பொங்கல் மலர் 2021
- Get link
- X
- Other Apps
பொங்கல் மலர் 2021
வாசகர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்....
மலர் தயாரிப்பு: உமாகாந்தன்.நிர்வாக ஆசிரியர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ஆன்மிகம்
சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்!
லட்சக்கணக்கான ஆலயங்கள் இருந்தாலும், சில நூறு பெரிய ஆலயங்களில், கருவறையிலுள்ள இறைத்திருவுருவின் மீது, சூரிய ஒளி படரும் அமைப்புடையவற்றை சூரிய பூஜைக் கோயில் என்று நம் முன்னோர்கள் போற்றி வந்திருக்கின்றனர். ஊர்தோறும், தெருதோறும் உள்ள கூரையே இல்லாத மேடைக் கோயில்களிலும் கருவறை மட்டுமே உடைய பல்லாயிரம் சிறிய கோயில்களிலும், அன்றாடம், இறைவடிவின் மேல் பல மணி நேரம் சூரிய ஒளி படுகின்றதை சிறப்பு அம்சமாகக் கருதாத போது, எப்போதாவது சில நாட்கள் மட்டுமே கருவறையில் சூரிய ஒளி பரவும் கோயில்களை பெருமையாகப் பேசுவது ஏன்? பல முன் மண்டபங்களைத் தாண்டிக் கருவறையில் சூரிய ஒளி படர்வது ஒரு பொறியியல் சாதனை மட்டுமா? எல்லா மண்டபங்களையும் தாண்டி கருவறையில் கதிரவனின் ஒளி படருமாறு அமைப்பது ஏன்? நாம் உணராவிட்டாலும் கூட, காற்று ஓட்டம், காந்த சக்தி நகர்வு, ஒளிச் சிதறல், ஒலிப்பரவல் போன்ற பல இயற்கைச் சக்திகளின் இயக்கத்திற்கு நாம் ஒவ்வொரு நொடியும் ஆளாகிக் கொண்டேயிருக்கிறோம். குடிசையாயினும், மாளிகையாயினும், பலமாடிக்குடியிருப்பு ஆயினும், பொருள் கிடங்காயினும், பெரும் ஆலயங்களாயினும், சிறு பந்தலாயினும் சரி, நாம் உருவாக்கும் ஒவ்வொரு அமைப்பும் மேற்கண்ட இயற்கைச் சக்திகளின் நகர்வில் குறுக்கிடுகின்றன. இக்குறுக்கீட்டினால் நமக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, தீவிர ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டவையே வாஸ்து சாஸ்திரம். வாஸ்து நியதிகள் எல்லா கட்டமைப்புக்கும் உண்டு. ஆலயங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், ஆலயங்கள் கட்டுமானத்திற்குத் தான் வாஸ்து விதிகள் அதிகம். அதிலும், ஆலய வளாகம் பெரிதாகப் பெரிதாக நியதிகளும் அதிகமாகின்றன. கருவறையில் சூரிய ஒளி படர வழி வகுப்பதும், கருவறையைச் சுற்றி மண்டபங்கள் எழுப்பும்போது வெளிச்சமும், வெய்யிலும், காற்றும் உள்ளே பரவிடுதற்காக, மேல் விதானத்தில் ஆகாயம் தெரியுமாறு, பிரம்மவெளி என்று அழைக்கப்படும் ஜன்னல்கள் வைப்பது முக்கிய நியதிகளாகும். இயற்கைச் சக்தியோடு நமக்கு தடையற்ற தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றும் பல ஊர்களில் பெரிய வீடுகளில் திறந்த வெளி முற்றங்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டு அறைகளில் இயற்கைச் சக்திகளின் இயல்பான ஓட்டம் தடைப்படுவது அதிகரிக்க அதிகரிக்க, நாம் செயற்கையாக, வெளிச்சத்துக்கு விளக்கும், காற்றுக்காக காற்றாடியும் உபயோகிக்கிறோம். பலமாடிக் குடியிருப்புக்களில் வீட்டிலுள்ள சமையல் வாடையும், கழிவறை நாற்றமும் வெளியேறிட காற்று வெளித்தள்ளியும் வைக்கிறோம். இது போன்ற ஒரு செயல்பாடே, ஆலயக்கருவறையில் சூரிய ஒளி படரச் செய்திடுவதும் ஆகும். அன்றாடம் இயலாவிட்டாலும், நாம் வருடாவருடம், எப்போதாவது அருவியிலும், ஆற்றிலும், கடலிலும் நீராடி ஆரோக்கியம் பராமரிப்பது போல, பல்லோரும் கூடிடும் ஆலயங்களிலும், அசுத்த நிலையை நீக்கி தூய்ப்பிக்கும் முயற்சியே மிக நுணுக்கமான, அளப்பரிய சக்தி வாய்ந்த சூரிய ஒளியை பரவச் செய்யும் ஆலய இயல் நியதியும் ஆகும். மூர்த்திக்கு எதிரே நின்று அர்ச்சகர் பூஜிக்கலாகாது என்றும், பக்தர்கள் வழிபடலாகாது என்றும் கூறுவதற்குக் காரணம், பின் இருப்பவர்க்கு இறைவனைக் காண முடியாது என்பது மட்டுமல்ல. கருவறைக்கும் பிற மண்டபங்களுக்கும் இடையிலான ஒளி, ஒலி, காற்றுப் பரவல் தடைப்படக்கூடாது என்பதுவே மிக முக்கியகாரணம். சூரிய ஒளி பரவல் அமைப்பு உள்ள கோயில்கள் பல இருந்தாலும், தமிழகத்தில் தான் அவை அதிகம் உள்ளன. தமிழகத்திலுள்ள சுமார் 100 சூரிய பூஜைக் கோயில்களில் மிகச் சிலவற்றில் மட்டுமே (கண்டியூர், சங்கரன் கோயில் போல) ஒளிப்பரவல் மாலையில் ஏற்படுகிறது. மற்றவற்றில் காலையில் தான். பலவற்றில் சூரிய பூஜை அமைப்புடைமை பொது மக்களுக்குத் தெரியாமலேயே உள்ளது. பஞ்சாங்கங்களில் கூட சிலவைப் பற்றி மட்டுமே குறிப்பு உள்ளது. ஒளிப்பரவல் நேரத்தில் பல்லோரும் கூடி இறைநாமம் ஜபிக்கும்போது நல்ஒலி அதிர்வுகளும் சேருவதால் ஆலயம் புதுப்பொலிவும், ஈர்ப்பும் பெற்று நாம் அடையும் பயனும் பன்மடங்காகிறது. அடிக்கடி ஆலயம் செல்ல முடியாவிட்டாலும், சூரிய பூஜை நேரத்திலாவது இறைவனை கண்டிப்பாக தரிசிக்க முயல்வோம்.
===============================================
தைமகள்
தீய எண்ணங்களை தீயிலிட்டு
பழையன கழித்திட புதியன புகுத்திட
நல்லெண்ணங்கள் உள்ளத்தில் புகுந்திட
வந்த நாள் போகி என்னும் திருநாள்
தித்திக்கும் கரும்புடன்
தித்திக்கும் பொங்கலாம்
எத்திக்கும் கொண்டாடும்
தித்திக்கும் பொங்கலாம்
தைமகள் இல்லம் தேடி
குடிபுகுந்தாள் - நம்
வாழ்வினில் இன்பமென்னும்
ஒளி கொடுத்தாள்
பசியென்ற சிசுவிற்கு
பால் தரும் பசுவினை
பாசமுடன் கொண்டாடி
கோமாதா என பண்பாடி
மஞ்சள் குங்கும மலர் சூடி
மகழ்ச்சி பொங்க ஒன்றாகி
கொண்டாட வந்த ஒருநாள் – அது
மாட்டுப் பொங்களென்ற திருநாள்
நண்பர்களுக்கும் நண்பர்களின் குடும்பத்தார்க்கும் என் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்.....
--நித்யஸ்ரீ
2 .பொங்கிப் பெருக
மேகமாய்
ஆசைகள்
ஆங்கோர்ப் புறம்
அலைமோத
தேகமோ வேகமாய்
வயதினில் உருமாற
மோகமாய் மேவிய
இவ்வாழ்வினில்
இனி எல்லாமே
யோகமும் போகமுமாய்ப்
பொங்கிப் பெருக
பொங்கல் வாழ்த்துகள்
உங்கள் அனைவருக்கும் !
;;;;;;;;;;;;;;;;
போற்றி பெறுவோம்
அகிலத்திற்கு ஒளிதரும் ஆதவன் என்பதை
அன்றாடம் காண்கிறோம் கிழக்கிலிருந்து
உதிப்பதை
ஒவ்வொரு பொருளுக்கும் அடித்தளமே விதை
உழவனின் உதவியால் மண்ணில் அழுந்திய(வி)தை
மண்ணின் தன்மையால் மகசூல் ஆனதை
மகிழ்ந்தே தரணியெங்கும் பசுமையை சேர்த்ததை
நெல்மணிகள் நிலத்தில் கதிராய் சாய்ந்ததை
நெஞ்சம் மகிழ விவசாயி அறுவடை செய்ததை
ஆலையில் உமியிலிருந்து பச்சரிசியாய் பிரித்ததை
மாதர்கள் அள்ளியே மண்பானையில் போட்டதை
பாலோடு சேர்ந்து பொங்கும் இன்பமதை
பொங்கலோ பொங்கலென சொல்லுவோம் நல்வார்த்தை
கனிவோடு கரும்பும் இனித்து மகிழ்ந்ததை
மஞ்சளோடு மணக்க பானையில் சுற்றியதை
காலகாலம் செய்யும் நம் தமிழர்களின் பண்பதை
கதிரவனுக்கு காட்டியே பொங்கலை படைத்ததை
தைத்திருநாள் தருமே தமிழனுக்கொரு அடையாளத்தை
தரணி தந்திடும் உழவுக்கொரு மரியாதை
நாடாள்பவர்கள் அறியனும் வேளாண்மையின் மகத்துவத்தை
நாளும் உணவொன்றே தீர்க்கும் பசியதை
பொங்கலாய் வரும் இன்றைய தினத்தை
போற்றி பெறுவோம் வாழ்வில் வளத்தை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கட்டுரை
[: தைப்பொங்கல் வரலாறு..!
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாக இருந்து வருகிறது. இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனை பிரார்த்தனை செய்தார்கள். மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவரை வழிபட்டால், மாதம் மும்மாரி மழை பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல் சிறப்பு : ¤தைப் பொங்கல் என்பது நமக்கு நெற்பயிரை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெற்பயிரை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை விழாவாக கொண்டாடப்படுகிறது. 1. முதல்நாள் போகி பண்டிகை. இந்நாள் இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும். 2. இரண்டாம் நாள் சூரியப் பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். 3. மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல். உழவுத் தொழிலுக்கு துணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளாகும். 4. நான்காம் நாள் காணும் பொங்கல். "இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்"
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
நெஞ்சம் மறப்பதில்லை -
இசை ஆர்வலர் திரு மோகன் அவர்களின் கட்டுரை
பாடல்
என் கேள்விக்கென்ன பதில்.
.
படம்: உயர்ந்த மனிதன்
இந்த டியூனை classical/ folk/ western என்று எந்த BGM போட்டாலும் நன்ராக இருக்கும் ...
.actually the song recorded earlier had strong western bgm.மெய்யப்ப செட்டியார் அந்த bgm சிச்சுவேஷனுக்கு ரொம்ப அன்னியமாக தோன்றியதால் எளிமையாக மாற்ற சொன்னார்.( ரேடியோவில் அந்த முதல் பாடல் தான் ஒலிபரப்புவார்கள்)
ரொம்பவும் இளமையான ட்யூன்.இன்று கேட்டாலும் ஏதோ நேற்றுதான் ஒலிப்பதிவு செய்தது போலிருக்கும் ...
இந்த படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட் ஆன பாடல்கள்.
பாரதி : இன்று பார்க்க முடியாத இரட்டை ஜடை ஹீரோயின்! தமிழ் படங்களில் மிக குறைவாக வாய்ப்பு கொடுக்கப்பட்ட நல்ல நடிகை. அவர் காலத்தில், ( பிந்தைய 60 கள்) இன்று பலரும் ஆசைபடும் ஸ்லிம்மான உடலவாகை கொண்ட சில பேரில் பாரதியும் ஒருவர். . அப்போதைய காலத்தில் கே ஆர்விஜயா ,பத்மினி எல்.விஜயலக்ஷ்மி போன்றோரே ஸ்லிம் கனக்கில் ஓரளவு சேர்க்க முடியும்! (ஒரு சில கதாநாயகிகளை டூயட் காட்சியில் பார்ப்பதற்கு மனதை திடப்படுத்திக் கொண்டுதான் பார்க்க வேண்டும் ) Bharathi was a talented artist but for reasons unknown she faded away in tamil films. சிவகுமாருக்கு தனக்கு நிகரான இடம் படத்தில் கொடுத்த சிவாஜியை பாராட்டத்தான் வேண்டும்... .sivakumar was just a chocolate boy in this film. Its amazing that he continued with the same facial expressions and body language of this song , right through his career ! No improvisation ! In my opinion, He remained a chocolate boy in most of his career, May not be a great actor , but his dicipline and dedication alone took him to great height. in this song he did what he was told to do...just smile! பாடலின் சரனத்த்தின் டியூனை ஆரம்பத்திலேயே பி சுசீலா பாடியிருக்கிறார். பல்லவிலேயே சரணம்( பூவையர் உள்ளத்தில் இந்த மௌனம் சம்மதமே) பாடியபின் அதே சரனமாகவும் தொடர்கிறது. (1.புன்னகை அள்ளிவர... 2.அனுபவம் உண்டானால்) டி எம் எஸ் சிரமம் எடுத்து சிவகுமாருக்காக அவர் ஸ்டைலில் பாடியிருக்கிறார். அவரது மாடுலேஷன் சிவகுமாருக்கும் பொருந்துகிறது! how well he has adopted his voice .. ( ..siva kumar in his earlier career didnot drag in his dialogue deluvery as he did later !later .... his 'drag' become a brand for him in all mimicry performances..) பி சுசீலாவின் குரல் crystal clear! So pleasing to hear...
பாரதி : இன்று பார்க்க முடியாத இரட்டை ஜடை ஹீரோயின்! தமிழ் படங்களில் மிக குறைவாக வாய்ப்பு கொடுக்கப்பட்ட நல்ல நடிகை. அவர் காலத்தில், ( பிந்தைய 60 கள்) இன்று பலரும் ஆசைபடும் ஸ்லிம்மான உடலவாகை கொண்ட சில பேரில் பாரதியும் ஒருவர். . அப்போதைய காலத்தில் கே ஆர்விஜயா ,பத்மினி எல்.விஜயலக்ஷ்மி போன்றோரே ஸ்லிம் கனக்கில் ஓரளவு சேர்க்க முடியும்! (ஒரு சில கதாநாயகிகளை டூயட் காட்சியில் பார்ப்பதற்கு மனதை திடப்படுத்திக் கொண்டுதான் பார்க்க வேண்டும் ) Bharathi was a talented artist but for reasons unknown she faded away in tamil films. சிவகுமாருக்கு தனக்கு நிகரான இடம் படத்தில் கொடுத்த சிவாஜியை பாராட்டத்தான் வேண்டும்... .sivakumar was just a chocolate boy in this film. Its amazing that he continued with the same facial expressions and body language of this song , right through his career ! No improvisation ! In my opinion, He remained a chocolate boy in most of his career, May not be a great actor , but his dicipline and dedication alone took him to great height. in this song he did what he was told to do...just smile! பாடலின் சரனத்த்தின் டியூனை ஆரம்பத்திலேயே பி சுசீலா பாடியிருக்கிறார். பல்லவிலேயே சரணம்( பூவையர் உள்ளத்தில் இந்த மௌனம் சம்மதமே) பாடியபின் அதே சரனமாகவும் தொடர்கிறது. (1.புன்னகை அள்ளிவர... 2.அனுபவம் உண்டானால்) டி எம் எஸ் சிரமம் எடுத்து சிவகுமாருக்காக அவர் ஸ்டைலில் பாடியிருக்கிறார். அவரது மாடுலேஷன் சிவகுமாருக்கும் பொருந்துகிறது! how well he has adopted his voice .. ( ..siva kumar in his earlier career didnot drag in his dialogue deluvery as he did later !later .... his 'drag' become a brand for him in all mimicry performances..) பி சுசீலாவின் குரல் crystal clear! So pleasing to hear...
video link
4) டூயட்பாட்டுதான்... ஆனால் பாடல் முழுதும் காதலர்கள் ஒரு இடத்தில் கூட தொட்டு கொள்ளாமலேயே பாடுகிறார்கள். . நம்ப முடியாத அதிசயம்! Keeping a safe (social) distance !( covid இல்லாமலேயே!) வாலியின் என்றும் இளமையான வரிகள் அன்பெனும் பள்ளியிலே புது மாணவியானவளே ( அட!) விழி தானே சொல்லித் தரும் மனம் தானே எழுதி வரும் ஒரு நாளில் பழகி விடும் உடல் தானே துள்ளி விழும் மிக வும் இளமையான பாடல். அதனால்ரதான் இன்றும் ரசிக்க முடிகிறது.....! மீண்டும் சந்திப்போம் வணக்கம் மோகன்
4) டூயட்பாட்டுதான்... ஆனால் பாடல் முழுதும் காதலர்கள் ஒரு இடத்தில் கூட தொட்டு கொள்ளாமலேயே பாடுகிறார்கள். . நம்ப முடியாத அதிசயம்! Keeping a safe (social) distance !( covid இல்லாமலேயே!) வாலியின் என்றும் இளமையான வரிகள் அன்பெனும் பள்ளியிலே புது மாணவியானவளே ( அட!) விழி தானே சொல்லித் தரும் மனம் தானே எழுதி வரும் ஒரு நாளில் பழகி விடும் உடல் தானே துள்ளி விழும் மிக வும் இளமையான பாடல். அதனால்ரதான் இன்றும் ரசிக்க முடிகிறது.....! மீண்டும் சந்திப்போம் வணக்கம் மோகன்
################################################################
வாழ்க்கை ஓர் உன்னதம்.
உணர்ந்து ரசிப்போம் நாம் உள்ளவரை. வாழ்க்கை. . . . . ஓர் புத்தம் புதிய கோள் நமக்கு அறிமுகமாகாதவரை! வாழ்க்கை. . . . ஓர் அச்சிடாக் காகிதம் நம் வரலாற்றை அது சுமக்காத வரை! வாழ்க்கை... ஓர் திக்கறியா பயணம் லட்சிய துடுப்பைக் கையில் நாம் எடுக்காதவரை! வாழ்க்கை.... ஓர் புதை குழி நம் பயணம் நேர்வழி செல்லாதவரை! வாழ்க்கை..... ஓர் மூடிய அகராதி அதன் புதிய அர்த்தமாய் நாம் மாறாதவரை! வாழ்க்கை... ஓர் இருட்டறை அறிவு விளக்கை நாம் தூண்டாத வரை! வாழ்க்கை... ஓர் தீ சுவாலை தீய எண்ணங்களை நாம் பொசுக்காதவரை! வாழ்க்கை.... ஓர் பாலைவனம் பசுமை கனவுகளை நாம் விதைக்காத வரை! வாழ்க்கை... ஓர் புரியாத புதிர் அதன் இரகசிய முடிச்சுகளை நாம் அவிழ்க்காத வரை!...!.....!.......... வாழ்க்கை ஓர் உன்னதம். உணர்ந்து ரசிப்போம் நாம் உள்ளவரை.
////////////////////////////////////////////////
ஆதிகால உணவு..
ஆதிகாலத்தில் காய்கறிகளையும் மாமிசத்தையும் பச்சையாக சாப்பிட்ட மனிதன் நெருப்பின் பயன்பாட்டை கண்டுபிடித்த பிறகு முதன்முதலில் சமைத்து ருசித்த உணவு பொங்கல் தான் என்கிறார்கள். ஆரம்பத்தில் அரிசி வெந்ததும் தண்ணீரை வடிக்கும் பழக்கம் கூட இருந்ததில்லை. அதனால் அரிசியும் தண்ணீரும் கலந்த பொங்கல் கஞ்சியாக தான் குடித்து வந்தனர். பிறகு பொங்கலுடன் சர்க்கரையையும் சேர்த்து சமைத்தனர். அந்த சர்க்கரைப் பொங்கல் அக்கார அடிசல் என்று அழைக்கப்பட்டது. இதுபோலவே பருப்பு சேர்த்து செய்யப்பட்ட பொங்கல் கும் மாயம் என அழைக்கப்பட்டது.
இப்படி அரிசியும் தண்ணீரும் கலந்த பொங்கல் தான் மனிதனின் ஆதி சமையல் உணவு. எனவே பொங்கலே உணவுகளின் தாய் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அந்த ஆதிகால வழக்கம்தான் வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பண்டிகை என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் சர்க்கரைப் பொங்கல் வெண் பொங்கல் சமைத்து பரிமாறப்படுகிறது. அதுவும் அறுவடை காலத்தில் உன்னத உணவாக தை மாதம் ஒன்றாம் தேதியை பொங்கல் வைத்து பெருமைப்படுத்தும் வகையில் தனி பண்டிகையே பொங்கல் பண்டிகை என
கொண்டாடப்படுகிறது.
ஆதாரம்... இன்றைய தினத்தந்தி நாளேடு.
கா. இராசா மீரா
8870044641
.................................
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
ஓவியங்கள்
1.
-----------------------------------------------------------------------------------
-
-
-Artist ArjunKalai
2.
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((00000000000000000000000000000000000000
புகைப்படங்கள்
--ஈஸ்வர் ஒளிப்படக் காதலன்
-----------------------------------------------------------------------------------
2.
-
Realphotography Realphotography
-uma
---------------------------------------------------------------------------------------------------
தமிழ் திரைப்படங்களில் பொங்கல் விழா பாடல்கள்
இந்த பண்டிகை குறித்தான பாடல்களை பார்ப்போம்
பகுதியில் நாம் தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற பொங்கல்
தொகுப்பு: உமா
முதல் பாடல்
மகாநதி - பொங்கலோ பொங்கல்
படம் : மகாநதி (1994)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.S.சித்ரா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.S.சித்ரா
பொங்கலோ பொங்கல்.... பொங்கலோ பொங்கல்....
பொங்கலோ பொங்கல்.... பொங்கலோ பொங்கல்....
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா
செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இந்த பாடலின் வீடியோ பார்ப்போம்‘
_------------------------------------------------------------------------------------------
2 .ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
படம்: பழனி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B. ஸ்ரீனிவாஸ்,
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்...
ஆறோடும்.............
மண்ணிலே தங்கம் உண்டு
மணியும் உண்டு
வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும்
கைகள் உண்டு
வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு
பாசம் கொண்டு பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி
பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இங்கு சேராதோ
தேனாக நாட்டில் எங்கும் பாயாதோ
ஆறோடும்..........
பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா...
பருவம் கொண்ட பெண்ணைப் போலே
நாணம் என்ன சொல்லம்மா,
நாணம் என்ன சொல்லம்மா....
அண்ணன் தம்பி நால்வருண்டு
என்ன வேண்டும் கேளம்மா..
அறுவடை காலம் உந்தன்
திருமண நாளம்மா...
திருமண நாளம்மா
போராடும்......
ஆரோடும்.....
கை கட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்...
தேர் கொண்ட மன்னன் ஏது
பேர் கொண்ட புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி
போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது...
போராடும்.........
ஆறோடும்..........
இந்த பாடலின் வீடியோ பார்ப்போம்‘
3.
படம்:
விவசாயி பாடியவர்: T.M. சௌந்தரராஜன் இயற்றியவர்: A.மருதகாசி இசை: K.V. மகாதேவன் வெளியான வருடம்:1967
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி
இதோ பாடல்
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
வெண் பொங்கல்
********
பாசிப்பருப்பு - 3/4 கப் அரிசி - 3/4 கப் சீரகம் - 1 தேக்கரண்டி. இஞ்சி - 1சிறிய துண்டு (துருவியது) கறி வேப்பிலை - சிறிதளவு. கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு. நுனிக்கிய மிளகுத்தூள் - 3/4தேக்கரண்டி. முந்திரி பருப்பு - 10 மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி. உப்பு - தேவையான அளவு . நெய் - 3தேக்கரண்டி. தண்ணீர் -7 கப் முதலில் பாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் அதில் நன்கு கழுவி சுத்தம் செய்த அரிசியையும் போட்டு உப்புச்சேர்த்து நன்றாக கலந்து மூடியால் மூடி 4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறவும். வேகவைத்த அரிசி பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கும் வரை கிளறவும். இதை ஒரு 5 நிமிடங்கள் வரை வேகவிடவும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும் . சுடச்சுட சூடான வெண் பொங்கல் தயார். கடவுளுக்கு படைத்து வணங்கலாம்.
- Get link
- X
- Other Apps
Comments