ஞான முத்திரை*

 ஞான முத்திரை*



ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம்.


முறை:


 கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம்.


இடம்: 



எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது.


நேர அளவு:


இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம்.


பலன்கள்:


 அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.


ஆகவே இந்த முத்திரை,


• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.


• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.


• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி