பல் சொத்தை

 பல் சொத்தையை எளிய இயற்கை வழிகளை பயன்படுத்தி யை போக்கலாம்



◆ஆயில் புல்லிங்◆


ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,


◆கிராம்பு◆


2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்


◆உப்பு தண்ணீர்◆


அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.


◆பூண்டு◆


3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,


◆மஞ்சள்◆


மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,


◆வேப்பிலை◆


வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும் சொத்தைப் பற்களை போக்கலாம்.

#Médical

[15:49, 19/12/2020] umakanth: யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு மருந்து வச்சிர வல்லி என்ற  பிரண்டை    இதன் இளகொழுந்தை முறைப்படி துவையல் செய்து மதிய உணவாகத் தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், செரியாமை, பசியின்மை, ருசியிண்மை போன்ற உபாதைகள் படிபடியாக நீங்கும், பிரண்டையை சாறு எடுத்து அத்துடன் உப்பு புளி சேர்த்து அடிபட்ட நிலையில் உள்ள வீக்கம், சுளுக்கு, ரத்தக்கட்டு போன்ற இடங்களில் தொடர்ந்து பூசி வர  மேலே சொன்ன உபாதைகள் படிபடியாக நீங்கும், இதன் வேரை சூரணம் செய்து வைத்து கொண்டு தினம் ஒரு கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வர  எலும்பு பலம் பெறும்,  முதிர்ந்த பிரண்டையை காய வைத்து  எறித்து அதன் சாம்பலை சலித்து வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இரண்டு வேளை அரிசி எடை அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர வாயு உபாதைகள், மூலம் உபாதைகள் தீரும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி