ப்ளம் கேக்

 ப்ளம் கேக் *

இன்றைய தின ஸ்பெஷல் ப்ளம் கேக்.
ப்ளம் கேக் செய்வது எப்படி என்பதை பார்த்துவிடலாம். தேவையானவை :

மைதா - 100 கிராம், சர்க்கரை – 100 கிராம், ஓமம் தூள் - அரைடீஸ்பூன், திராட்சை - 30 கிராம், சோள மாவு – 2 டீஸ்பூன், முந்திரி பிஸ்தா வால்நட் - 40 கிராம், கலந்த பீல் – 30 கிராம், சுக்குத் தூள் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - 100 கிராம் பால் - கால் கப் முட்டை - 3, செர்ரி பழம் – 15 செய்முறை :- சோள மாவைப் பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவிட்டு வைக்கவும். கட்டி தட்டாமல் இருக்க வேண்டும். மைதாவை நன்குச் சலித்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். முட்டையை எக் பீட்டரில் போட்டு நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்த்து எல்லாவற்றையும் கேக் மிக்சரில் போட்டு கலக்கவும். பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையைப் பாதி ஊற்றவும். அதன் மீது துண்டுகளாக நறுக்கிய செர்ரி பழங்களைப் போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றவும். இதை மிதமான சூட்டில் மைக்ரோ அவனில் 40 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். சுவையான சத்தான ப்ளம் கேக் ரெடி

V.ஜான்சிராணி.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி