. கோலி அண்ட் கோ-வின் பரிதாபக்கதைகள்!
. கோலி அண்ட் கோ-வின் பரிதாபக்கதைகள்!
62 ரன்களுடன் முன்னிலை வகித்த இந்தியா இன்றைய போட்டியை மயாங்க் மற்றும் பும்ராவுடன் தொடங்கியது. போட்டி ஆரம்பித்த, இரண்டாவது ஓவரில், கம்மின்ஸ் பந்தில் பும்ரா சிக்கினார். நைட் வாட்ச்மேன்தானே அவரது விக்கெட் களப்பலி போல இருக்கட்டும் எனத் தேற்றிக் கொண்டனர் இந்திய ரசிகர்கள். ஆனால்...
2019 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் 45 நிமிடங்களில் மொத்தக் காட்சிகளும் மாறிப் போனதைப் போல், இன்றைய போட்டியிலும் கிட்டத்தட்ட 45 நிமிடங்களில், புயல் புரட்டிப் போட்டதைப் போல் எல்லாமே மாறிவிட்டது. கடந்த வருடம், தொடரை இழந்ததனால் ஏற்பட்ட வன்மத்தை, ஒரு வருடமாய் உள் வைத்திருந்து வெறியேற்றி, ஆஸ்திரேலியா திருப்பித் தர, இந்தியாவிற்கு என்றுமே ஆறாத ரணமாய், அவமானங்களுடன் முடிந்திருக்கிறது அடிலெய்டு டெஸ்ட். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைந்த ஸ்கோரான, 36 ரன்களை இந்தியா பதிவுசெய்துள்ளது. அதுவும் ரன்மெஷின் கிங் கோலியின் தலைமையில்!
62 ரன்களுடன் முன்னிலை வகித்த இந்தியா இன்றைய போட்டியை மயாங்க் மற்றும் பும்ராவுடன் தொடங்கியது. போட்டி ஆரம்பித்த, இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில், கம்மின்ஸின் பந்தில் பும்ரா சிக்க, சரி, என்ன இருந்தாலும் பும்ரா நைட்வாட்ச்மேனாகத்தானே களம் இறங்கினார், அவரது விக்கெட் களப்பலி போல இருக்கட்டும் எனத் தேற்றிக் கொண்டனர் இந்திய ரசிகர்கள்! ஆனால் இந்தியாவின் வீழ்ச்சிக்கான தொடக்கம் அங்கேதான் ஆரம்பமானது!
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழக்க சீட்டுக்கட்டு சரியத்தொடங்கியது. மயாங்க் அகர்வாலை அடுத்த ஒவரிலேயே ஹேசில்வுட் தூக்க, ஆஸ்திரேலியாவின் ஆட்டம் ஆரம்பமானது! அதே ஓவரிலேயே ஹேசில்வுட், ரஹானேவையும் வெளியே அனுப்ப, கிட்டத்தட்ட அங்கேயே முடிந்து போனது எல்லாமுமே! 15-ல் இருந்த ஸ்கோருக்கு மேல், ஒரு ரன் கூட எடுக்கப்படாமல் பரிதாபமாய் நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது இந்தியா!
2-வது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 39 ரன்களில் ஆட்டமிழந்தது. அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது
Comments