கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீர் பற்றாக்குறை நீங்க
கர்ப்பமடைந்த பெண்களுக்கு பொதுவாகவே வாந்தி மற்றும் வியர்வை காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகம் வெளியேறும் அதனால் சோர்வு ஏற்படுவதுடன், வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். எனவே, நீர்ச்சத்து இழப்பை ஈடுகொடுக்கும் வகையில் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
* அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும், மோர், இளநீர், பழச்சாறு, கஞ்சி போன்றவைகளை அதிகம் குடிக்க வேண்டும். மாதுளை, சாத்துக்குடி, தர்ப்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிடலாம்.
* நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஏதாவது ஒன்றை தினம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முக்கியமாக, குழந்தையின் வளர்ச்சியின்போது, கர்ப்பிணிகள் உடம்பில் நீர்ச்சத்து இருந்தால் தான் குழந்தையின் அசைவு நன்றாக இருக்கும்.
கோடையில் பெண்களின் நீர்ச்சத்து வற்றாமல், தேவையான அளவு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தையின் உடலில் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை:
குளிர்பானங்களை குடிப்பது உடல்நலத்திற்கு கேடு. அதில் ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளதால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஐஸ் கிரீம், சிப்ஸ் அயிட்டங்கள், வறுத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். வெயிலில் சுற்றுவதை தவிர்த்து, ஓய்வெடுக்க வேண்டும்.
பெண்கள் கர்ப்பமான முதல் 3 மாதத்திற்கு பிறகு, உணவு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும், கோடை காலமாக இருப்பதால், உடலில் சூடு ஏற்படுத்தும் உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும், வாயு தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Comments