ரமணமகரிஷி (18)

 ரமணமகரிஷி (18)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 18

 பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் எண் : 18


 பகவான் ஸ்ரீ ரமணர் அவர்களின் வாழ்வில் எண்ணற்ற சுவையான நிகழ்வுகள் நடந்தேறி உள்ளன, பகவான் ஸ்ரீ ரமணர் அவர்கள், விருப்பாட்சி குகையில் தங்கியிருந்தபோது, அந்த மலைச்சரிவில் ஒரு பெரிய பாறை ஒன்று  இருந்தது.  அன்றாடம் காலை அந்த பாறை மீது அமர்வதை  அவர் வழக்கமாக கொண்டு இருந்தார்.


 பனிக்காலம்,  மழைக்காலமாய்  இருந்தாலும் அங்கு வந்து அமர்வார்.


 ஒரு நாள் இந்த நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு இருந்த ஒருவர், பனிக்காலம் மழைக்காலத்திலும் இப்படி செய்கிறீர்களே ஏன் என்று கேட்டார்.


 பகவான் அதற்குப்  பின்வருமாறு விளக்கம் தந்தார்.


 மலை அடிவாரத்தில் இருக்கும் சௌபாக்கியம்மாள் என்பவர் என்னை அன்றாடம் பார்த்த பிறகு    தான் வீட்டுக்குச்  சென்று  தன்னுடைய பணியை துவங்குவார். 


 ஒருமுறை சௌபாக்கியம்மாள் என்னைப் பார்க்க வரவில்லை காரணம் அவர்,வயது முதிர்வின் காரணமாக மலை மீது ஏறி வர முடியவில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.


 அன்று முதல் நான் காலையில்  பாறை மீது  ஒரு அரை மணி நேரம்  அமர்வது வழக்கமாக கொண்டிருந்தேன். சௌபாக்கியம்மாள்  கீழிருந்து என்னைப் பார்த்துவிட்டு பின்னர் தான் அடுத்த வேலையைத்   துவங்குவார்.  தன்னை நாடி வருபவரை ஆனந்த படுத்துவது  பகவான் ரமணரின் இயல்பு.


 பகவான் ஸ்ரீரமணரிடம் என்றென்றும்  எளிமை உள்ளது. அவரது மனம் முழுவதிலும் பரம்பொருளாகிய இறைவனின் நினைவே உள்ளது. இவ்வாறு இருப்பதனால் அவர் மனம் முழுவதும் தூய்மையே உள்ளது.


 பகவான் ஸ்ரீரமணர் அருளிய "உள்ளது நாற்பது " அனு பந்தத்தில் மங்கலமாய் அமைந்த செய்யுளில் என்ன தான் உள்ளது என்று நாமும் தெரிந்து கொள்வோம். உள்ளதல  துள்ளவுணர்  வுள்ளதோ வுள்ளபொரு ளுள்ளலற  வுள்ளத்தே யுள்ளதா  லுள்ளமெனு  முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே  யுள்ளபடி யுள்ளதே யுள்ள லுணர்வாயே  யுள்ளே.


 

இதன் பொருள் :


 உள்ளதாகிய மெய்ப்பொருள் இருந்தாலன்றி  இருக்கிறோம் என்னும் இருப்புணர்வு தோன்றுமா?அது எண்ணங்களற்ற இதயத்தில் இருப்பதால், இதயம் என்று கூறப்படும் அந்த உண்மைப் பொருளை தியானிப்பது எப்படி? அது உள்ளத்தில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நாம் இதயத்தில் இருப்பதே அதை தியானிப்பதாகும் என்று உணர்வாயாக.

 என்பதே இதன் பொருளாகும்.
 பகவான் ஸ்ரீ ரமணரை  சந்தித்த ஒரு பிரமுகரின் செயல்பாடு குறித்து நாளைய பதிவில்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,