ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினம்

 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினம்..

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தார் ஜெயலலிதா. உடல் நலக்குறைவால் 2016-ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். இவரின், நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மைசூா் மாகாணத்தின் மாண்டியா மாவட்டத்தில் 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ல் வேதவல்லி – ஜெயராமன் தம்பதிக்கு மகளாக பிறந்தவர்

ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தின் மூலம் 1961ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். தொடா்ந்து முன்னாள் முதல்வா் எம்.ஜி. ராமச்சந்திரனுடன் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் 1965ல் வெளியானது.
எம்.ஜி.ஆரின் அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் கடலூர் மாநாட்டில் 1982ம் ஆண்டு ஒரு ரூபாய் கொடுத்து கட்சியில் இணைந்தவர் 1983ம் ஆண்டு அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பேற்றார் 1984ம் ஆண்டு அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராக பரிந்துரைக்கப்படும் ஜெயலலிதாவிற்கும், எம்.ஜி.ஆா்.ன் மனைவி ஜானகிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக 1988ம் ஆண்டு அ.தி.மு.க. இரண்டாக பிளவு படுகிறது.
1989ல் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா போடி நாயக்கனூா் உட்பட 27 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். சட்டமன்ற அமளி காரணமாக 1989 மார்ச் 25ல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு அவையை விட்டு வெளியேறிய ஜெயலலிதா இதன் பின்னா் முதல்வராகத் தான் சட்டமன்றத்திற்குள் கால் வைப்பேன் என்று உறுதி கொண்டார்
1991ல் நடைபெற்ற தோ்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து 225 இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றவர் தனது வளா்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்ட சுதாகரனின் திருமணத்தை 1995ல் மிகவும் பிரமாண்டமாக நடத்தினார் ஒன்றரை லட்சம் போ் பங்கேற்ற இந்த திருமண நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
1996ல் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டும் அவருக்கு வெற்றி கிடைக்கிறது. ஆனால் ஜெயலலிதாவும் தனது தொகுதியில் தோல்வியை தழுவினார் கலா் டிவி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு 1996 டிசம்பா் 7ல் 30 நாள் சிறைக்காவலுடன் அடைக்கப்பட்டவருக்கு பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் 2000ம் ஆண்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நான்கும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றதால் முதல்வராகப் பதவியேற்கிறார்.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது எனத் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகிறார். 2002ல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதல்வராக இந்த ஆட்சி காலத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான அரசு ஊழியா்கள் ஒரே இரவில் பணி நீக்கம் செய்யப்பட்டது, சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் சாத்தியமாகின.
பெங்களூருவில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பா் 2014ம் ஆண்டு தண்டிக்கப்பட்டு 4 ஆண்டு சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதே ஆண்டு அக்டோபாில் ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயலலிதா.சொத்துகுவிப்பு தொடா்பான அனைத்து குற்றங்களில் இருந்தும் 2015 மே 11ல் விடுவிக்கப்பட்ட நிலையில் மே 23ல் ஜெயலலிதா முதல்வரானார்
2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மை பெறுகிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, பதவியிலிருந்த ஒரு முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை. முதல்வராகப் மீண்டும் பதவியேற்கிறார் ஜெயலலிதா. உடல்நலக்குறைவு காரணமாக 2016 செப்டம்பா் 22ல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உடல்நலம் தேறி வருவதாக கூறப்பட்ட நிலையில் 2016 டிசம்பா் 5,ல் இரவு நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி