நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி 'பாவக் கதைகள்'
நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி 'பாவக் கதைகள்'
இதில் வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தலா ஒரு படத்தை இயக்கியுள்ளனர்.
இவை அனைத்தும் ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள கதையாகும். இதன் டிரைலர் கடந்த 3 ஆம் தேதி இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கியுள்ள கதையின் பெயர், தங்கம். கவுதம் மேனன் இயக்கியுள்ள கதைக்கு வான்மகள் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள கதைக்கு, லவ் பண்ணா உட்ரணும் என்றும், வெற்றிமாறன் கதைக்கு ஓர் இரவு என்றும் டைட்டில் வைத்துள்ளனர். சுதா கொங்கராவின் தங்கம் படத்துக்கு ஷான் கருப்பசாமி வசனம் எழுதியுள்ளார். சாந்தனு பாக்யராஜ், நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ், பவானி ஸ்ரீ நடித்துள்ளனர்
இதில் சாந்தனுவின் காதலுக்காக உயிர்த்தியாகம் செய்யும் மூன்றாம் பாலினத்தவராக, நடிகர் காளிதாஸ் நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. படம் பற்றி சுதா கொங்கரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மூன்றாம் பாலினத்த வர்களின் வலியை சொல்லும் படம் இது.
சினிமா அவர்களின் இயல்பை வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். உங்களால் முடிந்தால் ஒரு தீர்வை கொடுங்கள். அதுமட்டும்தான் அவர்கள் பற்றிய தவறான கருத்தை மாற்றும் வழியாக இருக்கும். இந்தப் படம் பண்ணும்வரை அவர்கள் வாழ்க்கை பற்றி யோசித்தது இல்லை. பயமாகத்தான் உணர்ந்தேன்.
ஆனால், இந்தப் படத்துக்காக அவர்கள் ஆசைகள், உணர்வுகளை அறிந்து கொள்ள பல ஆய்வுகளை மேற்கொண்டேன். அவர்களில் பலரை சந்தித்தேன். அதன் அடிப்படையில் இதை உருவாக்கி இருக்கிறேன். அவர்களின் வேதனையான வாழ்க்கையை இதில் சொல்லி இருக்கிறேன். படத்தைப் பார்த்தால் அவர்களை இனி மரியாதையாக நடத்துவார்கள் என்றார்

Comments