ரமணமகரிஷி (17)

ரமணமகரிஷி (17)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 17



 பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் 17


 பகவான் ஸ்ரீ ரமணர் உரைத்த  நான் யார்? என்பதன் விளக்கத்தைத் தெளிவுடன் கேட்ட சிவப்பிரகாசம் அவர்கள்,அதற்குப் பின்னாலே "ரமண பாதமாலை", "ரமண சரித அகவல்", ரமணதேவ மாலை, ரமண விண்ணப்பம் ஆகிய நூல்களின் மூலம் பகவானைப் போற்றுதல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 ஒரு முறை பகவான் ஸ்ரீ ரமணர் தன்னுடைய சீடர்களுடன் கிரிவலப் பாதையை சுற்றி வரும் போது, ஒரு இளைஞன் இவரைப் பார்த்து, தங்களுடன்  கிரிவலம் வந்தால் என்ன கிடைக்கும் என்றார்.  உனக்கு என்ன வேண்டும் என்று பகவான்  ஸ்ரீரமணரும் கேட்க, கிரிவலம் சுற்றி வருவதற்குள் இட்லி காப்பி கிடைக்குமா  என்றான் வேண்டுமென்றே.


 அதற்கு பகவான் அவர்கள்,  முதலில் எங்களோடு கிரிவலம் வா, அதன் முடிவில்  தெரியும் என்றார்.


 பகவான் ஸ்ரீ ரமணருடன்  சீடர்களும் அந்த இளைஞனும்  கிரிவலம் சென்று கொண்டிருந்த,  அந்த கிரிவலப்  பாதையின்  அருகே  ஒரு வயதான மூதாட்டி  ஸ்ரீரமணரிடம் சுவாமி   சூடாக  இட்லி இருக்கு   சாப்பிடுகிறீர்களா என்றார்.  என்னோடு சிலர் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கும் தருவீர்களா? என்றார் பகவான்.


 எல்லோருக்குமே  சாப்பிட  இட்லியும்  காப்பியும் உள்ளது தருகிறேன்  என்றார்  அந்த வயதான மூதாட்டி.


 கிரிவலப்பாதையில் பகவானுடன் வந்த அந்த  இளைஞனுக்கு மெய் சிலிர்த்து

 ஆச்சரியமும்  தந்தது.



 ஒரு முறை  ஸ்ரீரமணர் முன்னிலையில் சமஸ்கிருதத்தில் புனையப்படும் பாடல்களின்  இலக்கண விவரங்களை பற்றிய பேச்சு வந்தது. இந்த நிகழ்ச்சி ரமணர் தமிழில் "உபதேச உந்தியார்'' எழுதி முடித்தபின் சமஸ்கிருதத்தில் அதனையே உபதேச சாரம் என்று எழுதினார்.


 ரமணர் முதன்முதலாக சமஸ்கிருதத்தில் நாலடி கொண்ட ஒரு பாடலைப் புனைந்து  வைத்திருப்பதை பார்த்து அவரது  சீடர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.


 ரமணாஸ்ரமத்திற்கு  செல்பவர்கள் அவரது தாயார் சன்னதிக்குச் செல்லும் முன்பாக உள்ள கூடத்தில் அமர்ந்தவாக்கில்  இருக்கும் ரமணரின் சிலைக்கு மேலே அந்த பாடலை சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள தை இன்றும் காணலாம் பகவான் ஸ்ரீரமணரின் அந்த முதல் பாடலின் தமிழாக்கம்


" இதயமாம்  குகையின் நாப்பண்  ஏகமாம் பிரம்ம மாத்ரம் அது அகம் அகமாய் நேரே அவிர்ந்திடும் ஆன்மாவாக இதயமே சார்வாய் தன்னை எண்ணி  ஆழ் அலது  வாயு அதனுடன் ஆழ்  மனத்தால் ஆன்மாவில்  நிட்டன் ஆவாய்.


 இதன் பொருள் :


 தன்னுள் தானே விளங்கும் பிரம்மத்தை அறிய முயற்சி செய்யும் வழிகள் என்று இரண்டு இங்கே கூறப்படுகின்றன, நான் என்று எண்ணும் மனம் இதயத்திற்குள் ஆழ்ந்து அதன் மூலத்தை நாடுவது தான் இவ்விரண்டில் முக்கிய சாதனமாகும். மற்றது பிரணாயாம  வழியில் மூச்சை உள்ளே அடக்கி அதனால் அடங்கும் அகந்தையும் மனமும் இறுதியில் அற்றுப் போக தன்னுள் ஒளியைத் தானே உணர்வது.


 சாதாரணமாக நாம் அமைதியாக இருக்கும்போது நமது மூச்சு சீராக இயங்கும் இந்த காரண காரியம் ஒரு சூழ்ச்சிஅடையும் போது மூச்சின்  கட்டுப்பாட்டில் மனம் அடங்கும் என்பதும் எதிர்பார்க்கப்படுவது.


 உள்ளத்தில் உள்ள உணர்வு என்னவென்ற விவரம் நாளைய பதிவில்


.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி