சி. இராசகோபாலாச்சாரி
சி. இராசகோபாலாச்சாரி
(10 டிசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நடபாகி விட்டார்,1952 -54 காலகட்டத்தில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் செனரலாக பொறுப்பாற்றினார்.
Comments