ஒன்இந்தியா தமிழ்' சார்பில் ஒரு கருத்துக் கணிப்பு தமிழகத்தில் யாருடைய ஆட்சி

 

ரஜினியை விட அதிமுகவுக்கே அதிக மக்கள் ஆதரவு.. திமுக நம்பர் 1

தமிழகத்தில் யாருடைய ஆட்சி அடுத்து அமையும்? என்ற கேள்வி கேட்டு, 8 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது. அதில், திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி, பாஜக ஆட்சி, மக்களாட்சி அமைஞ்சா சரி, ரஜினி ஆட்சி, சீமான் ஆட்சி, கமல்ஹாசன் ஆட்சி, 3வது அணியின் ஆட்சி, இவ்வாறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது.

ஒன்இந்தியா தமிழ்' சார்பில் ஒரு கருத்துக் கணிப்பு

பெரும்பாலான வாசகர்கள், திமுக ஆட்சிதான் வரப்போகிறது என அடித்துச் சொல்லியுள்ளனர். அதுவும் 55.31 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோரின் ஒரே சாய்சாக திமுக உள்ளது. 2வது இடம் எதிர்பார்த்தபடி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. ஆனால் வித்தியாசம் ரொம்பவே அதிகம். வெறும் 12.79 சதவீதம் பேர் அதிமுக ஆட்சி வரும் என்று கருதுகிறார்கள்.
பாஜக ஆட்சி என்றும் நமது வாசகர்களில் சிலர் கருத்து கூறியுள்ளனர். சுமார் 2 சதவீதம் அதாவது 1.98 சதவீதம் பேர் தாமரை மலரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மக்களாட்சி அமைஞ்சா சரி என்ற மனநிலையில் 6.22 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

பெரிய ஆரவாரத்தோடு கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த்துக்கு எதிர்பார்த்த ஆதரவை வாசகர்கள் தரவில்லை. 12.24 சதவீதம் பேர் மட்டுமே ரஜினி ஆட்சி அமையும் என்று கூறியுள்ளனர். அதாவது அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பவர்களை விடவும் குறைவுதான் ரஜினிக்கு கிடைத்துள்ளது.

lபெரிய ஆரவாரத்தோடு கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த்துக்கு எதிர்பார்த்த ஆதரவை வாசகர்கள் தரவில்லை. 12.24 சதவீதம் பேர் மட்டுமே ரஜினி ஆட்சி அமையும் என்று கூறியுள்ளனர். அதாவது அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பவர்களை விடவும் குறைவுதான் ரஜினிக்கு கிடைத்துள்ளது.

சீமான் ஆட்சி என 6.19 சதவீதம், கமல்ஹாசன் ஆட்சி என 2.88 சதவீதம், 3வது அணி ஆட்சி என 2.4 சதவீதம் பேர் அடித்துக் கூறுகிறார்கள். மக்களின் மனநிலை என்ன என்பதை எடுத்துக் காட்டுவதை போல அமைந்துள்ளது இந்த கருத்துக் கணிப்பு.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி