ஞாயிறு திரை மலர்,17/01/2021

 ஞாயிறு திரை மலர்,17/01/2021
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எம். ஜி. ராமச்சந்திரன்


மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.

பிறந்த தேதி: ஜனவரி 17, 1917 பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை இறந்த தேதி: டிசம்பர் 24, 1987 தொழில்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி குடியுரிமை: இந்தியா குடும்ப பின்னணி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை கேரள பெற்றோருக்கு பிறந்தவர், மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். அவருடைய பெற்றோரான மேலக்காடு கோபால மேனன் மற்றும் மருதூர் சத்யபாமா அவர்கள், கேரளாவின் பாலக்காடு பகுதியில் வடவனூர் பகுதியில் வசித்து வந்தனர். ஆனால், எம்.ஜி.ஆரின் தந்தை வழக்கறிஞர் என்பதால், அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்தது. இதன் காரணமாக அவர் கேரளாவிலுள்ள தனது சொந்த வீட்டில் இருந்து தப்பி ஓடினார். அவர் இலங்கை சென்று வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு தான் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் பிறந்தார். மேலக்காடு கோபால மேனன் அவர்கள் ஒரு பிராமண விதவையுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கேரள சமூகத்தின் மரபுகளை பின்பற்றி, சக மனிதர்கள் அவருக்கு ‘ஸ்மார்தவிசாரம்’ செய்து அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர். அவருடைய குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகவே அவர் சிலோனுக்குத் தப்பி ஓடினார். மேலக்காடு கோபால மேனன் அவர்கள், சிலோனில் மருதூர் சத்யபாமா என்பவரை திருமணம் செய்தார். அங்கு அவர்களுக்கு ஜனவரி 17, 1917 ஆம் ஆண்டு, எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மகனாக பிறந்தார். எம்.ஜி.ஆரின் பிறந்த இடம் இன்றும் இலங்கையில் இருக்கிறது. தனது குழந்தை பருவ தொடக்கத்தில் இருந்தே, எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், இந்து மதத்தைத் தீவிரமாகவும், உறுதியாகவும் நம்பினார். இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தெய்வமாக இருக்கும் முருகக்கடவுளைத் தனது ஆஸ்தான கடவுளாக எண்ணித் தீவிரமாக வழிபாடு செய்து வந்தார். திரையுலக வாழ்க்கை எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது. விருதுகள் மற்றும் அங்கீகாரம் 1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார். சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கை எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார். இறப்பு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது. காலவரிசை 1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார். 1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது. 1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார். 1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார். 1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார். 1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார். 1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார். 1969 : திமுக பொருளாளராக மாறினார். 1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார். 1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார். 1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். 1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.. 1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார். 1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.

________________________________________________________________________________________

சோசியல் மீடியா குயினாகவும் வலம் வரும் நயன்தாரா,

அழகிய பட்டுப்புடவையுடன் ஜொலி ஜொலிக்கும் நகைகள் அணிந்த படி புன்னகை பொங்க, பொங்கல் பானையுடன் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.____________________________________________________________________________________
ரத்தக்கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து
காட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22படங்கள் நடித்தார்!
பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள் மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை
'கலைஞர்
கருணாநிதி'
என்று
அழைத்துப்பட்டம் கொடுத்தவர்.
'நடிகவேளின்
தலைமுடியும் நடிக்கும்'
என்று கலைஞரும்
பாராட்டி இருக்கிறார்!
பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள் ''திராவிட
இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக
நியமிக்கப்படுவார்''
என்று பகிரங்கமாக
அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!
பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள் தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார்.
''போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப்
போய்ப் பாருங்கடா''
என்பது அவரது
அழுத்தமான கருத்து!
பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள் Bullet விழாக்கள்,
பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித
ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார்.
'ஆடையில்
என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால
ஏத்துக்கிறேன்'
என்று அங்கும்
கர்ஜித்தார் ராதா!
பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள் 'மக்களின்
அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற
நாடகங்களும் தேவை'
என்று சொன்னவர்
விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!
இணையத்தில் இருந்து எடுத்தது

-------------------------------------------------------------------------------------------

ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம்
வேலை செய்த ஒருவர்,
'எனக்குத் திருமணம்' என்று வந்து
நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து,'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்'
என்றார்!
'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி
கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார்.
'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்'
என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே,
'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே
சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
இணையத்தில் இருந்து எடுத்தது

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின்
பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !
வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும்,இயேசு- மேரி மாதா படங்களும், திருப்பதி
வெங்கடாசலபதியும்,முருகனும்,
பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!
ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப்
பழக்கமாகக்கொண்டவுடன், கோயிலுக்கு செல்வது இல்லை !
எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள்!
தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985–ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானேமந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தச் சாதனை
வேறு எந்த ஹீரோவும் செய்யாதது !
பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால்
பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரைபோய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் ஃபுட்பால் பிரியம்.
விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே
படம்... ‘இனிக்கும் இளமை’ அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான்!
நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு!
‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு
நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட்சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழாவில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் !
செயின் ஸ்மோக்கராக இருந்த
விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே
விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்!
பிரபலங்களின் சுவையான சிறு குறிப்புகள் இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார். ஒன்று, ராமநாராயணன்
அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ !
கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைப்பார்கள்!
திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி
ஜானகி!
சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும்
படிக்கவைக்க உதவி செய்கிறார் !
ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து
செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த்!
விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுப்பிக்க
உதவியிருக்கிறார்!
ஹிந்தியில் தர்மேந்திரா, அமிதாப், தெலுங்கில் என்.டி.ஆர், சிரஞ்சீவி,மகேஷ்பாபு, கன்னடத்தில் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், சங்கர் நாக், மலையாளத்தில் சத்யன் படங்கள் என்றால்
விஜயகாந்த்துக்கு மிகவும் பிடிக்கும்.சத்யனின் ‘கரை காணா கடல்’ அவருக்கு மிகவும் பிடித்த படம்!
எங்க வீட்டுப் பிள்ளை படத்தை 70 தடவைகள் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்து இருக்கிறார் விஜயகாந்த். இஞ்ச் பை இஞ்ச் காட்சிகளவர்ணிப்பதில் சந்தோஷப்படுவாராம்!
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்க்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்க்ஷனில்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


விக்ரமுக்கு மிகவும் உயிரான பாடல், ‘பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை’,

தினமும் ஒரு தடவையாவது டி.எம்.எஸ்,பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில்
கேட்டுவிட்டுத்தான் தூங்குவார் !
வெளியூர் படப்பிடிப்புக்குப் போனால், அந்தந்த வட்டார ரசிகர்களுக்குக்
கொண்டாட்டம் தான். அவர்களோடு இரண்டு மணி நேரமாவது இருந்து பேசி விட்டு,ஒரு காபியாவது குடித்துவிட்டுத்தான் வருவார்!
பள்ளிப் படிப்பு முழுவதும் ஏற்காடு மாண்ட்ஃபோர்டு ஸ்கூலில், அதனால் ஆங்கில நாடகங்களில் நிறைய நடித்த அனுபவமும் உண்டு. காலேஜ்.... தமிழ்
ஹீரோக்களைத் தயாரிக்கும் லயோலா !
போட்டோகிராஃபியில் ஆர்வம் அதிகம். விருந்தினர்களை, நண்பர்களை புகைப்படம்
எடுத்து பிரிண்ட் போட்டுத் தந்து அசத்துவார்.
எப்பவும் பிடித்த கலர் கறுப்பு. கார்களின் வண்ணமும் அதுதான். மிகவும் வேண்டிய விழாக்களுக்குச் செல்லும்போது, அதற்கு மிகவும் தகுந்த மாதிரியோசித்துத்தான் உடைகள் அணிவார் !
பண்ணைத் தோட்டத்தில் காட்டுப் பூனை, வாத்து, வான்கோழி, நண்டுகள் எனவெரைட்டியாக, ஆசை ஆசையாக வளர்க்கிறார். விடுமுறை கிடைத்தால், தோட்டத்துக்குக் குடும்பதோடு பறந்து விடுவார் !
இரண்டு செல்போன்கள் வைத்திருக்கிறார். அவ்வளவு நண்பர்கள். அத்தனை
பேருக்கும் ஞாபகம்வைத்துப் பதில் அளிப்பார் !
நகைகளின் மீது ஆர்வமே இல்லை. அதிசயமாய் என்றைக்காவது அடையாளமே தெரியாமல்
மெல்லிசாய் தங்கச் சங்கிலி மின்னும்.மிகவும் வேண்டிய ஒருவர் பரிசளித்த கல் மோதிரம் மட்டும் விரலில் இருக்கும் !
எப்போதும் பிடித்தது பழைய சாதம். பொரியல், கருவாட்டுக் குழம்பு,
ஆட்டுக்கால் பாயா, நாக்கு மீன் வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் தான் விக்ரமுக்குச் சாப்பாடே இறங்கும் !
விக்ரமின் செல்லப் பெயர் கென்னி. இந்தப் பெயரில் நீங்கள் கூப்பிட்டால்,
உடனே திரும்புவார். ஒரு ஹாய், கையசைப்பு, ஒரு புன்னகை இலவசம் !
ஏகப்பட்ட இசைக் கருவிகளை வாசிப்பார். ஆரம்பத்தில் இருந்து இசையில் பிரியப்பட்டு இருக்கிற விக்ரமுக்குப் பிடித்த கம்போஸர்....யானி !
பெசன்ட் நகரில் வீடியோ கடை, பழக்கடை இப்படி எங்காவது விக்ரம் மாதிரி யாராவது தென்பட்டால், ஆச்சர்யப்பட வேண்டாம். அது அவரேதான். ஸ்டார் என்ற
பந்தா இல்லாமல், அவரே இறங்கி பர்சேஸ் செய்வார்.
ஆதரவற்றவர்களுக்கான இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவுகிறார். இவரது பிறந்த
நாளுக்குக் குவிகிற ரசிகர்களில், இதய சிகிச்சை செய்துகொண்டு
மீண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும் !
விக்ரமின் வீட்டை அலங்கரிக்கும் ஓவியங்கள். அவருடைய கை வண்ணம்தான். இப்பவும் அவுட்டோர் போனால் இயற்கை தரும் அபூர்வமான இடங்களை வண்ணத்தில் கொண்டுவந்து விடுவார் !
நேஷனல் அவார்டு வாங்கிய அன்று எந்த பார்ட்டி, படாடோபம் இல்லாமல், வீட்டில் குடும்பத்தோடு இருந்த வித்தியாசமானவர் விக்ரம்
விக்ரமுக்குப் பிடித்த நடிகர், ராபர்ட் டி நீரோ. பிடித்த நடிகை, ஜுலியா
ராபர்ட்ஸ்,எல்லோர் மாதிரியும் நடித்துக் காட்டி அசத்துவார் !
ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி எனச் சரளமாக உரையாடுவார். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதும் பழக்கமும் உண்டு
அதிர்ஷ்டமல்ல, தன்னம்பிக்கை மட்டுமே கைகொடுக்கும் என்பதை எப்போதும் நம்புவார் !
விக்ரமின் செல்போன் ரிங்டோனாக இப்பவும், ‘மூங்கில் காடுகளே, வண்டு முனகும் பாடல்களே’ என சாமுராய் பாடல் தான் ஒலிக்கும். இன்னொரு போனில் ‘எக்ஸ் கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி’ !
விக்ரம் தன் நண்பர்களை, டைரக்டர்களை சந்திக்கிற இடம், அடையார் பார்க்
ஷெராட்டனின் லாபியில் தான் !
‘கிங்’ என்றுதான் தன் கணவரை மனைவி ஷைலா செல்லமாக அழைப்பார் !
ஜப்பானிய உணவு வகைகளை மிகவும் பிரியப் பட்டுச் சாப்பிடுவார். தென்னகஉணவுகளைத் தவிர, விக்ரம் விரும்பும் உணவுவகை இதுதான் !
விக்ரமின் இதரப் பெயர்கள் சீயான், கென்னி, ஜான் கென்னடி, அவரது
அதிகாரபூர்வமான வெப்சைட்டில் இருக்கும் பெயர் விக்ரம் கே.வினோத் !

நன்றி:ஆனந்த விகடன்


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

அரிய புகைப்படங்கள்
//////////////////////////////////////////////////////////  //////////////////////////////////////////////      /


திரைநட்சத்திரங்களின் பொங்கல் கொண்டாட்டம்குட்டி பாப்பாவுடன் க்யூட் போஸ் கொடுக்கும் நகுல்


மனைவி, மகளுடன் பிக்பாஸ் கணேஷ் வெங்கட் ராமனின் பொங்கலோ... பொங்கல்.
கணவர் பிரசன்னா, மகன், மகளுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய சினேகா

பொங்கலை முன்னிட்டு நமீதா வீட்டு வாசலில் அவர் கையாலேயே போட்ட கோலம் வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,