கறிவேப்பிலைக் குழம்பு போதும்

கறிவேப்பிலைக் குழம்பு போதும்

  • கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்து சேர்ப்பதால் அதனுடைய முழுசத்தும் கிடைக்கும். குழம்பும் வெகு ருசியாக இருக்கும்.
  • கறிவேப்பிலை கூந்தல் பிரச்சனைக்கு சரியான தீர்வு. கட்டுப்படாத நீரிழிவும் கட்டுக்குள் கொண்டு வரும் அருமருந்து இது.
  • கறிவேப்பிலை.. எதற்கு பயன்படுத்துகிறோம் என்றால்,வெறும் நறுமணத்துக்காக என்று சொல்பவர்களே அதிகம் உண்டு. ஆனால் இவற்றில் அளவற்ற சத்து உண்டு.

    உணவில் சேர்க்கப்படும் பொருள்கள் சத்துகள் மிகுந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். அதனால் தான் உணவில் ருசிக்கு கொடுத்திருந்த முக்கியத்துவத்தை ஆரோக்கியத்துக்கும் கொடுத்தி ருந்தார்கள்.

    உணவில் வாசனைக்கு என்று சேர்க்கப்பட்ட கறிவேப்பிலையும் கொத்துமல்லியும் கூட கணக்கிலடங்கா சத்தை உடலுக்கு தருகின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையை உணவில் மட்டும் சேர்க்காமல் அதையே உணவாகவும் சமைத்து பயன்படுத்தினார்கள். உணவு வகைகளாகவும் விதவிதமாக செய்து அசத்தினார்கள்.

    கறிவேப்பிலைத் துவையல், கறிவேப்பிலை சட்னி கறிவேப்பிலை பொடி, கறிவேப்பிலைக் குழம்பு என்று எப்போதும் உண வில் கறிவேப்பிலைக்குஒரு முக்கிய இடத்தைக் கொடுத்திருந்தார்கள். அந்த வகையில் இன்று பல்வேறு நோய்களுக்கு எதிராக இருக்கும் கறிவேப்பிலையைக் கொண்டு குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாமா? ..

    பொரியல்,கூட்டு, குழம்பு, அவியல் என்று அனைத்திலும் கறிவேப்பிலையைச் சேர்த்தாலும் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கறிவேப்பிலையை ஒதுக்கி தூக்கி போட்டு சாப்பிடுவார்கள். அதையே குழம்பாக்கி விட்டால் கறி வேப்பிலையின் சத்துகள் முழுமையாகவே கிடைத்துவிடும்.

    வெகு ருசியான மணமான கறிவேப்பிலை குழம்பை எப்படி செய்வது பார்க்கலாமா?

    தேவையான பொருள்கள்
    கறிவேப்பிலை- ஒரு பெரிய கப்
    புளி- எலுமிச்சையளவு
    சாம்பார் வெங்காயம்-1 கப்
    பூண்டு - 10 பல்
    தக்காளி- 3
    மிளகாய்த்தூள்-6 டீஸ்பூன் (காரத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ வைத்துகொள்ளலாம்)
    மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
    கல் உப்பு - தேவைக்கேற்ப
    நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
    விளக்கெண்ணெய் -1 டீஸ்பூன்
    வடகம், வெந்தயம், சீரகம் - தாளிக்க தேவையான அளவு.
வறுத்து பொடிக்க
சீரகம், வெந்தயம், மிளகு- தலா 1 டீஸ்பூன்

செய்முறை
வாணலியில் எண்ணெய் விடாமல் சீரகம் வெந்தயம் மி

  • கல் உப்பு - தேவைக்கேற்ப
    நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
    விளக்கெண்ணெய் -1 டீஸ்பூன்
    வடகம், வெந்தயம், சீரகம் - தாளிக்க தேவையான அளவு.
வறுத்து பொடிக்க
சீரகம், வெந்தயம், மிளகு- தலா 1 டீஸ்பூன்

செய்முறை
வாணலியில் எண்ணெய் விடாமல் சீரகம் வெந்தயம் மிளகு மூன்றையும் வாசனை போக வறுத்து மிக்ஸியில் மைய பொடித்து கொள்ளவும். கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து மண் போக அலசி மிக்ஸியில் விழுதாக அரைத்துகொள்ளவும்.
சாம்பார் வெங்காயத்தை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடியாக நறுக்கவும். அதே போல் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

சட்டியில் நல்லெண்ணெய் விட்டு வடகம் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் சாம்பார் வெங்காயத்தை சேர்த்து அதையும் பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி பத்துநிமிடங்கள் கழித்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் (காரத்துக்கேற்பவேண்டிய அளவு கூட்டி அல்லது குறைத்து) சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்த பிறகு புளி, மிளகாய்த்தூள் வாசனை போனதும் கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும். இறக்குவதற்கு முன்பு வறுத்து அரைத்தப் பொடியைச் சேர்த்து இறக்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் விளக் கெண்ணெய் மேலே ஊற்றவும்.(விளக்கெண்ணெய் வயிற்றில் உள்ள கழிவை வெளியே தள்ள உதவும்.

எனினும் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை) விளக்கெண்ணெய் கசப்பு குழம்பில் தெரியாது என்பதால் இதை குழம்பில் சேர்க்கலாம். மணக்க மணக்க கறிவேப்பிலை குழம்பு தயாராக இருக்கும்.

குறிப்பு
கறிவேப்பிலை குழம்பு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். நம் தேவைக்கேற்ப குழம்பை கெட்டியாகவோ நீர்ப்பத மாகவோ வைத்துகொள்ளலாம். அதற்கேற்ப நீரை சேர்த்தால் போதும்.

பிரண்டைத் துவையல் போதும் எலும்பும் மூட்டுகளும் வலுப்பெறும்...நன்றாக கொதித்த பிறகு புளி, மிளகாய்த்தூள் வாசனை போனதும் கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும். இறக்குவதற்கு முன்பு வறுத்து அரைத்தப் பொடியைச் சேர்த்து இறக்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் விளக் கெண்ணெய் மேலே ஊற்றவும்.(விளக்கெண்ணெய் வயிற்றில் உள்ள கழிவை வெளியே தள்ள உதவும்.

கறிவேப்பிலை குழம்பு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். நம் தேவைக்கேற்ப குழம்பை கெட்டியாகவோ நீர்ப்பத மாகவோ வைத்துகொள்ளலாம். அதற்கேற்ப நீரை சேர்த்தால் போதும் ளகு மூன்றையும் வாசனை போக வறுத்து மிக்ஸியில் மைய பொடித்து கொள்ளவும். கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து மண் போக அலசி மிக்ஸியில் விழுதாக அரைத்துகொள்ளவும்.
சாம்பார் வெங்காயத்தை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடியாக நறுக்கவும். அதே போல் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

சட்டியில் நல்லெண்ணெய் விட்டு வடகம் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் சாம்பார் வெங்காயத்தை சேர்த்து அதையும் பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி பத்துநிமிடங்கள் கழித்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் (காரத்துக்கேற்பவேண்டிய அளவு கூட்டி அல்லது குறைத்து) சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்த பிறகு புளி, மிளகாய்த்தூள் வாசனை போனதும் கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும். இறக்குவதற்கு முன்பு வறுத்து அரைத்தப் பொடியைச் சேர்த்து இறக்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் விளக் கெண்ணெய் மேலே ஊற்றவும்.(விளக்கெண்ணெய் வயிற்றில் உள்ள கழிவை வெளியே தள்ள உதவும்.

எனினும் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை) விளக்கெண்ணெய் கசப்பு குழம்பில் தெரியாது என்பதால் இதை குழம்பில் சேர்க்கலாம். மணக்க மணக்க கறிவேப்பிலை குழம்பு தயாராக இருக்கும்.

குறிப்பு
கறிவேப்பிலை குழம்பு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். நம் தேவைக்கேற்ப குழம்பை கெட்டியாகவோ நீர்ப்பத மாகவோ வைத்துகொள்ளலாம். அதற்கேற்ப நீரை சேர்த்தால் போதும்.

பிரண்டைத் துவையல் போதும் எலும்பும் மூட்டுகளும் வலுப்பெறும்...நன்றாக கொதித்த பிறகு புளி, மிளகாய்த்தூள் வாசனை போனதும் கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும். இறக்குவதற்கு முன்பு வறுத்து அரைத்தப் பொடியைச் சேர்த்து இறக்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் விளக் கெண்ணெய் மேலே ஊற்றவும்.(விளக்கெண்ணெய் வயிற்றில் உள்ள கழிவை வெளியே தள்ள உதவும்.

எனினும் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை) விளக்கெண்ணெய் கசப்பு குழம்பில் தெரியாது என்பதால் இதை குழம்பில் சேர்க்கலாம். மணக்க மணக்க கறிவேப்பிலை குழம்பு தயாராக இருக்கும்.

குறிப்பு
கறிவேப்பிலை குழம்பு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். நம் தேவைக்கேற்ப குழம்பை கெட்டியாகவோ நீர்ப்பத மாகவோ வைத்துகொள்ளலாம். அதற்கேற்ப நீரை சேர்த்தால் போதும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி