மூச்சுக்கலை
மூச்சுக்கலை
ஜீரண சக்தி, ஆயுள் விருத்தி:-
🌿நீங்கள் இரவிலும் பகலிலும் சாப்பிட்டு முடித்து படுக்கும் போதும், சாப்பிடாமல் படுக்கும் போதும்.இடது கைப் புறமாக படுக்க வேண்டும்,
🌿நமது உணவுப் பையானது வயிற்றின் இடது புறத்தில் இருப்பதால், இடது பக்கம் சாய்ந்து படுக்க வேண்டும்.
🌿அவ்வாறு படுப்பதனால்
சாப்பிட்ட ஆகாரமெல்லாம் சரியாகச் செரிமானமாகி வயிற்றுக்கு யாதொரு சங்கடமில்லாமல் இருப்பதோடு சுவாசமும் வலது நாசியில் ஓடிக் கொண்டிருக்கும். இதனால் ஆயுள் விருத்தியாகும்.
🌿இதற்கு காரணம் வலது நாசியில் இருக்கும் சுவாசம் 8 அங்குலமும், இடது நாசியில் வரும் சுவாசம் 12 அங்குலம் வெளியில் வரும்.
🌿இடது நாசியோடு ஒப்பிடும் போது வலது நாசியில் 8 அங்குலமே சுவாசம் வருவதால் 4 அங்குல சுவாசம் உங்களுக்கு மீதமாக இருக்கின்றது.
🌿ஒவ்வொரு சுவாசத்தின் போதும் 4 அங்குல சுவாசம் அதிகரித்து கொண்டே வரும்.இதனால் தான் ஆயுள் அதிகரிக்கின்றது.
🌿சாப்பிட்ட உடன் வலது பக்கமாக கைவைத்து சாய்ந்து படுப்பதால் இரைப்பை வலது ஓரமாய் புரளும்.
🌿இப்படி புரளுவதால் சாப்பிட்ட ஆகாரம் ஜீரணமாகாமல் உடலுக்கு கெடுதியை உண்டாக்கும்.
🌿மேலும் 12 அங்குல சுவாசம் இடது நாடியில் வெளியேறுவதால்
🌿வலது நாசியில் சுவாசம் வெளியிடுவோரைப் போன்று
இவர்களுக்கு தீ்ர்க்காயுசு என்று
கூற முடியாது
Comments