படைத்தவர்.


 பகவானின் ஆசிரமத்திற்கு, அடிக்கடி வருபவர்களில்   நாராயண சாஸ்திரியும் ஒருவர்.

 ஒருமுறை அவர்  வரும் பொழுது,  இன்று பகவான் முன்னிலையில் ராமாயணம் பாராயணம் செய்ய வேண்டுமென்று எண்ணத்துடன் இருந்தார்.  அதே சமயம் ஆசிரமத்துக்கு வருவதற்கு முன்னே நடுத்தர வயது கொண்ட  ஒருவர், 


 வாழைப்பழங்கள்  கொஞ்சம் வாங்கி வரும் வழியில் இருந்த ஒரு பிள்ளையார் கோயிலில் படைத்துவிட்டு  அதை எடுத்துக் கொண்டு வரும் அதே நேரத்தில், நாராயண சாஸ்திரியும்  ஆசிரமத்தில் உள்ளே நுழைந்தனர்.


  பார்வையாளராக வந்த   நடுத்தர வயது கொண்டவர் பழத்தை எடுத்து வந்ததைப்  பார்த்து, பகவான் பிள்ளையாருக்கு சமர்ப்பணம் செய்த பழத்தை நானும் ஒன்று எடுத்துக் கொள்ளலாமா  என்றார்.


 நடுத்தர வயது மனிதருக்கு மட்டுமல்லாமல் அங்கிருந்த சீடர்களுக்கும் ஆச்சரியமாய் ஆனது.

 அங்கிருந்த நாராயணசாமி சாஸ்திரியிடம் வந்த நோக்கம் என்னவென்று பகவான்  கேட்க, தங்களுக்குத் தெரியாததா, நான் சொல்லவும்  வேண்டுமா என்று  சாஸ்திரி உரைக்க,  அப்புறம் என்ன ராமாயணம் பாராயணம் செய்ய வேண்டியது தானே என்றாராம் அந்த அபூர்வ சக்தி கொண்ட பகவான்.


 பக்தர்களின்  எண்ணங்களில், கலந்து  பரிபூரண அன்புடைய புனிதராக இருப்பவர் பகவான் ஸ்ரீ ரமணர் அவர்கள்.


 இதனால் பகவானை பார்க்க மக்கள் கூட்டம் தேடி வரத்தானே செய்யும்.


திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஈர்ப்பு சக்தியும்,  பகவான் ரமணர்பால்  பொது மக்களுக்கு ஏற்பட்ட அன்பும் ஐயப்பாடு அற்றதாகும்.


 கேள்விகளுக்கு அப்பாற்பட்ட  தெளிவைக்  கொண்ட  இறைவனை தரிசித்து பின்னர் பகவானை தரிசித்து திருப்தி பெற்றனர், அவர்களே தங்கள் துயரம் நீங்க கண்டனர். அந்நிலையில்           எந்நாளும் அவர் நிழலிலேயே இருந்து விடுவோம் என்று முடிவு கட்டிக் கொண்டவர்கள் அவர்களுடைய  சீடர்கள் ஆகிவிட்டனர். அவருடைய எல்லாப் பிரச்சனைக்கும் ஒரே தீர்வு  ரமணர் தான்.


 பகவானது ஆசிரம பணியில் இருந்தவர்களும் தியான கூடத்தில் அவருடைய பார்வை அமுதைப் பருகி ஈடேறியவர்களும், துதி பாடுவதைக் கேட்டு மெய்மறந்து தன்னிலை மறந்தவர்களும், அன்றாடம் பார்க்கும் பொருட்டு வந்து

 அறிந்தவர்களும எண்ணற்றவர்கள் ஆவர். ஆனால் அவர் களுடன்  குறிப்பிடத் தக்கவர்கள் விரல் எண்ணக்கூடிய அளவிலானவர். சிலர் சுவாமிகளின் தொடக்கக் கால  சீடர்களாகவும்,  சிலர்  பகவானது பக்தியின் பால் ஈர்க்கப்பட்டு சீடர்களாகவும் இருந்திருக்கின்றனர்.


 பகவானின் சீடர்களில் சிவப்பிரகாசம் பிள்ளை என்பவர் பலவாறும் கற்றுத் தேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் தத்துவப்  பாடம்  பயின்றவர்.


1900 ன் தென்னார்க்காடு மாவட்டத்தில் கோட்ட வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றியவர். பதவி மாற்றம் காரணமாக திருவண்ணாமலை வந்தவர் அப்போது மலையிலிருந்து பால சுவாமி பற்றிக் கேள்வியுற்றார்.முதல் சந்திப்பிலேயே அவரால் கவரப்பட்டு அவருடைய தொண்டரானார்.அப்போது சுவாமி மௌனத்தில் இருந்த காலம். சிவப்பிரகாசர் காகிதம் ஒன்றில் தனது ஐயங்களை குறித்து சுவாமியிடம்  வைத்தார்.எழுத்து மூலமாக வினாக்களுக்கு விடைகள் கிடைத்தன.


 சிவப்பிரகாசர்  கேட்ட முதல் கேள்வி என்ன என்பது விவரம் நாளைய பதிவில்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி