ரமணமகரிஷி (9

ரமணமகரிஷி (9)

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :

பகுதி 9




 தனது இல்லற வாழ்வில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர்  மண்டகொளத்தூர்  கிராமத்துப் பெண்மணி எச்சம்மாள். தன் துயரினை மறக்க கோகர்ணம் ( மகாராட்டிர மாநிலம்) சென்றார்.  ஆனால் அந்த அம்மையாரின் துயரம் கடுகளவும் குறைந்தபாடில்லை.   அங்கே திருவண்ணாமலை ரமணரைப் பற்றி யாரோ சொல்லக் கேட்டு  உடனே அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்து விட்டார்.


 பகவான் ஸ்ரீ ரமணரை  தரிசித்தாள். தன்னுடைய துக்கத்தை அவரிடம் சொல்லவில்லை. சொல்லுகிற அவசியம் இல்லாது போயிற்று. அவருடைய கண்களில் தெரிந்த பரிவு வெள்ளமாய்ப் பெருகி அவளது கவலைகள் அறவே நீங்கியது. ஒரு மணி நேரம் பகவான் முன் நின்றாள்.

 அவளுடைய மனம் மிகவும் ஒருவித தெளிவை அடைந்தது


 அன்று முதல் எச்சம்மாள் சுவாமியை தரிசிக்க தினமும் வந்தாள்  தன்னுடைய வாழ்நாளில் எஞ்சிய பகுதியை அவள் திருவண்ணாமலையி ல் கழித்தாள். அங்கேயே ஒரு சிறிய வீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டாள்  அவருடைய தந்தையார்  மற்றும் சகோதரர் அந்த அம்மையாருக்கு கொடுத்த பணமும், அதற்கு உதவியது.


 தினமும் பகவானுக்


காக உணவை அவர் தயாரித்தாள். ஆசிரமம் முழுதுக்குமான உணவு என்று தான் சொல்ல வேண்டும். காரணம் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாத எதையும் பகவான் உண்பதில்லை. அவர்களுக்கு பரிமாறிய பிறகே  எச்சம்மாள்  உண்பார். முதுமையும் உடல்நலக் குறைவும் ஒரு இயலாமையை ஏற்படுத்தும் வரை அவருக்காக அவள் சமைத்தாள்.ஒரு கட்டத்தில் ஆசிரமவாசிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. எச்சம்மாள்  கொடுத்தனுப்பும் உணவு அவரது தேவையை ஓரளவு தீர்க்கும் என்றபோதிலும் பகவான் அவளது உணவு வரும் வரை  சாப்பிடாமல் காத்திருப்பார்.


தம் வாழ்நாள் முழுவதும், பகவானின்   தரிசனம் ஒன்றே நினைத்த   அந்த அம்மையாருக்கு பேரானந்தமே தந்தது.


 எதிர்ப்பது மனித குணம். அதிலும் ஒரு அநியாயம் அல்லது அக்கிரமத்தை காணும் போது அதனை தட்டிக் கேட்க மனம் துடிக்கும். ரமணர் சொல்வார். அந்த எதிர்ப்பை    விடு. நடக்கிறது நடக்கட்டும் எதையும் தடுக்க வேண்டாம் என்று. காரியம் எதுவும் நமது விருப்பம் போல நடப்பதில்லை. அனைத்து முன்பே திட்டமிடப்பட்டவை. அப்படியிருக்க அதனதன் போக்கில் விடுவதுதான் நியாயம் என்று அவர் நினைத்திருக்கலாம்


பகவான் கண்ட வழிமுறை இது தீமைகளை எதிர்க்க வேண்டியதில்லை மனித இனம் முழுமைக்காக அவர் வகுத்த விதிமுறையல்ல இது. தன்னைப் பின்பற்று கிறவர்களுக்காக ஏற்படுத்திக் கொண்டது.


 அதிஷ்டத்தை இரு கை நீட்டி வரவேற்க நீங்கள் துரதிர்ஷ்டத்தை கண்டால் தூர விலகிப் போவது ஏன்? கடவுள் நல்லதை கொடுத்தால் நன்றி சொல்கிற நீங்கள் கெட்டது என்று படுகிற போது ஏன் அவரை நொந்து கொள்வது என்று கேட்கிறார்.


 ரமணர்  சொல்ல வருவது இதுதான். பொருள்களையும் காரியங்களையும் வேறுபடுத்திப் பார்க்காதே. எல்லாம் ஒன்றுதான். நீ காண்பது யாவும் முடிகின்ற ஒன்று என்பதை புரிந்துகொள்.


 ரமணருக்கு பிறர் தீங்கு செய்ய முற்பட்ட போதும்,, இடையூறு செய்ய முனைந்த போதும் பகவானின்  மனோபாவம் இயல்பாகவே இருந்தது.


 சாதுக்கள் உலகிலும், மோசடிப் பேர்வழிகள் உண்டு,  தங்களுக்குள் உயர்ந்த  எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல், தீயவையும் வளர்த்துக் கொள்வதுண்டு.


 பகவான் ரமணர், திருவண்ணாமலையில் தங்கி இருந்தபோது மலைக்குகை ஒன்றில் வசித்து வந்த மூத்தத் துறவி ஒருவரின் நிலை மேற்குறிப்பிட்டது போல் அமைந்திருந்தது. அந்த மூத்தத் துறவி யின் எண்ணங்களின் விவரம்  நாளைய பதிவில்.


முருக.சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி