கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்

 


கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்

கே பாலசந்தர் திரைத்துறைக்கு வருவதற்குமுன்
முதன் முதலாக எழுதிய நாடகம் “சினிமா விசிறி” என்ற
நாடகமாகும்.
எம்.ஜி.ஆர் நடித்த “தெய்வத்தாய்” திரைப்படத்திற்கு
வசனம் எழுதியதன் வாயிலாக திரைத்துறைக்குள்
நுழைந்தார் கே பாலசந்தர்.
பட்டப்படிப்பை முடித்த கே பாலசந்தர், முத்துப்பேட்டையில்
உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக தனது முதல் பணியை
தொடங்கினார்.
1950 ஆம் ஆண்டு சென்னையில், அக்கவுண்டண்ட் ஜெனரல்
அலுவலகத்தில் வேலை கிடைத்து, பணியாற்றத் தொடங்கினார்.
கே பாலசந்தரின் “ராகினி ரெக்ரியேஷன்” என்ற குழுவில்
நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நாகேஷ். அவருக்கு
முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட நாடகம் தான்
“நீர்க்குமிழி”.
யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல், நேரிடையாக
திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கே பாலசந்தர்.
படம் “நீர்க்குமிழி”.
திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு தயாரித்து,
கே பாலசந்தர் இயக்கிய திரைப்படம் “பத்தாம் பசலி”.
நாயகன் நாகேஷ்.
நடிகை சௌகார் ஜானகி நாயகியாக நடித்து, தயாரித்து,
கே பாலசந்தர் இயக்கிய திரைப்படம் “காவியத் தலைவி”.
“உத்தர் பல்குனி” என்ற பெங்காலி திரைப்படத்தின்
தமிழாக்கமே இத்திரைப்படம்.
நடிகர் ஜெமினி கணேசன், நாராயணி பிலிம்ஸ” சார்பில்
நாயகனாக நடித்து, தயாரித்த “நான் அவனில்லை”
திரைப்படத்தை இயக்கியதும் இயக்குநர் கே பாலசந்தர்.
கே.பாலசந்தர் எழுதி இயக்கிய நாடகம் “புஷ்பலதா”.
மூன்று கல்லூரி மாணவர்கள் புஷ்பா, லதா என்ற இரண்டு
பெண்களைப் பற்றி விமர்சிப்பதைத்தான் நாடகாமாக
எழுதியிருந்தார். ஆனால் நாடகம் முடியும்வரை புஷ்பாவும்
வரமாட்டாள் லதாவும் வரமாட்டாள்.
விறுவிறுப்பான காட்சி அமைப்புகளை உருவாக்கி
இயக்கியிருந்த இந்த நாடகம் கே பாலசந்தருக்கு நல்ல
பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நாயகனாக நடிக்க
வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படம் “எதிரொலி”.
இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ
ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை,
ருத்ரவீணா, ஒரு வீடு இரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு
மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.
பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம்
மேஜர் சந்திரகாந்த்.
நூறு படங்களுக்கு மேலாக பணியாற்றி இருந்தாலும்,
எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை.
அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும்
எழுதினார்.
தனது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய
நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன்,
கமலஹாசன், முத்துராமன் ஆகியோர்.
நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக
இருந்தவர்.
நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா
ஆகியோரைக் குறிப்பிடலாம்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய
நான்கு மொழிகளில் படங்களை இயக்கியவர்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும்
ரஜினி – கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம்,
1979ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான
“நினைத்தாலே இனிக்கும். 35 ஆண்டுகளுக்குப் பின்
இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு
பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார்
அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
பாலச்சந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல்
படம் கமல், ரஜினி நடித்த நினைத்தாலே இனிக்கும்.
நன்றி-தினமலர்

Comments

இயக்குனர் சிகரம் பற்றிய தகவல்களை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. நாளை அவரது நினைவு தினமா?
PEOPLE TODAY said…
today is 23/12/20220 his memory day.thanks sir for your comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,