இல்லம்சுபிட்சம்அடைய 108_ஆன்மீக_குறிப்புகள்

 இல்லம்சுபிட்சம்அடைய

108_ஆன்மீக_குறிப்புகள்



1) பூக்களைத் தொடுத்து கட்டும்போது இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்கக்கூடாது. நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்து கொள்ளுங்கள்.


2) வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள் இது இறை சக்தியைக் குறைக்கும்.


3) வீட்டின் நிலைகளில் குங்குமம் மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் பயந்து ஓடும்.


4) ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தை ஊதுபத்தியை ஏற்றக்கூடாது. சனி பகவானுக்கு வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.


5) செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமை கணவன் மனைவியுடன் சண்டை போடாதீர்கள். சுப கடாட்சம் குறைந்துபோகும்.


6) தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் கோபுரம், தீபம், கண்ணாடி, சந்தனம் மிருதங்கம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.


7) பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது.


8) பொதுவாக பெண்கள் நெற்றி திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.


9) பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.


10) வீட்டின் பூஜை அறையில் சுவாமி படங்களுடன் இறந்தவர்களின் படங்களை சேர்த்து வைக்கக் கூடாது.


11) யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது.


12)செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும்.


13)செவ்வாய்கிழமையில் செவ்வரளி மலரைக் கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.


14)குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.


15)கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டு வணங்கத் தொழிலில் தடைகள் நீங்கி லாபம் கிட்டும்.


16)சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும்.


17)இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.


18)ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.


19)பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும்.


20)கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.


21)சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில் பணம் தொழிலில் வரும்.


22)பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.


23)முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.


24)தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.


25)சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.


26)சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.


27)வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


28)அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.


29)இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.


30. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.)


31. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.

முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.


32. காயத்ரி மந்திரத்தை 

பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது

சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.


33. கற்பூர ஹாரத்தி :

(சூடம்காண்பித்தல் பற்றி)


சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.


தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்

முகத்துக்கு ஒரு தடவை

கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.


34. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.


35. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.


36. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்


• விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்


• விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்


• பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்


இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.


37. கலசத்தின் அா்த்தங்கள்

கலசம்(சொம்பு) − சரீரம்

கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு

கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்

கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை

கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்

கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்

கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)

உபசாரம் − பஞ்சபூதங்கள்.


38.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...


• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,

தயிர் சாதம், பலகாரம்

• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

• ஆனி – தேன்

• ஆடி – வெண்ணெய்

• ஆவணி – தயிர்

• புரட்டாசி – சர்க்கரை

• ஐப்பசி – உணவு, ஆடை

• கார்த்திகை – பால், விளக்கு

• மார்கழி – பொங்கல்

• தை – தயிர்

• மாசி – நெய்

• பங்குனி – தேங்காய்.


39. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக 

கிடைக்கும்.


40. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.


41. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )


42. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.


43. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது


44. அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.


45.கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்.


46. பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.


4 7.குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.


48.தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய்,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.


49. வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.


50. இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.


51. ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்.


52.குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.


53. நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்.


54. தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.


55. பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.


56. நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.


57. தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது.


58. ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.


59. பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்.


60. பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள் .


61. நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள் .


62.பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்.


63. புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்.


64. தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.


65. பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.


66. தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.


67. சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.


68. ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்.


69. அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.


70. விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்.


71. சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.


72. ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.


73. இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

- கருட புராணம்.


74.எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.


75, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.


76. செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.


77. வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.


78. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.


79. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.


80. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.


81. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.


82. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருகும்.


83. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.


84. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.


85. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.


86. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.


87. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.


88.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.


89. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.


90. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.


91. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.


92. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.


93. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?


94. வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.


95. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.


96.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.


97, வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.


98, எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.


99..எந்தகவன குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.


100,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.


101,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.


102,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.


103,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.


104.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.இருகைகளும் கொண்டு தலையை சொரிய கூடாது .


105.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது,நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.


106.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது,தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.


107.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.


108.எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.


விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,