#பாவ_கதைகள்!
#பாவ_கதைகள்!
--விமர்சனம்
இந்த வாரம் 18,12,2020 அன்று நெட்பிளிக்ஸ் ஓ ட்டி ட்டி தளத்தில் வெளியானது
ஒரு நல்ல கதை அமைப்பு சமுதாயத்தில் நடக்கக்கூடிய பல்வேறு அநீதிகளை பல்வேறு கதை தளங்களில் கொண்டு மிக அருமையாக சொல்லி இருக்காங்க .
1.திருநங்கை பற்றிய கதை சுதா சுதா சுதா கொங்கரா
2.அஞ்சலி நடித்துள்ள கௌரவக்கொலை
விக்னேஷ் சிவன்
3.சிறுமி கற்பழிப்பு கௌதம் மேனன்
4.சாதி பாகுபாடு
மற்றும் கௌரவ கொலை வெற்றிமாறன்
திருநங்கைகள்
பாகுபாடு, அவமதிப்பு மற்றும் இன வெறி,
கற்பழிப்பு , சாதி பாகுபாடு என்று
நான்கு கதைகளை கொண்டு மிகவும்
தத்ரூபமாக சொல்லிட்டாங்க அதில்
குறிப்பாக திருநங்கையாக நடித்துள்ள காளிதாஸ் ஜெயராம் அவர்களுக்கு எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக அருமையான தத்ரூபமான இயல்பான நடிப்பு. வாழ்த்துக்கள். இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் . பல தரப்பட்ட குற்றவாளிகளை (வழக்கறிஞர்கள்) என்னை போன்றோர் பார்த்து வருகிறோம். இருந்தாலும் மிகவும் காட்சிகள் பாதித்தது. இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு இருந்தாலும், அரசியல் செல்வாக்கு, பணம், ரவுடிதனத்தால் வெளியில் சகஜமாக நடமார்கள். இவர்கள் பொது மக்கள் புறந்தள்ள வேண்டும்.
: செல்வகுமாரி நடராஜன், வழக்கறிஞர்
Comments