ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பயணத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
அதன் பின்னர் இந்த ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. குறைவான பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments