நான் உன்னை காதலித்து கொண்டே இருப்பேன்

 நான் உன்னை காதலித்து கொண்டே இருப்பேன் 

                                                                         --கவிதை  

                                                                                                            --இலக்கியம்










காத்திருப்பதும்

சுகம் தான் 

என அறிந்தேன் 

இந்த காதலில் 

மட்டுமே !


உன்னிதழ்கள்

சொல்வது 

பொய் என 

அறிந்தும் 

ரசிக்க  வைத்தது 

இந்த காதல் !


பிடிக்காத ஒன்றை 

பிடித்ததாய் 

மாற்றியதும்

இந்த காதல் தான் !


ஏதும் அறியாமல்

இருந்த என்னை 

உன்னை 

நேசிக்க வைத்ததும்

இந்த காதல் தான் !


நேசித்த உன்னையே

சுவாசிக்கவும் 

வைத்தது இந்த 

காதல் தான் !


நான் உன்னை

காதலித்தேன்

நீ என்னை 

விரும்பாத போதும் !


நான் உன்னை

காதலிக்கிறேன் 

நீ என்னை 

வெறுத்த போதும் !


நான் உன்னை

காதலித்து கொண்டே

இருப்பேன்  !


இவ்வுலகில் காதல் 

வாழும் வரை !


-


-நித்யஸ்ரீ

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி