இரவில் தாமதமாக உணவு உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்.
இரவில் தாமதமாக உணவு உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்.
பொதுவாக நம்மில் பலர் சரியான நேரத்திற்கு உணவினை எடுத்து கொள்ள மறுக்கின்றனர்.
கண்ட நேரத்தில் உணவு சாப்பிட்டால் அது நமது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் சரியான நேரத்தில் உணவை சாப்பிடுதல் மிக முக்கியமானதாகும்.
நேரம் தவறி சாப்பிடுவதால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து ஆபாய நிலைக்கு தள்ளி விடும்.
அந்த வகையில் 9 மணிக்கு மேல் இரவு உணவை சாப்பிட்டால் என்னென்ன ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என்பதை பார்ப்போம்.
என்ன ஆபத்து ஏற்படும்?
தினமும் இரவு நேரம் தாழ்த்தி சாப்பிடுவதால் மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவு, எளிதில் செரிமானிக்காத உணவுகளை இரவு நேரம் தாழ்த்தி சாப்பிடுவதால் எளிதில் புற்றுநோய், இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.
உண்ட உணவை செரிமானிக்காமல் துவங்குவதால் கழிவுகளை வெளியேற்ற நேரம் கிடைப்பதில்லை.
எனவே கொழுப்புகள் சேர்வது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். அதோடு புற்றுநோய் ஆபத்தையும் அதிகரிக்கும்.
Comments