சூடிகொடுத்த சுடர்கொடியாள்.

 சூடிகொடுத்த சுடர்கொடியாள்.

-------------------------------------

சூடிகொடுத்த சுடர்கொடியாள் யார் தெரியுமா?கண்ணனையே தன் காதலனாக மனமுருக நினைத்து அவனையே அடைந்த ஸ்ரீஆண்டாள் அம்மையார்தான். *இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது அவனது மகனான வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. *இந்தியாவில் மிகவும் பழமைவாய்ந்த கோயில் இதுவாகும் அதாவது இந்த கோயில் 6-ம் நூற்றாண்டை சேர்ந்தது. *ஆழ்வார்களில் பெண் ஆழ்வராக ஸ்ரீஆண்டாள் அழைக்கப்படுகிறார். *கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் நாம் வாழ்வில் நினைத்தது நடக்கும் அந்த வகையில் கிழக்கு நோக்கி வீற்றியிருக்கும் ஸ்ரீஆண்டாள் அமையாரை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். *ஸ்ரீஆண்டாள் இயற்றிய திருப்பாவை, மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மிகச் சிறப்பு வாய்ந்தவை "மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்நாளால்"என்று முதல் பாட்டு ஆரம்பம் இது போல் முப்பது பாட்டுக்கள் பாடியிருக்கிறார். *மாதத்திலே மார்கழி ஒரு சிறந்த மாதம்,கீதையிலே க்ண்ணனும் இதையே சொல்கிறார்,ஆன்மீகச் சூழல் நிறைந்தமாதம் இந்த மாதத்தில் தான் விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசியும் சிவனுக்கு திருவாதிரையும் கண்ணனுக்கு ஆண்டாளின் திருப்பாவையும், ஹனுமத் ஜயந்தியும் வருகின்றன, *மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. *ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் பி.எஸ்.குமாரசுவாமி ராஜா ஆவார். தமிழக அரசு சின்னம் 1956ல் அறிமுகப் பட்டது --அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. பிறகு 1968ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. . பொதுவாக ஒவ்வொரு தெய்வங்களும் நமக்கு ஓவ்வொரு பாடத்தை உணர்த்துகின்றன.தன் காதலனான கண்ணனையே நினைத்துருகி அவரை மணந்த ஆண்டாள் அம்மையார். வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் தன் நினைத்ததை அடைய மனம் அலைபாயாமல் எப்போது அதனை நோக்கியே சிந்தனை இருக்க வேண்டும் என்பதே ஸ்ரீஆண்டாள் அமையார் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

Manjula sent Today at 11:22
Manjula sent Today at 11:22


You replied to Manjula

Today at 11:43. Original message:


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,