ரமணமகரிஷி (19)

  ரமணமகரிஷி (19)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 19


 பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் எண் : 19

பகவான் ஸ்ரீ ரமணரைக்  காண வந்தவருள்  நடேசனார் என்பவரும்  முக்கியமானவர்.


 இவர்  தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தவர்.  விவேகானந்தரை படித்து உலகை உதறிவிடத் தீர்மானித்தார் ஆன்மீகத்தில் முன்னேற ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்தவர்.


 ஒருநாள் நண்பர்  அவரிடம் சொன்னார். திருவண்ணாமலைக்கு போய் வாரும் மலை மீது ஒரு பாலசுவாமி இருக்கிறார். ஆனால் உபதேசம் கொடுப்பாருன்னு  சொல்வதற்கு  இல்லை  என்றார்.


 பகவான் அப்போது ஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்தார். நடேசனார் அங்கே சென்று அவர் முன் அமர்ந்தார் பகவானோ மௌனமாய் இருந்ததால்  தாமாக எப்படி முதலில் பேசுவது என்ற நினைப்புடன்  திரும்பி விட்டார்.



 அந்த முயற்சி பலனளிக்காமல் போனதும், அனேக சாமியார்களை அவர் தேடிப் போனார் ஆனால் தெய்வீக நிலையை அவர்களில் யாரிடமும் அவர் காணவில்லை.

 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு  பகவானுக்கு ஒரு கடிதம் எழுதி அவரை மீண்டும் சந்திக்க அனுமதி கேட்டார். தம்முடைய முதல் சந்திப்பு வியர்த்தமானது பற்றியும்,பகவானை நாடி வரும் மக்களிடம் அவர் அத்தனை பாராமுகமாக இருக்கக்கூடாது என்று அக்கடிதத்தில் மன்றாடியிருந்தார்.


 ஒரு மாதம் கடந்தும் பதில் இல்லை தன் முயற்சியில் சற்றும்  தளராத நடேசனார் மீண்டும் பதிவு தபால் மூலம் ஒரு கடிதம் அனுப்பினார்.அதில் நான் எத்தனை பிறப்புகள்  எடுப்பதாயினும்  தங்களிடமே, தங்களிடம் மட்டும் உபதேசம் பெரும் பக்குவம் எனக்கு இல்லை என்று தாங்கள் கருதினால், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு தாங்கள் மீண்டும் பிறக்கும்படி ஆகும் என்று குறிப்பிட்டிருந்தார்.


சில நாட்களுக்குப் பிறகு பகவான் அவருடைய கனவில் வந்தார். தொடர்ந்து என்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இராதே. முதலில் மகேஸ்வரனின் அருளைப் பெறுவதற்கு முயற்சி.  அதுவே நாளா வட்டத்தில் என் உதவி கிடைக்கும்.

வீட்டில் மகேஸ்வரன் படம் இருந்தது அவர் அதனையே ஆதாரமாகக்  கொண்டு தியானிக்க லானார். சில  நாட்களில் அவருடைய கடிதத்திற்கு  பதில் கடிதம் வந்தது.  மகரிஷி கடிதங்களுக்கு பதில் எழுதுவதில்லை நேரில் வந்து பார்க்கவும் என்று.


 நடேசனார் மீண்டும் திருவண்ணாமலை சென்றார், பகவானை சந்தித்தார்.


 நான் தங்களுடைய கருணை இன்னதென்று அறியவும்,அதனை அனுபவிக்க விரும்புகிறேன் என்றார் நடேசனார்.


" என் கருணையை எப்போதும் நான் வழங்கிக் கொண்டிருக்கிறேன் நீ அறிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு நான் என்ன செய்யட்டும் என்றார்  பகவான் ஸ்ரீ ரமணர்.


 இன்னும் எந்த பாதையைப்  பின்பற்றுவது என்று அறியாத குழப்பம் நடேசனாருக்கு. ஒருநாள் அவருடைய கனவில் பகவான் தோன்றினார். உன்னுடைய பார்வையை ஒருமுகப்படுத்து எண்ணங்களில் இருந்தும் பொருட்களில் இருந்து விலகிவிடு.


 வேற்றுமைகள் மறையும் போது நீ முன்னறுருவாய் என்று கூறினார்  உங்களைப் போன்ற உன்னதமானவர்கள் செய்யக்கூடிய அறிவுரை இப்படி என்றால் உண்மையான உபதேசத்தை எனக்கு யார் தரக்கூடும்? என்று கேட்டார் நடேசனார். " இதுவே சரியான வழி என்று அவருக்கு உறுதியளித்தார் பகவான்.


 பகவான் நடேசனார் தம் பக்கம் இழுத்து தம்முடைய உள்ளங்கையை அவருடைய சிரசின் மீதும் 

 பிறகு வலப்புற மார்பின் மீது வைத்தார்.  பகவான் இடது மார்பை  அழுத்தாமல் வலது மார்பை அழுத்தியது அது ஏன் என்பது தான் அவருக்கு புரியவில்லை இவ்வாறாக மௌன தீட்சை கிடைக்காமல் போனாலும் கனவில் ஸ்பரிச தீட்சை கிடைத்தது.


 சொத்துக்களை உதறி விட்டு விட்டு வெளியேறும்  உத்வேகம் காட்டியவர்களில்  நடேசனாரும்  ஒருவர் பகவான் இதனை ஊக்குவிப்பதில்லை இங்கே இருக்கும் போது உங்களுடைய குடும்பக் கவலைகள் எல்லாம் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள் அல்லவா.  வீட்டுக்குப் போங்கள் அங்கும் அவ்வாறே இருக்கப் பாருங்கள் என்று சொன்னார்.


 நடேசனாருக்கு இன்னமும் முழுநம்பிக்கை வந்த பாடில்லை. ஒரு குருவிடம் சீடனுக்கு ஏற்படக்கூடிய நம்பிக்கை ஏனோ அவருக்கு இல்லாமல் போனது. பகவான் தடை உத்தரவு போட்டிருந்தும் அவர் துறவு கொண்டார். ஆனால் கொஞ்சநாள் சிரமத்திற்குப் பின் போதுமடா சாமி குடும்பத்திற்கே திரும்பிவிட்டார். மற்றவர்களைப் பார்க்கிலும் பகவானிடம்  அதிகமாக  நடேசனார் உரையாடிய பெருமை அவருக்கு உண்டு.


வட இந்தியாவிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்கள் பற்றி நாளைய பதிவில்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி