ரமணமகரிஷி (16)

 

ரமணமகரிஷி (16)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 16





 பகவான்      ஸ்ரீரமணரிடம்,  சிவப்பிரகாசர் கேட்ட கேள்வி,  சுவாமி நான் யார்? முக்தி அடைவது எப்படி?


 அதற்கு பகவான் ஸ்ரீ ரமணர்,  இடையறாத உள்முக (Inward )  பரிசோதனை மூலம் நான் யார் என்பதை அறியலாம். அதன் மூலம் முக்தியும் பெறலாம்.


 நான் யார்?


 முதலில் நாம் எங்கிருந்து வந்தோம். நம்முடைய ஆரம்ப நிலை என்ன, என்பதை தேட  வேண்டும். அப்படி தேடும் போது, நமக்கு என்னென்ன தேவை என்பவைகளை, ஏன் இவையெல்லாம் 

தேவையானது தானா  என்பதை உணர்ந்து, அவைகளில் இருந்து விடு பட வேண்டும்.  அதற்கு ஐம்புலன்கள் என்றுசொல்லக்கூடிய, மெய், வாய், கண், மூக்கு,செவி ஆகியவைகளை முதலில் அடக்கவேண்டும். உண்மையான நான்(Self) அல்லது சுயம் என்பது சரீரம் அல்ல.


 பொதுவாக நாம் உறங்கும் போது, மெய் மறந்து தன்னிலை மறந்து உறங்குகிறோம் அல்லவா, மீண்டும் எழும் போது  அன்றைய நாளின் தொடக்கம் ஆரம்பமாகுது. நேற்றைய தினத்திற்கும் இன்றைய தினத்திற்கும் இடைப்பட்ட உறங்கும்  நேரத்தில் தன்னை மறந்த நிலையில் நாம் இருக்கிறோம். அந்த நேரத்தில்,  அந்த நான் எங்கே போய் இருந்தது என்பதை உணர வேண்டும்.


  விழிப்பு வந்த பிறகு நம் மனமானது, ஐம்புலன் களுக்கு  கட்டுப்பட்டு அந்த எண்ணங்கள் வழியே செயல்படுகிறது.


 ஐம்புலன்களை அடக்கினால் மட்டுமே மனமும் அடங்கும்.


 மனம் தேடுவது பரமாத்மாவை (கடவுள்) மட்டுமே. நம்முடைய ஜீவாத்மா பரமாத்மாவிடம் சேருவதற்கு முன் புலனை அடக்கினால் மட்டுமே பரமாத்மா, ஜீவாத்மாவான  மனதோடு சேரும்.


 புலன் அடங்கின பின்னால், மனம் ஓரிடத்தில் உட்காரும்.

 மனம் ஓரிடத்தில் உட்கார்ந்தால் அங்கு கடவுள் எண்ணத்தால் அமர்வதும், கடவுள் அமர்ந்த பின்னர்,கடவுளும்  மனமும் தனித்தனியே இல்லாமல் இரண்டும் ஒன்றாக சேர ஆரம்பிக்கும்.


 பரமாத்மாவோடு ஜீவாத்மா சேரும் தன்மை, அவைகளில் வித்தியாசம் தெரிந்தால் சேர்ந்ததாக இல்லை என்று பொருள், பரமனோடு ஜீவாத்மா சேரும் போது வித்தியாசம் தெரியாது. அதுவே மனோ நாசம் அடைந்த நிலை. அப்போது உணர்வாய்  நான் யாரென்று.


 எல்லோருடைய உங்களுக்குள்ளும், ஒரு குரல் ஒலிக்கும், அந்த குரலை  உள்ளுணர்வு, இயற்கை,இறை என்று சொல்லலாம்.  அந்த உணர்வோடு ஒன்றுதலே மனோலயம் என்பது.


பார்க்கப்படுபவரும், பார்க்கப்படு பொருளும் வேறு வேறு அல்ல, அவை ஒன்றான உணர்வு, இரண்டும் ஒன்றிய பக்குவ நிலை, பரம்பொருளை  பார்க்கக்கூடிய தன்மை அதுவே,


 எண்ணங்கள் எங்கிருந்து உதித்தது, எண்ணங்கள் உதித்த இடத்தை பார்த்தால்,  உதித்த இடத்தில் ஒடுங்கி விடும். எண்ணங்கள்  மரித்துப் போவதால், எண்ணமற்ற நிலைலைக்குப் போவதால்,  மனமற்ற நிலைக்கு போவதால், மனமற்ற நிலையே கடவுள் நிலை என்பதால், நீ கடவுள் ஆகிறாய், அப்போது தெரியும் நான் யார் என்று.

 இன்னும் சொல்லப்போனால், எல்லாம் இருப்பதாக இருக்கும் இந்த மானுட வாழ்வில், எதுவுமற்ற நிலையை அடையும்போது, ஏதுமற்ற நிலையில் எல்லாமாய் இருப்பது பரம்பொருள் இந்த நிலைமை வந்தவுடன் கிடைப்பது, அறிவது, தெளிவது, தெரிவது தானே 

 நான் யார் என்பதற்கான கேள்விக்கு விடை இதுவே. பகவான் ஸ்ரீ ரமணரின் தெளிவான கருத்தும் இதுவே.


 இந்த கேள்விகளுக்கு பதில் வாங்கிய சிவப்பிரகாசர், பகவானை பல்வேறு நூல்களில் மூலம் போற்றுதல் செய்தார்.  இதன் விவரம் நாளைய பதிவில்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,