எலுமிச்சை நீர்

 நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் இயற்கை எனர்ஜி டானிக்




காலை எழும்போதே அந்த நாள் முழுவதும் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு எழும் நாம் அன்று முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவே ஆசைப்படுவோம். அதற்காக காலை முதல் வேலையாக நாம் செய்வது காபி அல்லது டீ பருகுவது தான். காபி, டீ குடிப்பது அந்த நேரத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்தாலும் அதனால் ஏற்படும் தீமைகள் ஏராளம். எனவே இந்த காபி, டீக்கு பதிலாக சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து பாருங்கள். இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டால் நிச்சயமாக இதனை ஃபாலோ பண்ணுவீங்க… 


காலை எழுந்தவுடன் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் போது நம் செரிமான பாதையில் தேங்கி உள்ள கொழுப்புகள் கரையும். இதன் மூலம் செரிமானத்திற்கு தேவையான அமிலத்தின் உற்பத்தி சீராகும். மேலும் கல்லீரலில் உள்ள  நொதிகளின் ஆற்றலை அதிகரித்து கல்லீரலை வலிமைப்படுத்தும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு போன்ற செரிமான கோளாறுகளை தடுப்பதில் எலுமிச்சை நீர் வல்லமை கொண்டது. எலுமிச்சை நீரால் கிடைக்கும் வேறு சில ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம். 



 

★உடல் எடை குறைய:


எலுமிச்சையில் காணப்படும் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதோடு மட்டும் இல்லாமல் இத்தகைய எலுமிச்சை சாற்றை நாம் சுடு நீரில் கலந்து பருகும் போது அதிகப்படியான கலோரிகளை எரித்து எடை குறைப்பிற்கு வழிவகுக்கும். 



 

★வயிறு சம்பந்தமான நோய்கள்:


அடிக்கடி வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படுமாயின் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உங்களுக்கு நல்ல தீர்வு தரும். வயிற்றில் ஏற்படும் தேவையில்லாத பிரச்சினைகளை தடுத்து விடும்.



 

★நோய் எதிர்ப்பு சக்தி:


உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் பரவாயில்லை… உண்மையில் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடைய செய்யும். இதனை ஒரு மாத காலம் தொடர்ந்து பின்பற்றினாலே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்து விடும். 



 

★சருமத்தை பாதுகாக்கும்:


நாம் குடிக்கும் காபி, டீ போன்ற பானங்களில் கஃபைன் உள்ளது. இது உடல் வறட்சியை ஏற்படுத்தும். எனவே உங்கள் நாளை இனியும் காபி, டீயோடு ஆரம்பிக்காமல் சுடு நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகி வாருங்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி சரும ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ளும். 



 

★சோடியம் குறைப்பாட்டை குறைக்க:


பொதுவாக காலை வேலையில் நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை வழியாக சோடியமும் வெளியேறும். இந்த வெளியேற்றத்தை ஈடு செய்ய நீங்கள் தினமும் எலுமிச்சை நீர் பருகி வரலாம். 



 

★உடல் சுத்தமாக:


எலுமிச்சை அமிலத்தன்மை கொண்டது என்பதால் இது உடலின் pH அளவை சீராக வைக்க உதவுகிறது. எனவே பல நிபுணர்கள் காலையில் இந்த தேன் கலந்த எலுமிச்சை நீர் குடிக்க பரிந்துரை செய்கின்றனர். கல்லீரல் மற்றும் குடலில் தேங்கி உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். 


 

இத்தகைய நன்மைகள் அடங்கிய எலுமிச்சை நீர் நாம் மட்டும் ஏன் மிஸ் பண்ண வேண்டும்…??




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி