சத்துணவும்.. பாதுகாப்பும்..!!
உடல் நலம்...
சத்துணவும்.. பாதுகாப்பும்..!!
நம் பயணத்தின் எல்லா காலங்களிலும் தரமான மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைப்பது என்பது அரிதான விஷயம். ஆகவே, நம் பயணகால உணவின் பற்றாக்குறைகளை ஈடு செய்யும் விதமாக நமக்கு துணை புரிவதுதான் துணை சத்துணவுகள். அவைகளைப் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம்.
சமச்சீர் புரதம்: எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட சமச்சீர் புரதம் நம் உடலின் செரிமான நொதிகளை (Digestive enzymes) உற்பத்தி செய்யவும் மற்றும் நம் உடலின் உயிர் வேதியல் தன்மாற்றத்திற்குத் (Metabolic reactions) தேவையான ஹார்மோன்களை உற்பத்திச் செய்யவும் உதவியாக இருந்து பயண காலத்தில் நம் உடலை சக்தியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும். சமச்சீர் புரதம் எடுப்பதால் நாம் களைப்பின்றி பிரயாணம் செய்யலாம்.
உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள்: இயற்கையான உயிர் மற்றும் தாதுச் சத்து துணைவுணவுகள் நம் உடல் செயலாக்கத்திற்கு வேண்டிய எல்லா உயிர்ச் சத்துக்கள் (vitamins) மற்றும் நம் உடலின் வேதி வினைகளுக்கு வேண்டிய கிரியா ஊக்கிகளான (bio-catalyst) அனைத்து தாதுச் சத்துக்களையும் (minerals) கொண்டிருக்கும். இதனால் நம் உடலின் எல்லா உயிரியல் வினைகளும் சிறப்பாக நடைபெற்று, ஆற்றலாக இருக்க உதவியாக இருக்கும். பிரயாணங்களில் நாம் எல்லா உயிர்ச் சத்துக்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட உணவுகளைத் தேடித் தேடி சாப்பிட முடியாது. அந்த பற்றாக்குறைகளை இத்துணை உணவு ஈடு செய்யும்.
ஒமேகா-3 கொழுப்பு: நம் உடலை மென்மையாகவும், தோலை இளமையாகவும், இரத்தக் குழாய்களை இலகுவாகவும், நரம்புகளை தளர்வாகவும் வைக்க ஒமேகா-3 கொழுப்பானது உதவியாக இருக்கும். இதனால் நம் உடல் இயக்கத்தை நரம்பு மண்டலம் சிறப்பாக இயக்கி நம் உடலை வலுப்படுத்தும். பிரயாணக் களைப்பை குறைத்து நம் உடலை இலகுவாக்க ஒமேகா-3 கொழுப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
நீரில் கரையும் நார்ச்சத்து: இந்த நார்ச் சத்தானது நம் உடலின் செல்லணுக்களின் அசுத்தங்ளை உள் உறுப்புகளுக்குச் சேதாரம் இன்றி வெளியேற்றம் செய்ய உதவியாக இருக்கும். நம் செல்லனுக்களில் கழிவு நீக்கப்பட்ட காலியிடத்தில் ஆகாச சக்தியே நிரம்பி ஆற்றலைக் கொடுக்கும். பிரயாணக் காலங்களில் நம் உடலின் கழிவுகளை எளிதாக வெளியேற்ற நீரில் கரையும் நார்சத்து மிகவும் உதவியாக இருக்கும்.
காய்கனிகளின் செரிவுச்சத்து: இவ்வித துணை உணவுச் சத்தானது, நம் உடலின் இரசம் (ஜீரண மண்டலம்), இரத்தம், சதை, கொழுப்பு (பாதுகாப்பு மண்டலம்), எலும்பு, நரம்பு மற்றும் விந்து நாதம் ஆகிய ஏழு மண்டலங்களின் செயலாக்கத்திற்கு கிரியா ஊக்கிகளாக விளங்கும். இதனால், நம் இரசம், இரத்தம் முதல் விந்து நாதம் வரை வலுவாக்கம் சாத்தியப்படுகிறது. காய்கனிகளின் செரிவுச் சத்தானது நம் உடல் முழுமைக்கும் புத்துணர்வைத் தரும். ஆகையால், நம் பயணம் சிறக்க இதுவும் பக்கபலமாக இருக்கும்.
ஜிங்சங் தாவரச்சத்து: இந்தத் தாவரச் சத்து நம் நரம்புகளை வலிமையாக்குகிறது. பிரயாண நேரங்களில் உடல் வலியை கனிசமாக ஜிங்சங் தாவரச் சத்து நீக்கும். பிரயாணக் காலத்தில் முழுமையாக தூங்காவிட்டாலும் ஜிங்சங் தாவரச் சத்தானது களைப்பை நீக்க உதவியாக இருக்கும்.
சி மற்றும் ஈ-உயிர்ச் சத்துக்கள்: நம் உடலின் நீர்க் கழிவுகளை நீக்க சி-உயிர்ச் சத்தும் கொழுப்புக் கழிவுகளை நீக்க ஈ-உயிர்ச் சத்தும் உதவியாக இருக்கும். மேலும் இவைகளின் ஆண்டிஆக்சிடென்ட் (Anti-oxidants) தன்மையானது நம் ஆயுளை நீட்டிக்கும். பிரயாண கால மாசுக்களில் இருந்து நம்மைக் காக்க இவையிரண்டும் உதவியாக இருக்கும்.
பி-உயிர்ச் சத்துக்கள்: இவை நம் மண்ணீரல் மற்றும் கல்லீரல் செரிமனத்தை ஊக்கப்படுத்தும். இதனால் பயண நாட்களில் உணவுச் செரிமானமும் சத்துக் கிரகிப்பும் தரமாக நடைபெறும். கால்சியம் மற்றும் மெக்னீசியத் தாதுச் சத்துக்கள்: மெக்னீசியம் நம் சதையையும், கால்சியம் நம் எலும்பையும் வளமாக்கும். இதனாலும் பயணகால உடல் வலிகள் குறையும்.
Comments