இது ஒரு மனிதரின் மரணம்தானா?

 இது ஒரு மனிதரின் மரணம்தானா?

*பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் மறைவுக்கு இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதியின் இரங்கல் செய்தி.          

*


தொ. ப. மறைந்தார்


இலக்கியம்

தத்துவம்

நாட்டார் மரபு

தொல்லியல்

மானுடவியல்

தமிழக வரலாறு என

எத்தனைத் துறைகளுக்கு ஒரே நேரத்தில் இழப்பு?


இது ஒரு மனிதரின் மரணம்தானா?


தொ.பரமசிவன்-


தடம் பதித்தத் 

தமிழறிஞர்.


வழி சமைத்த

வரலாற்றிஞர்.


தொலைநோக்குடன்

எழுதியும் பேசியும் வந்த

தொல்லியல் ஆய்வாளர்.


மானுடம் போற்றும்

மானிடவியலாளர்


நாட்டார் மரபின்

வேர் வரை சென்றவர்.


புதுமை தெரிந்தவர்

மரபை அறிந்தவர்

இரண்டின் இசைவினை

அறிந்து உரைத்தவர்.


பெரியாரையும் படித்தவர்

பெரியாழ்வாரையும்

கற்றவர். 

சைவம் பௌத்தம் சமணம்

அனைத்திலும் தோய்ந்தவர்.


நாத்திகம் ஆத்திகம்

இரண்டையும் கற்று

நடுகல் போற்றும்

நாட்டார் மரபே

நம் வழி என்றவர்.


எங்கள் ஊர் 'அழகர்கோவிலை'

ஆய்வு செய்தவர்.


'பண்பாட்டு அசைவுகளால்'

பாதை அமைத்தவர்.


ஆய்வரங்குகளில்

தார்மீக வலிமை தந்தது

அவரது இருப்பு.


எந்த இடத்தையும்

வகுப்பறையாக்கியது

அவரது பேச்சு.


இனி அப்பணிகளை

அவரது நூல்கள் செய்யும்.


தக்கார் அவர் என்பதை  

அவரது மாணவர்   உலகிற்குத் தொடர்ந்து உணர்த்துவர்.


விடை தருகிறோம் ஐயா


தலைமுறைகள் வணங்கும்

உங்கள் ஓய்விலா உழைப்பை.


அறிவுலகம் போற்றும்

உங்கள் 

ஆழமான அறிவை.

*

பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,