ரமணமகரிஷி (21)

 ரமணமகரிஷி (21)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 21

பகவான் ஸ்ரீரமணர் குறித்தான தொடர் 21 கணபதி சாஸ்திரி அவர்கள் பகவான் ஸ்ரீ ரமணரை சுப்பிரமணியரின் அவதாரம் என்று குறிப்பிட விரும்பினார். ஆனால் மற்ற சீடர்கள் இந்த விஷயத்தில் அவரை பின்பற்ற மறுத்தனர். ஒரு குறிப்பிட்ட தெய்வ அம்சம் என்று பகவானை ஒரு வரையறைக்குள் வைக்க  அவர்கள் விரும்பவில்லை. அவர்  எல்லையற்றவர்  என்பது அவர்கள் கருத்து. சாஸ்திரியின் விருப்பத்தையும் பகவானும் அனுமதிக்கவில்லை.


 பகவான் அதற்கு பதிலளிக்கையில் அவதாரம் என்றால் என்ன.கடவுளை அம்சத்தில்  ஒன்றை வெளிப்படுத்துவது ஆனால் "ஞானி"யோ கடவுளாகவே மாறிவிடுகிறார் என்றார்.


 கணபதி சாஸ்திரியும் மற்ற சீடர்களும் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நிறைய கேள்விகளை  கேட்டு பகவானின் பதில்களைப்  பெற்றனர்.


 நான் என்ற எண்ணம் எழும் இடத்தில் மனதில் இருப்பது முக்கியமா அல்லது மந்திரி மந்திர ஜெபத்தை பற்றிக் கொண்டு போகலாமா என்று கேட்டனர்


 எது என்னுடைய குறிக்கோளை அடைய எளிய வழி என்றும் கேட்டனர்.


 நான் என்ற நிலை எழும்  இடத்தில் மனம் வைத்திருந்தால் போதும் எதுவும் செய்ய வேண்டியதில்லை.


 உங்கள் பாரத்தை எல்லாம் கடவுளிடம் கொடுத்து விடுங்கள் அவர் பார்த்துக் கொள்வார்.நடக்க வேண்டியவை எல்லாம் நீங்கள் சரியாக நடக்கும் என்று தொடர்ந்து பேசினார்.


 இந்த விஷயம் எழும் இடத்திலேயே லயித்திருந்தால் குறிக்கோள் அற்ற நிலை அற்புதமாக உருவாகும். நான் இருக்கிறேன் என்ற விஷயம் கரைந்து போகும். அப்படி கரைந்து போன பிறகு   

 குறியாவது?  கோளாவது?  நம்மால் நிறைவேற்றக்கூடிய அத்தனையும் தற்போது வெகு இயல்பாக நிறைவேறும்.


 சர்வ சாதாரணமாக ஒரு பூ மலர்வதையே  போல நிகழும் விஷயத்தை முன்னிலைப் படுத்தினால் நான் கடுமையாக உழைத்தது போலவும்,  சாமர்த்தியமாக செல்வது போலவும். உலகம் அதை தூக்கி பிடித்துக் கொண்டாடுவது போலவும், யாரோ சிலர் அதை எதிர்பார்த்தது போலவும் தோன்றும்.


நம்மால் விளைந்தது எதுவுமே நம்மால் விளைந்தது அல்ல என்ற ஒரு விடுதலையான உணர்வு வர செய்ததை கொண்டாடி கொள்ள தோன்றாது.


 பகவானிடம், மூளையே உடம்பில் முக்கிய அங்கமாயென விவாதிக்கப்பட்டது.


 பகவான் ரமணர் அதை மறுத்து, இதயமே மிக முக்கியமான விஷயம் என்றார்.

புத்தியை விட இதயமே முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.


 அக்கூட்டத்தில் இருந்த அருணாச்சலம் என்ற மாணவனும் ஸ்ரீ ரமணரின் உரையாடல்களை  ஆங்கில மொழியில் கட்டுரையாக புனைந்தார்.


 சூரியனிலிருந்து கிளம்பிய ஒளி எப்படி சந்திரனையும் நட்சத்திர மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் ஒளிர்விக்கின்றதோ அதே போல் இதயம் புத்தியையும்,

புத்தியி ன்  மூலமாக மற்ற உறுப்புகளையும் இயங்கத் தூண்டுவது இதயத்தில் உள்ள சக்தியும், ஒளியுமே புத்தி இயங்க காரணம்.


 புத்தியின் வலிவு  புலன்களைத் தூண்டுதல், புலன்கள்களால்  வாழ்க்கை அனுபவங்கள்  ஏற்படுகின்றன.

 வாழ்க்கை அனுபவங்கள் மனதில் பதித்து ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன இந்த தோற்றங்களுக்கு இந்த அனுபவங்களுக்கு புலன்களில் சக்திக்கு புத்தியின் வலுவுக்கு இதயமே காரணம். இப்போது இதயத்திலிருந்து தோன்றுகின்ற சக்தி ஒளி எங்கிருக்கிறது என்ன என்று பார்க்கும் போது மனம் அமைதி அடைகிறது.


 இவ்வாறான கணபதி சாஸ்திரி அவர்களின் அவளின் கேள்விக்கு கமல்நகர் அறிவுறுத்திய கருத்துடன் "ரமண கீதையில்'' என்னும் நூலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.


 பகவான் ஸ்ரீ ரமணர் அருளால், கணபதி  சாஸ்திரிகள் உண்ணாமலை அம்மன் முன் ஒரே இரவில் 300 பாடல்கள் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


பகவான் ஸ்ரீரமணரை  பார்க்க வெளிநாட்டில் இருந்தும் பலர் வந்தனர். அவர்கள் குறித்தான விவரம் நாளைய பதிவில்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,