பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் –

 பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் – எண் கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள் இன்று!!!



தமிழ்நாட்டில் பிறந்து இங்கிலாந்து வரை சாதனை படைத்த கணித மேதை ராமானுஜனின் 133-வது பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் டிசம்பர் 22 தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய கணித தினம்:
இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி பிறந்து 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் 26 தேதி அன்று இறந்தார். கணிதத்தில் அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ராமானுஜனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணித தினமாக கொண்டாட 2012- ஆம் ஆண்டு இந்திய அரசு முடிவு செய்தது. தேசிய கணித தினம் இந்திய பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஏராளமான கல்வி நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் இணையதளம் மூலம் கருத்தரங்கு நடத்த பள்ளிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவை,” உலகின் மிகச் சிறந்த கணித மேதைகளில் ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன். அவரது பிறந்தநாளான டிச.22-ம் தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கிய பங்குவகிக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் அவரது பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம் மாணவர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் விதமாக இருக்கும்.
கணித மேதை ராமானுஜனின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு இணையவழி கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதை பார்வையிடுமாறு மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி