ஞாயிறு மலர் (திரைப்பக்கங்கள் )

   ஞாயிறு  மலர் (திரைப்பக்கங்கள் )
















இயக்குனர் கர்ணன் நினைவு தினம் டிசம்பர் 13 ,


கர்ணன் (இறப்பு: டிசம்பர் 13 , 2012 )
தமிழ் திரைப்பட
ஒளிப்பதிவாளரும்
இயக்குநரும் ஆவார். ஏறத்தாழ
150 திரைப்படங்களில்
ஒளிப்பதிவாளராகவும் 25
திரைப்படங்களில்
இயக்குநராகவும் பணியாற்றி
உள்ளார். கே. எஸ்.
கோபாலகிருஷ்ணனின் கற்பகம்
திரைப்படத்தில் அறிமுகமாகிய
கர்ணன் மதுரையை மீட்ட
சுந்தரபாண்டியன், வீரபாண்டிய
கட்டபொம்மன் , கப்பலோட்டிய
தமிழன் , சிம்லா ஸ்பெஷல்,
பொல்லாதவன் , சிவப்பு சூரியன்
உட்படப் பல திரைப்படங்களில்
ஒளிப்பதிவாளராக
பணியாற்றியுள்ளார். பல சாகசக்
காட்சிகளைத் திறம்பட படம்
பிடித்தவராக
அறியப்படுகிறார். இவர்
இயக்கிய ஜம்பு திரைப்படத்தில்
நீரினடியே எடுக்கப்பட்ட
காட்சிகளும் இவரது
மேற்கத்திய பாணி
திரைப்படங்களில் குதிரைத்
துரத்தல்களை படம் பிடித்த
விதமும் பெரிதும்
பேசப்பட்டன.
இவருக்கு சகுந்தலா என்ற
மனைவியும் பாமா, தாரா என்ற
இரு மகள்களும் உள்ளனர். தமது
79வது அகவையில் திசம்பர் 13,
2012இல் மாரடைப்பால்
காலமானார்.
இயக்கிய திரைப்படங்கள் சில
காலம் வெல்லும் (1970)
ஜக்கம்மா (1972)
கங்கா (1972)
ஒரே தந்தை (1976)
எதற்கும் துணிந்தவர்கள் (1977)
புதிய தோரணங்கள் (1980)
ஜம்பு (1980)
இணையத்தில் இருந்து எடுத்தது
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

சாய் பல்லவியின் கருத்தால் சர்ச்சை



தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் சாய் பல்லவி தற்போது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
மரியாதை இல்லை - சாய் பல்லவியின் கருத்தால் சர்ச்சை
சாய் பல்லவி
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்ததினால், தமிழ் தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமான இவர் படங்களிலும் நடன திறமையை நன்றாக காட்டக்கூடியவர். அதற்கு உதாரணமாக மாரி 2 வில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் அமைந்தது. சாய் பல்லவி, தற்போது மலையாள திரை உலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கு உள்ள வேறுபாட்டை சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
சாய் பல்லவி
அதன்படி மலையாளத் திரையுலகில் அனைவரையும் ஒரே மாதிரி சமமாக நடத்துகிறார்கள் என்றும் ஆனால் தெலுங்கு திரை உலகில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அக்கறை காட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தெலுங்கு திரை உலகில் பிறமொழி நடிகைகளுக்கு சமமான மரியாதை கொடுப்பதில்லை என்பது போன்ற ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மனைவி பாப்ஜி வுடன் ஜெமினி கணேசன் !
இணையத்தில் இருந்து எடுத்தது




















==========================================================

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகின்ற நலம்தானா? என்னும் பாடலும், அந்த நடன கீதத்துக்கு ஏற்ப நலமாக ஒலிக்கும் நாதசுர இசையும் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.


நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கியவர்கள், நாதசுரக் கலைஞர்களான திருவாளர்கள் மதுரை எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள் ஆவர்.
பம்பாய், டெல்லி போன்ற பெரிய நகரங்களிலும், தமிழகத்தின் பல இடங்களிலும் நாதசுர இசையினால் பலருடைய இதயங்களைக் குளிர்விக்கும் இவர்கள் ராஷ்டிரபதி பவனிலும் இசை மழை பொழிந்திருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் முன்னாள் ராஷ்டிரபதி டாக்டர் ராதாகிருஷ்ணனும் இவர்கள் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார். திரு.காமராஜர் இந்தச் சகோதரர்களின் இனிமையான நாதசுர வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்து இவர்களுக்கு அளித்த தங்க மெடலை, மத்திய உள்துறை அமைச்சர் திரு.சவானிடம் யுத்த நிதிக்காக மனமுவந்து கொடுத்துத் தங்கள் மனமும் தங்கமென அறிவித்திருக்கிறார்கள்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன், இயக்குநர் ஏ.பி.என், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இருவர் முன்னிலையில் முதலில் வாசித்திருக்கிறார்கள்.
அடுத்த நாள், இன்னொரு முக்கியஸ்தர் முன்னிலையிலும் வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு மணியல்ல, இரண்டு மணியல்ல, மூன்று மணி நேரத்துக்கு மேல் அவர்களின் நாதசுர இசையைக் கேட்டுக் களித்த பிறகே படத்துக்கு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தாராம் அந்த முக்கியஸ்தர்.
அவர் வேறு யாருமல்ல. தில்லானா மோகனாம்பாளில் நாதசுர கலைஞராகத் தோன்றி, நாதசுரக் கலைஞர்களே வியக்கும் வண்ணம் முகபாவங்களுடன் அற்புதமாக வாசித்த பிறவிப் பெரும் நடிகர் சிவாஜி கணேசன்தான்.
நாதசுர வித்துவான்கள் நாங்களா, அவரா என்று வியக்கும் வண்ணம் சிக்கல் சண்முக சுந்தரம் வெளுத்து வாங்கிவிட்டார் என வாய்க்கு வாய் நடிகர் திலகத்தை மெச்சிப் பூரிக்கிறார்கள் நாதசுர சகோதரர்கள்.
ஏ.பி.நாகராஜன் பற்றிக் கேட்ட போது “அவர் எங்களின் உற்ற நண்பர். அவரை எங்கள் குடும்பமே தெய்வமாக வணங்கி வருகிறது. தில்லானா மோகனாம்பாள் வெளியாவதற்கு முன் எனக்கு ஓர் ஆபரேஷன் நடந்தது. அச்சமயம் அதற்கான செலவுத் தொகை பூராவையும் கொடுத்து, என் உயிரையே மீட்டுக் கொடுத்த இரக்க உள்ளம் படைத்தவர் ஏ.பி.என்.” என்றார் சேதுராமன்
இணையத்தில் இருந்து எடுத்தது
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
சார்பாட்டா பரம்பரை’



பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வைரலானது
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனை ஆர்யா நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 11-ஆம் தேதி ஆர்யாவுக்கு பிறந்தநாள் வரும் நிலையில், கமல் பாராட்டி இருப்பது, பிறந்தநாள் பரிசு என்று ஆர்யா கூறியிருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

    

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    எல்லாம் அழுகையிலிருந்தே தொடங்குகின்றன!

kim-ki-duk

பார்வையாளனின் உள்ளுறுப்புகளுக்குள்ளும் உணர முடியும் வன்முறை மூலமும் தியானமும் இருளும் கவித்துவமும் கொண்ட பாலுறவுக் காட்சிகள் மூலமும் எதைத் திரும்பத் திரும்ப கிம் கி டுக் வலியுறுத்தினார்?
தென் கொரியாவின் சமூக எதார்த்தம், பொருளாதார எதார்த்தம், ஆண் பெண் உறவுகளின் எதார்த்தம்தான் கிம் கி டுக்கின் களம். ஆனால், ஓர் உருவகக் கதைபோல எதிரெதிர் குணங்கள் கதாபாத்திரங்களாக முரண்படுவது வழியாக, ஓர் அற்புத எதார்த்தத்தையும் உலகளாவிய குணாம்சத்தையும் உருவாக்கிவிடுபவர். கடந்த இருபது ஆண்டுகளில் தென் கொரியாவுக்கு வெளியே உலக சினிமா பார்வையாளர்களை வியக்கவைத்த சில சினிமா மேதைகளில் ஒருவர் கிம் கி டுக். கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உலக சினிமா பார்வையாளர்களின் மத்தியில் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாகக் கொண்டாடப்பட்ட படைப்பாளியும்கூட.
சமகால நகர்ப்புற வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும், அதன் காரணமாக உருவாகும் வன்முறையையும் குரூரங்களையும் எந்த ஜோடனையும் இல்லாமல் வெளிப்படுத்திய படங்கள் இவருடையவை. சினிமாவைப் பொறுத்தவரை 59 வயது என்பது விடைபெறுகிற வயதில்லை. மார்ட்டின் ஸ்கார்ஸஸி, டெரன்ஸ் மாலிக் தொடங்கி வெர்னர் ஹெர்சாக் வரை 70 வயதுக்கு மேலும் தங்களது உச்சபட்சப் படைப்புத்திறனை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் கலைஞர்கள்தான்.
மீட்சியற்ற தன்மை
‘பேட் கை’ திரைப்படம் வழியாகத்தான் தீவினையின் ஒட்டுமொத்த சொரூபமாக எனக்கு அறிமுகமானார் கிம் கி டுக். நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்ட ஒரு வேலைக்குப் போகும் இளம் பெண்ணை, பாலியல் விடுதித் தரகனும் ரெளடியுமான ஒருவன் கடத்திக் கொண்டுபோய் தனது கைதியைப் போல வைத்திருப்பதுதான் கதை. கடைசி வரை அவனது வன்முறை, பிடிப்பிலிருந்து மீள முடியாத அப்பெண்ணின் கதையைப் பார்த்து முடிக்கும்போது இந்த வாழ்க்கையிலும் இந்த உலகத்திலும் நீடித்துவரும் மீட்சியற்ற தன்மைக்கான எத்தனையோ உதாரணங்களை எத்தனையோ கதாபாத்திரங்களை அந்தப் படம் ஞாபகப்படுத்தும். ஒரு திரைப்படம் வழியாகக் கணநேர மீட்சியை, கணநேர விடுதலையை, கணநேர நிவாரணத்தைக் கோரிச் செல்பவர்களுக்கு கிம் கி டுக் எந்த நம்பிக்கையையும் வழங்குபவர் அல்ல.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஆஸ்திரிய ஓவியரான எகான் ஷீலேவின் ஓவியங்களில் வரும் காயமுற்ற மனிதர்களின் உடல்களைப் பார்த்துத் தாக்கமடைந்த இயக்குநர் கிம் கி டுக், சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் முறையாக ஓவியக் கல்வியைப் பெற்ற ஓவியர்; இரண்டாண்டுகள் கடற்படை வீரராக ராணுவத்தில் பணியாற்றியவரும் கூட. அவர் ஓவியர் என்பதாலேயே அவர் திரையில் சித்தரித்த வன்முறைகளையும் குரூரங்களையும் கவித்துவம், தீர்க்கம், அமைதி, வன்மையோடு நிகழ்த்திப் பார்வையாளரை அறைய முடிந்தது.
பிறக்கும்போது சமமாகத்தானே அத்தனை குழந்தைகளும் பிறக்கின்றன. ஆனால், அவர்கள் வளரும்போது தோற்றம், செல்வப் பின்னணி, வர்க்கம் போன்ற பின்னணிகள் சூழந்து அவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். அப்படிப் பிரிக்கப்படுபவர்கள் எப்போதாவது இணைவதற்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்காகவே ‘பேட் கை’ படத்தை எடுத்ததாகக் கூறுகிறார். சிவப்பு விளக்குப் பகுதியில் வளர்ந்த நாயகன் ஹாங்க் கியின் குணாம்சங்கள் தனக்கும் பிடித்தமானவையல்ல என்று கூறும் கிம் கி டுக், அவனது செயல்களுக்கு அடியில் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்ற ஆழமான காயங்கள்தான் காரணம் என்கிறார். அவனைப் போன்ற மனிதர்களுக்கு வறிய சமூகப் பின்னணியில் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் கிம் கி டுக். தங்கள் மீது செலுத்தப்படும் வன்முறையிலிருந்து அவர்கள் தொடர்ந்து காப்பாற்றப்படாத நிலையில் வன்முறையாளர்களாக மாறுகிறார்கள் என்பதாகக் கூறும் கிம் கி டுக், சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்த ஒருவனிடம் காரணமே இல்லாமல் அடிபட்ட ஒரு சம்பவத்திலிருந்து உருவாக்கிய திரைப்படம் தான் ‘பேட் கை’. இவரது இயக்கத்தில் வெளியான ‘தி அய்ல்' திரைப்படமும் குரூரம், கொந்தளிப்பைக் கொண்ட படைப்புதான்.
ஜென் அனுபவம்
கோபம், வன்முறை, குரூரம் போன்ற காயங்களைக் குணமூட்டும் மன்னிப்பு, சகிப்புத்தன்மை ஆகிய அம்சங்களை கிம் கி டுக் தனது ‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர்... அண்ட் ஸ்பிரிங்’ படைப்பில் பரிசீலிக்கிறார். ஒரு ஜென் கவிதை, ஓவியம், கதை அனுபவத்தை வழங்கும் திரைப்படம் இது. எத்தனை ஆழமான காயமாக இருந்தாலும் அதை ஆற்ற முடியும் என்ற செய்தியோடு இத்திரைப்படம் மூலம் வருகிறார் கிம் கி டுக். தென்கொரியாவின் எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த இயற்கைப் பின்னணியில் அமைந்திருக்கும் ஜூசன் பொய்கையின் நடுவில் இருக்கும் மிதக்கும் பெளத்த மடாலயத்தில் இருக்கும் குருவும் குட்டி சிஷ்யனும்தான் பிரதானக் கதாபாத்திரங்கள்.
அந்த மலையில் இருக்கும் தவளை, பாம்பு, மீனை அந்த சிஷ்யன் துன்புறுத்துவதைப் பார்க்கும் குரு அவனுக்குத் தண்டனை அளிக்கிறார். இம்சை என்றால் என்னவென்பது அவனுக்குச் சிறிய வயதிலேயே புரிந்தாலும் அந்த இம்சை தரும் உயிர்ப்பை விட முடியாத அந்தச் சிறுவன் இம்சையிலிருந்து தொடங்கிக் காதலின் உடைமையுணர்வில் அதனால் செய்யும் குற்றத்தின் நெடும்பாதையில் திரிந்து பயணித்து மீண்டும் வீடு திரும்பும் கதை இது.
வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம், வசந்த காலம் என மனிதர்கள் கடக்கும் உணர்ச்சிகளின் பருவங்களையும் அவற்றின் சுழற்சியையும் கிம் கி டுக் ‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர்... அண்ட் ஸ்பிரிங்' படத்திலிருந்து பரிசீலிக்கிறார். வன்முறை, அமைதி, மீண்டும் வன்முறை என்று இந்த உலகம், இந்த வாழ்க்கை சுழன்றுகொண்டேயிருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார் என்று தோன்றுகிறது.
தற்காலிகமான வாழ்க்கை
கிம் கி டுக்கின் படைப்புகளில் ஓரளவு அமைதியும் கவித்துவமும் கிம் கி டுக்கின் ஓவிய அழகும் கொண்ட திரைப்படமென்று ‘த்ரீ அயர்ன்’ படத்தைச் சொல்வேன். பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் வாழும் வாழ்க்கையை சில நாட்கள் வாழ்வதில் காமுறும் டாய் சுக் என்ற வித்தியாசமான திருடனின் கதை அது. அவன் திருடுவது பொருட்களை அல்ல; அந்த வீட்டின் தற்காலிகமான வாழ்க்கையை. நாயகன் டாய் சுக், தற்செயலாகத் தன்னைப் போலவே தனிமையான பெண் சுன் ஹூவாவைச் சந்திக்கிறான். உரிமையாளர்கள் வெளியேறிய காலி வீடுகளைப் போல இருக்கும் நமது சுயங்கள் எல்லாமே இன்னொருவரின் வருகையால் நிரப்பப்படும்போதே நிறைவை உணர்கிறோம். அதேபோல, நாம் வாழாத வீடுகள், நாம் வாழ முடியாத வேறு நபர்களின் சுயங்கள் மேல் கொள்ளும் ஆசையும் மோகமும்தான் அனைத்து முரண்பாடுகளுக்கும் காரணமாகவும் உள்ளன.
2018-ல் வெளியான ‘ஹியூமன், ஸ்பேஸ், டைம் அண்ட் ஹியூமன்’ திரைப்படத்திலும் மனிதாபிமானம், ஒழுக்கம் ஆகியவற்றின் எல்லை என்னவென்று கிம் கி டுக் நோவாவின் பேழை போன்ற ஒரு கதையை ஆகாயத்தில் தொங்கும் கப்பல் ஒன்றில் உருவாக்கிப் பரிசீலிக்கிறார். இதுவும் ஓர் உருவகக் கதையே. எல்லா இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகும் நாயகி புத்துயிர்ப்பு என்று நினைக்கும் தருணத்தில் பெற்ற மகன் வழியாகவே மீண்டும் துன்பத்தின் மீளாப் பாதைக்கு இழுக்கப்படுகிறாள். வானத்தில் மிதக்கும் அந்தக் கப்பலில் துயராலான தோட்டம் பெருகி வளர்ந்துகொண்டே இருக்கிறது.
கிம் கி டுக்கின் பெண்கள்
கிம் கி டுக்கின் திரைப்படங்களில் வரும் பெண்கள் ஆண்களின் வன்முறைக்கு இலக்காக்கப்படுபவர்களே தவிர வன்முறையில் ஈடுபடுபவர்கள் அல்ல. ஆண்கள் தற்காலிகமாவது தங்களது வன்முறை என்னும் நோயிலிருந்து அமைதியையும் சமாதானத்தையும் குணப்படுத்தும் இயற்கையாக, தாய்மையாக பெண்களே இருக்கிறார்கள். கிம் கி டுக் திரைப்படத்தின் நாயகிகள் அன்னை மேரியை ஞாபகப்படுத்தும் சுமைதாங்கிகளின் சொரூபமாக இருக்கிறார்கள். பெண் தொடர்பில் கிம் கி டுக் மனதில் ஆழம்பெற்றுள்ள கிறிஸ்தவத் தொன்மங்களின் தாக்கம் அவரது ‘பியெட்டா' திரைப்படத்தின் பெயர் வழியாகவே வெளிப்படுவது. அன்னை மரியாளின் மடியில் கிடக்கும் சிலுவைப்பாட்டுக்குப் பிறகான கிறிஸ்துவின் சிற்பம்தான் மைக்கேல் ஆஞ்சலோ செதுக்கிய பியெட்டா. பியெட்டாவின் கதாநாயகன் அம்பத்தூர் போன்ற தொழிற்பட்டறையில் சிறுகடை வைத்திருப்பவர்களிடம் அதிக வட்டிக் கடனை சித்திரவதை செய்து வசூலிப்பவன். பிறந்தவுடனேயே தாயால் கைவிடப்பட்ட அவனது முப்பது வயதில் தாயென்று சொல்லிக்கொண்டு ஒருத்தி வருகிறாள். அவளின் வருகையால் அவன் தற்காலிக அமைதியை அடைகிறான். அப்போது அந்தத் தாயிடம் பணம் என்றால் என்ன என்று கேட்கிறான். தொடக்கமும் முடிவும் அதுதான் என்று ஆரம்பிக்கும் அந்த அன்னை தொடர்கிறாள். நேசம், கௌரவம், வன்முறை, கொந்தளிப்பு, வெறுப்பு, பேராசை, பழி, மரணம் என்று முடிக்கிறாள். அவள்தானே பணத்துக்கு இத்தனை முகங்கள் இருப்பதைச் சொல்ல முடியும்? அவள்தானே இத்தனை குணங்களுக்கும் இலக்காகுபவள்.
ஆண்-பெண் உறவின் வன்முறை
பெண்ணைத் தீராத வன்முறைக்குள், சுதந்திர விருப்பு இல்லாதவர்களாகவும் கிம் கி டுக் காண்பிப்பதாக ‘பேட் கை’ காலத்திலிருந்து பெண்ணியவாதிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணமிருக்கின்றன. இந்த விமர்சனத்தை மறுக்கும் அவர், ஆண்களை விடப் பெண்களை உயர்ந்த உயிர்கள், ஆண்கள் எப்போதும் உறவுக்காகவும் சரணடைவதற்காகவும் பணியும் உயிர்கள் என்றே தான் கருதுவதாக நினைக்கிறார். அதே வேளையில் ஆசிய சமூகங்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் பதற்றமும் வன்முறையும் ஏற்றத்தாழ்வும் இன்னமும் நீடித்தே வருகிறது என்கிறார். ஆணுக்குப் பெண் தேவையாக இருந்தாலும், இரண்டு பாலினத்தவருக்குமான முரண்பாடு என்பது தீர்க்க முடியாமேலேயே இருக்கிறது; அதுவே இங்கே வன்முறையாக அகத்திலும் புறத்திலும் வெளிப்படுகிறது என்கிறார் கிம் கி டுக்.
‘பேட் கை’ படம் தொடங்கி ‘ஹியூமன், ஸ்பேஸ், டைம் அண்ட் ஹியூமன்’ திரைப்படம் வரை ஆண்கள் அமைதியடையும் நிறைவடையும், கொஞ்சம்போல் சமாதானம் கொள்ளும் பேரியற்கையாகப் பெண்களே இருக்கின்றனர். ஒரு ஆண் எங்கே அமைதியைப் பெற்றானோ, எங்கே சமாதானத்தைப் பெற்றானோ, எங்கே ஆற்றலைப் பெற்றானோ அங்கேயேதான் அவன் தனது ஆதித் தொழிலான இம்சையையும் தொடங்குகிறான். இதுதான் உண்மையா என்று கேட்டால் இதுதான் இன்றுவரை உண்மை. இதுதான் எதார்த்தமா என்று கேட்டால் இதுதான் இன்றுவரையிலான உலகத்தின் எதார்த்தம்.
‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர்... அண்ட் ஸ்பிரிங்’ திரைப்படத்தில் அந்தச் சிறுவன், மாபெரும் இயற்கையின் உருவமாக நிற்கும் மலையில் நின்றுதானே, தனது கல்வியை மீன், தவளை, பாம்பு என்று இம்சிப்பதிலிருந்து தொடங்குகிறான். நாமும் இப்படித்தானே தொடங்குகிறோம். அவனையும் சேர்த்து அவன் உருவாக்கும் நரகம் வேறெங்கும் இல்லை. இங்கேயே உள்ளது.
-
கிம் கி டுக்: 1960-2020
நன்றி: இந்து தமிழ் திசை

****************************************************************************************
சித்ராவின் செல்போன் ஸ்கிரீனிலும்.. வாட்ஸ் ஆப் DP-யிலும் வைத்திருந்த புகைப்படம்













சித்ராவின் வாட்ஸ்ஆப் டிஸ்பிளே பிக்சரில் இருந்த புகைப்படம் எது தெரியுமா? நண்பர்கள் வெளியிட்டு வேதனை தெரிவித்தனர். முல்லையாக மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட சித்ரா கடந்த 9-ஆம் தேதி காலை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு தற்கொலை என போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் மூலம் போலீஸார் உறுதி செய்தனர். சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் போலீஸார் 4ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சித்ராவின் மாமனாரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளார்கள்.

சித்ரா- ஹேம்நாத் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஹேம்நாத் சித்ராவின் கன்னத்தை செல்லமாக கிள்ளுவது போன்றும் அதற்கு சித்ரா வெட்கப்பட்டு சிரிப்பது போன்றும் ஒரு புகைப்படத்தைதான் அவர் டிபியாக வைத்திருந்தார் என அவரது நண்பர்கள் காண்பித்து வேதனை தெரிவிக்கிறார்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.


 விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, கங்கனா ரனவத் நடிக்கிறார்













இந்தப் படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.

இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. ஐதராபாத்தில் செட் அமைத்து இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகை கங்கனா ரனவத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில், அவர் கூறியிருப்பதாவது: வெற்றிகரமாக, எங்கள் கனவுத் திரைப்படமான தலைவி ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். எந்த நடிகைக்கும் எளிதில் கிடைத்திடாத, அரிதான ரத்தமும் சதையுமான கேரக்டர் எனக்கு கிடைத்தது. நான் அதிகம் விரும்பி நடித்தேன்.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

கண்ணதாசனும் -திரைப்பாடலும்



ஒருசமயம் சுவாமி விவேகானந்தர் பற்றி ஒரு புத்தகத்தை கண்ணதாசன் தேடிக்கொண்டிருந்தார். அதுபற்றி ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள தனக்குத்  தெரிந்த ஸ்வாமிகளிடம் சொல்லியிருந்தாராம் .
படம்: நானும் ஒரு பெண்
பாடல்; 'கண்ணா கருமை நிறக்கண்ணா..' இசை ; ஆர் சுதர்சன்
கண்ணதாசன்  வந்துவிட்டார். அங்கே தரை விரிப்பில் அமர்ந்து இருக்கிறார். ஒரு முப்பது பேர் காத்து இருக்கிறார்கள் அவரை சுற்றி பாட்டுக்காக. இந்த அறைக்கு வெளியே சிகப்பு விளக்கு எரிகிறது . வெளி ஆட்கள் உள்ளே வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க .
அப்போது ஒருத்தர் கண்ணதாசனை காண வருகிறார் . அவரை வெளியே இருக்க சொல்லிவிட்டார்கள் . இப்போது நாம் உள்ளே சென்று பாப்போம்
படத்தின் கதை ; சூழல் டைரக்டர் சொல்ல , அங்கே ஒரு பாடல் வேண்டும் என்று சொல்கிறார்கள் .சுதர்சன் பல்லவிக்கான இசைமெட்டை சொல்கிறார்.
கவிஞர் இரண்டு நிமிடம் யோசனை செய்கிறார். ஒன்றும் பிடிபடவில்லையாம் . சுதர்சனை கூப்பிட்டு ,'எதுவும் தோணலை, நாளைக்கு பாத்துக்கலாம் ' என்று சொல்லிவிடுகிறார் .சுதர்சனும், இசை கலைஞர்களிடம், போகலாம் என்று சொல்ல, அவர்கள் புறப்பட தயார் ஆகிறார்கள். அப்போது தபேலா வாசிப்பவர், 'என்னண்ணே,முப்பதுபேரை  ,டிபன் ,காபி எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டி வந்திருக்கோம்,...இவரு சர்வ சாதாரணமா, 'எதுவும் தோணலை ...நாளைக்கு ...பாக்கலாம்னு சொல்றார் ' என்று கீழ்க்குரலில் சொல்கிறார்.
'டேய், அவரைப்பத்தி உனக்குத் தெரியாது. அவருக்கு மனசு இல்லைனா, இரண்டு வார்த்தை எழுதிக்கூட வாங்கமுடியாது ...எனக்கு அவரை பத்தி நல்லாத் தெரியும் ,நீ கிளம்பு ' என்று சொல்லி நகர்கிறார்.
வாசலில், சிகப்பு விளக்கு மாறி, பச்சை விளக்கு எரிகிறது . கண்ணதாசனை காண வந்தவரிடம், 'சார், நீங்க உள்ளே போகலாம் ; என்று கதவை திறந்து விடுகிறார்.
அவர் நேராக, கண்ணதாசனிடம் சென்று ,'ஸ்வாமிகளிடம், எதோ, புத்தகம் கேட்டிருந்தீர்களாம், உங்களிடம் நேரில் கொடுத்து வரச்சொன்னார்  ' என்று புத்தகத்தை கொடுத்தார்.
அது ஒரு பழைய புத்தகம் . அவரும் எங்கோ தேடி, புதிதாக, பைண்டிங் செய்து கொடுத்து அனுப்பி இருந்தார்.புத்தகம் பழையது என்பதால், மேல் அட்டைக்கு பதிலாக, கருப்பு காலி கிளாத் ஒட்டி பைண்டிங் செய்யப்பட்டு இருந்தது.
கண்ணதாசன், அந்த கருப்பு  புத்தகத்தை கையில் வாங்கினார் , பிரிக்கக் கூட இல்லை . அப்போது ஒரு மாயை நடந்தது  ' ஏம்பா, இங்கே, வா,
அந்த பல்லவி சந்தம் சொல்லு,' என்று சுதர்சனை சொல்ல வைத்தார்.
சுதர்சன் சொல்லி முடித்ததும், அருவி போல வார்த்தைகள் வந்து கொட்டியது
"கண்ணா, கருமை நிறக்கண்ணா
உன்னைக் காணாத கண் இல்லையே
உன் மறுப்பாரில்லை,கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை ..."
சரியா இருக்கா பாரு,என்று சொல்ல, 'அண்ணே,ரொம்ப நல்லா வந்திருக்கு என்று சுதர்சன் மகிழ்ந்து பாடுகிறார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் கவிஞர் கிட்டத்தட்ட பாடல் முழுதும் தந்துவிட்டாராம் . சற்று அமைதி கலைய, சுதர்சன், அந்த தபேலா வாசிப்பவரை பார்த்தாராம் . அவர்,'அண்ணே, தெரியாம சொல்லிட்டேன், இவர் மனுஷன் இல்லை, தெய்வம் ; என்றாராம் .

எத்தனை காலம் கடந்தாலும் அழியாத பாடல் . அந்த கார்மேக வண்ணன் கண்ணனே வந்து அடி எடுத்துக்கொடுத்த பாடல் இது .   இதில் உள்ள ஒரு வரிதான் என்னை பாதித்தது . நாட்டில் எவருக்குமே நல்லது செய்யாது, அவர்கள், சொத்து சுகம் சேர்ப்பது என்று இருப்போர்க்கு என்று கவிஞர் இந்த வரிகளை எழுதினாரோ ?
'எந்தக்கடன் தீர்க்க
எனை நீ படைத்தாய் கண்ணா '(எந்தக்கடன் தீர்க்க இவர்களை எல்லாம் படைத்தான் இறைவா ? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது )
ரசிப்போம் மகிழ்வோம் ..




****************************************************************************
ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் கிளம்பினார்



 'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 ஆனால் ஜனவரியில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, சட்டமன்ற தேர்தலிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அண்ணாத்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிக்க வேண்டியுள்ளன.   வரும் டிசம்பர் 15ம் தேதி முதல்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த" படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.   
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று உலக வயலின் தினம் (Violin day)



. தமிழ்த் திரையிசை வரலாற்றில் முதன் முறையாக இந்தக் கருவியின் பயன்பாட்டை முற்றிலும் வேறொரு கோணத்தில் அறிமுகப்படுத்தியவர் மெல்லிசை மன்னர் (இரட்டையர்கள்). எத்தனையோ பாடல்களில் இந்தக் கருவியின் சோலோ மற்றும் குழு இசை நாதத்தை புதுப் புது அனுபவங்களாக ஆச்சரியங்கள் தந்தவர் எம்.எஸ்.வி.  வயலின் இசைக் கருவியோடு அவரது மொத்த திரை இசை வரலாற்றையும் இரண்டே பாடல்களில் அடக்கிவிடலாம்.  சோலோவாக பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் கவியரசரின் கவிதை ஜாலத்துடன் இந்தக் கருவிக்கே தனி அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்த வான் நிலா நிலா அல்ல என்ற பாடல் மற்றும் 70க்கும் அதிகமான கூட்டு வயலினிசை அதிர்ந்த புதிய பறவையின் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி பாடல். வயலினிசை கருவியின் ஒலி கேட்கும் இடத்தில எல்லாம் எம்.எஸ்.வி அமைதியான புன்னகையோடு கைகளை ஆட்டி காற்றில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.  

https://www.youtube.com/watch?v=uKDtXNrm8vM





^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^









Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி