ரமணமகரிஷி பகுதி (3)
ரமணமகரிஷி
தொடர்
பகுதி (3)
ஒருவர் தம் மனதில் என்ன நினைக்கிறாரோ அவர் அதுவாகவே மாறிவிடுவார். காரணம் மனதில் தோன்றும் அந்த எண்ணங்களே செயல்வடிவமாகும்.
மனது உள்ளுக்குள் இருக்கும் பொறி. அது எந்த இடத்தில் இருக்கிறது என்பது எவராலும் இதுவரை கண்டுப் பிடிக்கப்படாதது. இனிமேலும் கண்டுபிடிக்க முடியாதது.அந்த மனம் தான் வலிமையான பலம் கொண்டது. அதே சமயம் பலவீனமும் கொண்டதும் அதுவே.
வேங்கடராமன், மற்ற இளைஞர்களைப் போலே விளையாட்டில் நாட்டம் கொள்ளாமல் தியானத்திலும், வழிபாட்டிலும் தனது நேரத்தை கழிக்க தொடங்கினார். உடன் பிறந்தவர்களுக்கு இது புதிராக இருந்தது. பள்ளிப் படிப்பிலும் ஆர்வமில்லை. அவரது மனக்கண்ணில் தெரிந்தது எல்லாம் அருணாச்சலம் மட்டுமே.
வேங்கடராமன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பள்ளிகூடத்துக்கு கிளம்பினார்.
பெட்டியில் பணம் இருக்கிறது பார். அதில் ஐந்து ரூபாய் எடுத்துக் கொள் என்றார் அவரது சகோதரர் நாகசாமி.
பயணச் செலவுக்கு அளிப்பது போல் இருந்தது. வேங்கடராமன் மாடியிலிருந்து கீழே இறங்கியதும் அத்தை சாப்பாடு போட்டார் அவசர அவசரமாக சாப்பிட்டார் அங்கே ஒரு அட்லஸ் இருந்தது.புரட்டினார் அதில் திருவண்ணாமலை போக திண்டிவனம் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
ரயில் செலவுக்கு ரூபாய் மூன்று மட்டும் போதும் என்று பட்டது அவருக்கு. அதை மட்டும் எடுத்துக் கொண்டு தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தார்.
அதில் என்னுடைய இறைவனே அவருடைய கட்டளையின்படி தேடிப் போகிறேன். நீங்கள் யாரும் இது பற்றி வருந்த வேண்டியதில்லை.
வேங்கடராமன் வீட்டை விட்டு வெளியேறும் போது நண்பகல் நேரம். அரை மைல் தூரத்தில் இருந்து ரயில் நிலையம். 12 மணிக்கு ரயில் விரைந்து நடந்தார் அவர் ரயில் நிலையத்தை அடைந்த போது தாமதமானாலும் ரயில் அதை விட தாமதமாக விட்டிருந்தது. ரயில் நிலைய கட்டண பலகையை பார்த்தார். திண்டிவனத்துக்கு இரண்டு ரூபாய் பதின்மூன்று அணாக்கள் என்று போடப்பட்டிருந்தது.
வண்டி வந்தது வேங்கடராமன் வண்டியில் ஏறி பயணிகளிடையே அமைதியாக உட்கார்ந்தார்.
அப்பயணத்தில் அருகில் இருந்த ஒருவர், தாங்கள் எங்கு போகவேண்டும் என்று கேட்டார். திருவண்ணாமலை என்றார் வேங்கடராமன். திண்டிவனம் வரை டிக்கெட் வாங்கி விட்டேன் என்றார். உடனிருந்த பயணி அடடா அவ்வளவு தூரம் சுத்த வேண்டாமே விழுப்புரத்தில் இறங்கி திருவண்ணாமலைக்கு வண்டி மாறி செல்ல வேண்டும் அவ்வளவு தான் என்றார்.
கடவுள் அருளால் போதிய விவரம் கிடைத்தாயிற்று வேங்கடராமன் பரவச நிலையில் ஆழ்ந்தார்.
வண்டி திருச்சி அடைந்த போது பொழுது சாய்ந்து. வண்டி விழுப்புரம் அடையும் போது விடியற்காலை மணி மூன்று.
பொழுது விடியும் வரை ரயில் நிலையத்தில் இருந்தார். பிறகு நகரத்தின் நுழைந்து திருவண்ணாமலைக்கு வழி சாலையை தேடி அலைந்தார். மிச்சமுள்ள தூரத்தை நடந்து விடுகிற தீர்மானம்.சாலை அறிவிப்பு பலகை எங்கும் இல்லை எனினும் அவர் யாரிடமும் வழி கேட்க விரும்பவில்லை நடக்கத் தொடங்கினார்.
கொஞ்ச நேரம் நடந்ததும் பசியும், களைப்புமாக உணர்ந்தார்.ஒரு உணவு விடுதி தென் பட்டது.
உள்ளே நுழைந்தவர் சாப்பாடு கிடைக்குமா என்று கேட்டார்.
சாப்பாடு மதியமென பதில் வந்தது. வேங்கடராமன் அப்படியே உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். மதியம் ஆனது. சாப்பாடு வந்தது.சாப்பிட்டதும் பில் தொகை கேட்டு இரண்டணாவை எடுத்து நீட்டினார். பார்க்க குறைந்த வயதினராய் இருந்தாலும், சாது வாக தெரிகிறது என்று விடுதிக்காரர் நினைத்திருக்க வேண்டும். வேங்கடராமனின் நீண்ட தலைமுடியும் கையும் காது கடுக்கன்களும் அந்த நினைவைத் தோற்று வித்திருக்கக்கூடும்.
ஆம்பீ, எவ்வளவு இருக்கிறது என விடுதிக்காரர் கேட்க இரண்டு அணா என வெங்கட்ராமன் சொல்ல பரவாயில்லை வெச்சிக்கோ என பில் தொகையை
வாங்க மறுத்தார். அங்கிருந்து மாம்பழப்
பட்டு வந்தார். அப்போது சாயங்காலம் ஆனது. அங்கிருந்து 10 மைல்கள் நடக்கலானார். அவருக்கு முன்பாக அரையநல்லூர் பெரிய கோவில் கம்பீரமாக தெரிந்தது. நடந்த அலுப்புக்கு கோயில் படியில உட்கார்ந்து இளைப்பாறினார்.
வேங்கடராமன் குருக்களை அணுகினார். எனக்கு சாப்பாடு ஏதேனும் கிடைக்குமா என்றார் இல்லை என்று பதில் வந்தது. ராப்பொழுது இங்கே தங்கிக்கலாமா என்று கேட்டார் கூடாது என்று பதில் வந்தது.
குருக்களும்,பரிசாரகரும் கீழுர் போகிறவர்கள். முக்கால் மைல் தூரத்தில் இருந்தது அந்த ஊர்.அங்கே கோயில் பூஜை அங்கே வந்தால் இரவு சாப்பாடு கிடைக்கும் என்றனர் வேங்கடராமனும் அவர்களோடு சேர்ந்து கொண்டார். அன்று இரவு கோயில் மணி அடிக்கும் பணியாளர் தனது சாப்பாட்டை வேங்கடராமனுக்கு தந்தார். அந்த இரவு அந்த ஊரிலே தங்கினார்.
மறு நாள் காலை கோகுலாஷ்டமி தினம். இன்னும் திருவண்ணாமலை 20 மைல் தூரம் உள்ளது.
வேங்கடராமனின் இன்றைய பொழுது நாளைய பதிவில்.
முருக.சண்முகம்
Comments