வாட்ஸ்அப்-ல் புதிய சேவை.

 

வாட்ஸ்அப்-ல் புதிய சேவை.. இனி ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது ரொம்ப ஈஸி




இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி மூலம் இனி ஈஸியாக ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க முடியும். பேஸ்புக் கட்டுப்பாட்டில் இயங்கும் வாட்ஸ்அப் இந்தியாவில் சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அனைத்து வாடிக்கையாளர்களும் யூபிஐ பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்தது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் தனது கோடான கோடி வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான நிதியியல் சேவை அளிக்கும் விதமாக மலிவான விலை sachet-sized ஹெல்த் இன்சூரன்ஸ் சேவை இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தச் சேவை மூலம் வாட்ஸ்அப் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் இறங்கியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் புதிய 'பேமெண்ட்ஸ்' தேவையின் அறிமுகத்தின் மூலம் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் துறையில் இறங்கிய நிலையில், இதுவரை சுமார் 20 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. வாட்ஸ்அப் 'பேமெண்ட்ஸ்' சேவை தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கூட்டணியில் அளிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலிக்கும் இந்தியாவில் சுமார் 400 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கும் காரணத்தால் இந்தப் பேமெண்ட்ஸ் சேவைக்கு இந்தியா மிகவும் முக்கியமான மற்றும் முதன்மையான வர்த்தக இலக்காகப் பேஸ்புக்கிற்கு உள்ளது. இந்திய மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் எளிமையான சேவைகளை வழங்குவதே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது வாட்ஸ்அப் நிர்வாகம்.

இந்நிலையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் எஸ்பிஐ ஜெனரல் நிறுவனத்தின் ஹெல்த் இன்சூரன்ஸ் சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வாங்கும் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக இந்நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் சேவையை அனைவரும் வாங்கும் வகையில் மலிவான விலையில் sachet-sized ஹெல்த் இன்சூரன்ஸாக விற்பனை சந்தைக்கு வர உள்ளது.

இதேபோல் ஹெச்டிஎப்சி பென்ஷன்ஸ் மற்றும் பின்பாக்ஸ் சொல்யூஷன்ஸ் கூட்டணியில் ஓய்வூதிய சேமிப்புத் திட்டங்களை இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கு விற்பனை செய்யும் சேவையையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி