வச்சிர வல்லி என்ற பிரண்டை
அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு மருந்து
வச்சிர வல்லி என்ற பிரண்டை
இதன் இளகொழுந்தை முறைப்படி துவையல் செய்து மதிய உணவாகத் தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், செரியாமை, பசியின்மை, ருசியிண்மை போன்ற உபாதைகள் படிபடியாக நீங்கும், பிரண்டையை சாறு எடுத்து அத்துடன் உப்பு புளி சேர்த்து அடிபட்ட நிலையில் உள்ள வீக்கம், சுளுக்கு, ரத்தக்கட்டு போன்ற இடங்களில் தொடர்ந்து பூசி வர மேலே சொன்ன உபாதைகள் படிபடியாக நீங்கும், இதன் வேரை சூரணம் செய்து வைத்து கொண்டு தினம் ஒரு கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வர எலும்பு பலம் பெறும், முதிர்ந்த பிரண்டையை காய வைத்து எறித்து அதன் சாம்பலை சலித்து வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இரண்டு வேளை அரிசி எடை அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர வாயு உபாதைகள், மூலம் உபாதைகள் தீரும்.
Comments