அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல் அமைச்சர் பழனிசாமி,
வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Comments