மீண்டும்_ஒருபாலியல்_வன்முறை
#மீண்டும்_ஒருபாலியல்_வன்முறை
சென்னை எண்ணூரில்...சட்டத்தை காக்க வேண்டிய போலீஸ்காரர்களே...
பதிமூன்று வயது பெண் குழந்தையை நாற்பது வயதை தாண்டிய போலீஸ்காரர்களும் சில அரசியல் பிரமுகர்களும் சேர்ந்து இரண்டு மாதமாக நானூறு முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். எழுதும் அளவிற்கு கூட மனதில் தெம்பில்லை. பதிமூன்று வயது பெண்ணிடம் என்ன இருக்கும் என்று....🤬 வெறும் பணியிடை நீக்கம் போதுமா? ஏழைகளாக இருந்தால் நீதி, நியாயம் கூட தூக்கு போட்டு இறந்துவிடும் போல.
எழுதி எழுதி ஓய்ந்துவிட்டேன்.
காபி பேஸ்ட் மட்டும் செய்கிறேன் செய்தியை. பத்தோடு பதினொன்றாக இதையும் கண்மூடி கடந்து போய்விடுங்கள்.
/13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னையில் 13 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு (வயது 22), மதன்குமார் (35), அவரது தாய் செல்வி (50), தங்கை சத்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் இதுபோல் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது. மேலும் இந்த வழக்கில் கார்த்திக் (25), மகேஸ்வரி (29), வனிதா (35), ஈஸ்வரி (19), விஜயா (45), திலீப் (25) உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் கைதான சத்யா கொடுத்த தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தரகர் ராஜேந்திரன் (44) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர், சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதும், பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்ததும், இதேபோல் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கும்(46), மற்றும் அவரது நண்பர் ஜி. ராஜேந்திரன்(44) (வடக்கு சென்னையில் ஒரு அரசியல் கட்சி செயல்பாட்டாளர்) இவர்களுக்கு செப்டம்பர் மாதம் வாஷர்மேன்பேட்டிலுள்ள அலுவலகத்தில் அந்த 13 வயது சிறுமியை பாலியலுக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.
13 வயதான சிறுமி எப்படி இந்த கும்பலிடம் மாட்டினார் என்று விசாரித்ததில், பாதிக்கப்பட்ட சிறுமி கோவளத்தில் தனது தாயுடன் வசித்து வந்தார், பள்ளிப் படிப்பை முடித்த இவர் திருவொற்றியூரில் வசிக்கும் உறவினர்,பானு 22 என்ற பெண்ணின் வேண்டுகோளின் பேரில், சிறுமி தனது இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்கு உதவ அங்கு சென்றார். அப்போது தான் பானுவின் நண்பரான மதன் மூலம் சிறுமி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார், சிறுமியை திரும்ப பெறுவதற்காக அவரது தாயார் உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து தேடி வந்தது.
இந்த குழு நவம்பர் 12 ம் தேதி ஆறு பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்தது. மேலதிக விசாரணையில் ராஜேந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் புகழேந்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்ஸ்பெக்டர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். மேலும் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார். விபசார தரகர் ராஜேந்திரனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த புகழேந்தி சென்னை எண்ணூரில் உள்ள காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு(law and order) துறையின் இன்ஸ்பெக்டர் ஆவர் என்பது தான் வருத்தப்பட வேண்டிய ஒன்று. இந்த மாதிரி சட்டத்தை மதிக்க வேண்டிய காவலர்கள் இப்படி கீழ்த்தரமான சம்பவத்தில் ஈடுபடுவது புதிதல்ல.
சாதாரண மக்கள் தவறு செய்தால் அடித்து இழுத்து செல்லும் காவலர்கள், அவர்களே தவறு செய்யும்போது கம்பீரமாக நடந்து செல்வது தான் வேதனைக்குரியது… அடிக்கடி காவலர்கள் அத்துமீறுவது அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது அதற்கு காரணம் இவர்களுக்கு தரும் குறைந்த பட்ச தண்டனை மட்டுமே கரணம் என்று கூறுகின்றனர், சமூக ஆர்வலர்கள்.
சாதரண மக்கள் தவறு செய்தால் கொடுக்கப்படும் தண்டனை, உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் தவறு செய்தால் கொடுக்கப்படுகிறதோ அப்போது தான் இதுபோல குற்றங்கள் குறையும் என்றும் கூறுகின்றனர்./
Comments