அல்வா பட்ஜெட் 2021 கிண்டும் நிகழ்வு
2021' ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துவக்கம்
*அல்வா தயாரிக்கும் பணியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
*இணையமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும் பங்கேற்
பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வா கிண்டும் நிகழ்வு வருடா வருடம் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்னிக்கு நிர்மலா சீதாராமன் அல்வா தயார் செய்து பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கினார். ஆக.. `பட்ஜெட் 2021' அச்சடிக்கும் பணி இன்றுமுதல் ஆரம்பமாகிவிட்ட நிலையில், இந்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் 10 நாள்கள் இனி அரசின் கட்டுப்பாட்டில்தான் இருப்பார்கள்.
அதாவது எந்தவொரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு முன்பாகவும் இனிப்பு பரிமாறுவது இந்தியர்களின் கலாசாரம். அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா கிண்டும் மரபு பின்பற்றப்படுகிறது. பல வகையான இனிப்பு பலகாரங்கள் இருந்தும், எதற்காக அல்வாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியலை
இதைச் சாப்பிட்டுவிட்டுதான் ஊழியர்கள் ஆவணங்கள் தயாரித்து அச்சடிக்கும் வேலையைத் தொடங்குவார்கள். இதன்பின் இதற்கான வேலையில் ஈடுபடும் ஊழியர்கள் வெளியே போக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆம்.. புதுடெல்லியில் இருக்கும் செக்ரெட்ரியேட்டின் `North block'ல்தான் நிதி அமைச்சகம் இருக்கிறது. அந்த அறையில்தான் பட்ஜெட்டுக்கான வேலைகள் நடக்கும். கிட்டத்தட்ட ஒரு பிக்பாஸ் வீடுதான். ஆவணங்கள் அச்சடிக்கும் பணிகள் முடியும் வரை அந்த வீட்டின் பிக்பாஸாக அப்போதைய நிதி அமைச்சர் இருப்பார். பாதுகாப்புக்காக நார்த் பிளாக்கில் ஒரு தனி தொலைபேசி எக்சேஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும். அருகிலிருக்கும் பகுதிகளின் அத்தனை மொபைல்களும் கண்காணிக்கப்படும்; எந்த நெட்வொர்க் ஆக இருந்தாலும். மொபைல் மட்டுமல்ல, உள்ளிருக்கும் நூற்றுக்கணக்கான லேண்ட்லைனும் இந்தக் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது. உள்ளிருந்து வெளியேவோ, வெளியிலிருந்து உள்ளேயோ எதையும் மறைத்து எடுத்துச் சென்றுவிட முடியாது.
வழக்கமாக, நார்த் கேட் வழியாக யார் வேண்டுமென்றாலும் பாஸ் வாங்கி உள்ளே செல்லலாம். பட்ஜெட் காலங்களில் அப்படி யாரும் சென்றுவிட முடியாது. பட்ஜெட் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு பிரத்யேக ஐடி கார்டு வழங்கப் பட்டிருக்கும். உளவுத்துறையின் அதிகாரிகள் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டில் பங்கேற்பார்கள். குறைந்தபட்சம் 3 முறையாவது நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும் உரையை ஒத்திகை பார்ப்பார்.
உள்ளிருக்கும் பல கணினிகளில் மின்னஞ்சலும் இணையமும் துண்டிக்கப்படும். தேவையென்றால் பயன்படுத்த ஒரு சில தொலைபேசிகளும் இணையம் இருக்கும் கணினிகளும் மட்டுமே இருக்கும். அவசரம் என்றால், ஊழியர்கள் உறவினர்களுக்குச் சொல்ல விரும்பும் தகவலை ஒலிப்பதிவு செய்யலாம். ஆனால், அவர்களுடன் பேச முடியாது.
ஒருவேளை உள்ளிருக்கும் ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் மருத்துவர் உள்ளிருப்பார். தேவைப்பட்டால், அருகிலிருக்கும் ராம் மனோஹர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். ஆனால், பார்வையாளர்களுக்கு அங்கேயும் அனுமதி கிடையாது.
Comments